உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 01, 2010

கோவிலாம்பூண்டி ரயில்வே கிராசிங் கேட் அமைக்காததால் விபத்து அபாயம்

கிள்ளை : 

             சிதம்பரம் அருகே கோவிலாம்பூண்டியில், அனுவம்பட்டு  ரயில்வே கிராசிங் பகுதியில் கேட் அமைக்காததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
 
             மயிலாடுதுறை- விழுப்புரம் ரயில்வே பாதையில் சிதம்பரம் அடுத்த கோவிலாம்பூண்டி- அனுவம்பட்டு சாலையில் உள்ள ஆளில்லா ரயில்வே கிராசிங் உள்ளது. இந்த பாதையை கடந்து கோவிலாம்பூண்டி, மீதிக்குடி உள்ளிட்ட சுற்றுப்பகுதியினர் கிள்ளை, தில்லைவிடங்கன், சி.முட்லூர் உள் ளிட்ட சுற்றுப் பகுதிக்கு செல்லும் குறுக்கு வழியாக உள்ளதால் அதிகளவில் உயிர்சேதம் ஏற்பட்டு வந்தது.
 
              இந்நிலையில் மயிலாடுதுறை-விழுப்புரம் ரயில்பாதையை அகல பாதையாக மாற்றும் பணி துவங்கியது. அதனை அறிந்து இப்பகுதி மக்கள் கோவிலாம்பூண்டி- அனுவம்பட்டு சாலையில் உள்ள ஆளில்லா ரயில்வே கிராசிங்கில் கேட் அமைத்து கேட் கீப்பர் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆனால் கேட் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
 
                    தற்போது சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் சி.முட்லூர், பி.முட்லூர் வழியாக  பரங்கிப்பேட்டைக்கு சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் போக்குவரத்து அதிகரித்துள்ளது. மேலும் குடியிருப்புகள் அதிகரித்துள்ளது.  இந்த சாலையை கடந்து மினி பஸ் சென்று வருகிறது. எனவே இப்பகுதியில் விபத்து நடக்காமல்  முன்னெச்சரிக்கையாக தடுக்க கேட் அமைத்து கேட் கீப்பரை நியமிக்க ரயில்வே நிர்வாகத்தை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior