உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 03, 2010

கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க ஊனமுற்றவர்களுக்கு நேரடித் தேர்வு

கடலூர் : 

           குறைந்த வட்டியில் ஊனமுற்றவர்களுக்கு கடன் வழங்குவதற்காக மத்திய கூட்டுறவு வங்கிகளில் நேரடித் தேர்வுகள் நடைபெற உள்ளது.

இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்தி குறிப்பு: 
                            
                     தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் வளர்ச்சி கழகம் திட்டத்தின் கீழ் ஊனமுற்றவர்களுக்கு கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்க நேரடித் தேர்வுகள் நடைபெற உள்ளது.  வங்கி கடன் பெறுவதற்கு, மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், 18 முதல் 55 வயதிற்கு உட்பட்டவராகவும், 40 சதவீதம் ஊனமுடையவராகவும் இருக்க வேண்டும். கிராமத்தில் உள்ளவர்களுக்கு ஆண்டு வருமானம் ஒரு லட்சமாகவும், நகரத்தில் உள்ளவர்களுக்கு இரண்டு லட்சமாகவும் இருக்க வேண்டும்.ரூபாய் 25 ஆயிரம் வரை கடன் கேட்பவர்கள் அரசில் பணிபுரியும் நபரிடமும், 25 முதல் 50 ஆயிரம் வரை அரசு பணியில் உள்ள இருவரிடமும் ஜாமீன் பெற வேண்டும். 50 ஆயிரத்திற்கு மேல் கடன் கேட்பவர்கள் இரு மடங்கு மதிப்புள்ள சொத்து (வீடு) பத்திரங்களை கடனுக்கான ஆதாரமாக ஈடு கட்ட வேண்டும். தகுதியுள்ள ஊனமுற்றவர்கள் ஊனமுற்ற அடையாள அட்டை நகல், வருமான சான்று, ரேஷன் கார்டு நகல் மற்றும் விலை புள்ளியுடன் கடலூர், குறிஞ்சிப்பாடி மற்றும் பண்ருட்டி வட்டாரங்களைச் சேர்ந்தவர்கள் நேரடித் தேர்விற்கு வரும் 4ம் தேதி காலை 10 மணிக்கு கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு தலைமை வங்கிக்கு வரவேண்டும்.
விருத்தாசலம், திட்டக்குடி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மத்திய கூட்டுறவு வங்கி விருத்தாசலம் கிளை அலுவலகத்திற்கு 9ம் தேதி காலை 10 மணிக்கும், காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிதம்பரம் கிளை அலுவலகத்திற்கு 12ம் தேதி காலை 10 மணிக்கு நேரடித் தேர்வுக்கு வரவேண்டும்.மேலும் விவரங்களுக்கு கடலூர் மாவட்ட மறுவாழ்வு அலுவலகம் அல்லது கடலூர் மாவட்ட கூட்டுறவு அலுவுலகத்தை நேரில் அணுகவும்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior