கடலூர்:
தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் (சி.ஐ.டி.யூ.) கடலூரில் செவ்வாய்க்கிழமை தர்னா போராட்டம் நடத்தினர். அரசு போக்குவரத்துக் கழக கடலூர் மண்டலத்தில், 240 நாள்கள் பணிபுரிந்தால் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று விதி இருந்தும், பல ஆண்டுகளாக ஊழியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படாமல் இருப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இப் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. போக்குவரத்து ஊழியர் சங்கத் தலைவர் எம்.முத்துக்குமரன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினர் செ.தனசேகரன், சி.ஐ.டி.யூ. மாநிலச் செயலர்கள் எம்.சந்திரன், ஜி.சுகுமாறன், சி.ஐ.டி.யூ. மாவட்டத் தலைவர் பி.கருப்பையன், சம்மோள துணைத் தலைவர் ஜி.பாஸ்கரன், அனைத்து குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலர் மு.மருதவாணன், ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் வாலண்டீனா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலர் மாதவன், கடலூர் நகரச் செயலர் சுப்புராயன் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் கண்டன உரை நிகழ்த்தினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக