உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 03, 2010

பண்ருட்டியில் அரசு கல்லூரி துவங்க வேண்டும்: பெற்றோர், மாணவர்கள் எதிர்பார்ப்பு

பண்ருட்டி : 

                பண்ருட்டியில் அரசு கல்லூரி துவங்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

                    பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள புதுப்பேட்டை, வீரப்பெருமாநல்லூர், திருத்துறையூர், சேமக்கோட்டை, காடாம்புலியூர், நடுவீரப்பட்டு, பேர்பெரியான்குப்பம், கோழிப்பாக்கம் ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 2,500 மாணவ, மாணவிகள் பிளஸ்2 வகுப்பில் தேர்ச்சி பெற்றதும், உயர் கல்வி தொடர கடலூர், விழுப்புரம் மற்றும் விருத்தாசலத்தில் உள்ள அரசு கல்லூரி அல்லது தனியார் கல்லூரிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. ஆனால் அங்கு இட நெருக்கடி காரணமாக பண்ருட்டி பகுதி மாணவர்கள் அக்கல்லூரிகளில் சேரமுடியாத நிலை உள்ளது. இதுகுறித்து கடந்த 1997ல் அப்போதைய எம்.எல்.ஏ., ராமசாமி சட்டசபையில் பண்ருட் டிக்கு அரசு கல்லூரி துவங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். பின் 2001ல் எம்.எல்.ஏ., வேல்முருகன் கோரிக்கை விடுத்தார். அதற்கு தமிழக அரசு தனியார் கல்லூரி ஏற்படுத்த விரும்பினால் அனுமதி அளிப்பதாக பதிலளித்தது.
                           இந்நிலையில் எம். எல்.ஏ., வேல்முருகன் கோரிக்கையின்பேரில் கடலூரில் நடந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி பண்ருட்டியில் பொறியியல் கல்லூரி துவங்க உத்திரவிட்டார். அதன்படி திருச்சி அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் பொறியியல் கல்லூரி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பொறியியல் கல்லூரியில் தமிழக அளவில் தேர்வில் போட்டியிட்டு கவுன்சிலிங் முறையில் தேர்வு செய்யும் மாணவர் கள் மட்டுமே பயன்பெறுகின்றனர்.ஆனால் பண்ருட்டி பகுதியில் படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து படிக்க முடியாமல் பள்ளி படிப்புடன் கல்வி முடிந்து வருகிறது. இதற்கு தமிழக அரசு தற்போது பண்ருட்டியில் இயங்கும் பொறியியல் கல் லூரியில் கலை மற்றும் அறிவியியல் கல்லூரி துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் பண்ருட்டி மட்டுமன்றி மாவட்டத்தின் பிற பகுதி மாணவர்களும் பயன்பெற முடியும்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior