உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 01, 2010

ஏப்ரல் 1-ம் தேதி எப்படி முட்டாள் தினம் ஆனது?

              ஏப்ரல்-1 முட்டாள் தினம். இந்த தினம் நாளை வருகிறது. ஏப்ரல் 1-ந்தேதி முட்டாள் தினம் எப்படி வந்தது இதற்கு ஒரு பெரிய வரலாறே இருக்கிறது. பண்டை காலத்தில் ரோமானியர்களும், இந்துக்களும் ஏப்ரல்-1 மற்றும் அதை ஒட்டிய தேதிகளை புத்தாண்டாக கொண்டாடினார்கள். அப்போது ஐரோப்பிய நாடுகளில் நாட்களை குறிப்பிட ஜுலியன் காலண்டர் என்ற பழங்கால காலண்டரை பயன்படுத்தி வந்தனர். அதிலும் புத்தாண்டு தினம் ஏப்ரல் 1-ந் தேதியாக இருந்தது. 1582-ம் ஆண்டு போப் ஆண்டவராக இருந்த 13-ம் கிரிகோரி ஜார்ஜியின் காலண்டர் என்ற புதிய காலண்டரை அறிமுகப்படுத்தினார். அதில் புத்தாண்டு ஜனவரி 1-ந்தேதி பிறப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இனி மக்கள் இந்த காலண்டரை தான் பின்பற்ற வேண்டும் என்றும் போப் ஆண்டவர் உத்தரவிட்டார். இதை பிரான்ஸ் நாடு உடனே ஏற்றுக்கொண்டது. பிரான்சு மன்னர் அந்த நாட்டு மக்களை புதிய காலண்டரை பின்பற்றும்படி கேட்டுக் கொண்டார். அதை ஏற்று அனைவரும் ஜனவரி 1-ந்தேதியை புத்தாண்டு தினமாக கொண்டாடினார்கள்.வேறு சில நாடுகளும் இதை ஏற்றுக் கொண்டன.  இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் புதிய காலண்டரை பின் பற்றவில்லை. சில பகுதி மக்களுக்கு காலண்டர் மாற்றப்பட்டு இருக்கும் தகவலே சென்றடைய வில்லை. எனவே அவர்கள் முன்பு போல ஏப்ரல் 1-ந்தேதியை புத்தாண்டாக கொண்டாடி கொண்டு இருந்தனர். விவரம் தெரியாமல் இவர்கள் இன்னும் ஏப்ரல் 1-ந்தேதியை புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள் என்று புதிய காலண்டர் முறையை பின் பற்றியவர்கள் கருதினார்கள். எனவே எப்ரல் 1-ந்தேதி புத்தாண்டு கொண்டாடியவர்களை அவர்கள் முட்டாள்களாக கருதினார்கள். கேலி செய்து ஏராளமாக பேசினார்கள். கால போக்கில் ஏப்ரல் 1-ந்தேதி என்றாளே முட்டாள்கள் தினம் என்று ஆனது. அன்றைய தினத்தை அடுத்தவரை ஏமாற்றும் தினமாகவும் மாற்றி கொண்டனர். ஏப்ரல் 1-ந்தேதி முட்டாள் தினம் ஆனது.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior