உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 03, 2010

மெட்ரிக் பள்ளிகள் கட்டுப்படுவதில்லை: மாவட்ட ஊராட்சி தலைவர் குற்றச்சாட்டு

கடலூர் : 

                 மெட்ரிக் பள்ளிகள் மாவட்ட நிர் வாகத்திற்கு கட்டுபடாமல் தனி ராஜ் ஜியம் நடத்தி வருவதாக மாவட்ட ஊராட்சி தலைவர் குற்றம் சாட்டினார். கடலூர் மாவட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில் திட்டக்குழுக் கூட்டம் நடந்தது. மாவட்ட ஊராட்சி தலைவர் சிலம்புச்செல்வி தலைமை தாங்கினார். திட்டக்குழு அலுவலர் (பொறுப்பு) ராஜசேகரன் முன்னிலை வகித்தார். உறுப்பினர்கள், பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண் டனர்.


கூட்டத்தில் கவுன்சிலர் சண்முகம் பேசுகையில்,

                            10 வது ஐந்தாண்டு திட்டத்தில் கடலூரில் எந்த வளர்ச்சியும் இல்லை என்றார். திட்டக்குழு கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்காததால் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணமுடியவில்லை. புவனகிரி அரசு பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை என கவுன்சிலர் மதியழகன் கூறினார். இதற்கு பதிலளித்த மாவட்ட ஊராட்சித் தலைவி சிலம்புச்செல்வி, பெரும்பாலான பள்ளிகளில் குடி நீர் வசதி இல்லை. முதலில் அதை செய்து தர வேண்டும். மாவட்டத் தின் கட்டுபாடின்றி மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் மட்டும் தனிராஜ்ஜியம் நடத்தி வருகின்றன. எதற்காக சி.இ.ஓ., டி.இ.ஓ., உள்ளனர். மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் குடி நீர் வசதி, கட்டட வசதி, போது மான இட வசதி உள்ளதா என மெட்ரிக்குலேஷன் ஆய்வாளர் ஆய்வு செய்து, மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றார்.

சேத்தியாதோப்பு பேரூராட்சி கவுன்சிலர் கணேசன்: 

                     நகராட்சி பகுதிகளில் நகராட்சி பள்ளிகள் உள்ளன. பேரூராட்சி பகுதியில் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் மட்டுமே உள் ளன. இப்பள்ளிகளுக்கான வளர்ச்சி பணிகளை செய்வது ஊராட்சியா, பேரூராட்சியா என தெரியவில்லை. பேரூராட்சிகளில் உள்ள பள்ளிகளை பேரூராட்சி பள்ளிகள் என அறிவித்தால் பேரூராட்சி சார்பில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியும் என்றார்.


கவுன்சிலர் ராஜா: 

                   அகல ரயில் பாதை பணி முடிந்து தற்போது சரக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது. விரைவில் பயணிகள் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்நிலையில் சுரங்கப் பாதை திட்ட பணியை பயணிகள் ரயில் இயக்குவதற்குள் துவக்க வேண்டும். ரயில் இயக்கிய பிறகு துவங்கினால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாக நேரிடும் என்றார்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior