உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 01, 2010

பண்ருட்டி நகர மன்றத்தில் தி.மு.க-அ.தி.மு.க., வாக்குவாதம் : போலீசில் போட்டி புகாரால் பரபரப்பு

பண்ருட்டி : 

                பண்ருட்டி நகர மன்றக் கூட்டத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., கவுன்சிலர்களுக்கிடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
 
               பண்ருட்டி நகர மன்றத்தின் மாதாந்திர கூட்டம் நேற்று நடந் தது. தி.மு.க., சேர்மன் பச்சையப்பன் தலைமை தாங்கினார்.தீர்மானம் படிக்க துவங்கியதும், 'கடந்த நான்கு ஆண்டாக அ.தி.மு.க., கவுன்சிலர்களின் வார்டுகளில் அடிப்படை வசதிகள்  செய்து தராததை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக  அ.தி. மு.க., கவுன்சிலர் பன்னீர்செல்வம் கூறியதை அடுத்து, அ.தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்தனர். சற்று நேரத்தில் மீண்டும் அவைக்கு வந்தனர்.
 
                   அப்போது அ.தி.மு.க., பன்னீர்செல்வம், கடந்த கூட்டத்தில் அமர்வுபடி பெற்றதை தி.மு.க., கவுன்சிலர் ராமகிருஷ்ணன் கவர் வாங்கியதாக கூறியதை கண்டிக் கிறோம். இதற்கு சேர்மன் பதில் கூற வேண்டும் என்றார்.  கூட் டத்திற்கு வராமல் அமர்வு படி பெற்றால் எப்படி... நானும் கூட்டத்திற்கு வராமல் அமர்வு படி வாங்கி கொள்ளலாமா... என தி.மு.க., ராமகிருஷ்ணன் பேசினார். குறித்த நேரத்தில் கூட்டம் ஆரம்பித்தால் நாங்கள் கலந்து கொண்டிருப்போம். சேர்மனுக்கும், உங்களுக்கும் கவர் பிரிப்பதில் பிரச்னை இருந்ததால் எங் கள் மீது வீணாக பழி சுமத்துகிறீர்கள். இதற்கு சேர்மன் பதில் கூற வேண்டும் என்று அ.தி. மு.க., கவுன்சிலர்கள் கூறினர்.
 
                 இதற்கு பதில் அளிக்காமல் சேர்மன், தீர்மானத்தை படிக்க கூறினார். ஆத்திரமடைந்த அ.தி. மு.க., சேகர்,'எங்கள் கேள்விக்கு பதில் கூறாமல் தீர்மானம் படிக் கக்கூடாது என சேர்மன் அருகே சென்று வாக்குவாதம் செய்தார். அவரிடம் தி.மு.க.,வினர் வாக்குவாதம் செய்தனர். அப்போது  அ.தி.மு.க., நகர செயலர் ரவிச் சந்திரன் ஆவேசமாக சத்தம் போட்டுக் கொண்டு கவுன்சில் கூட்டத்திற்கு வந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சேர்மன், 'தகராறு செய்யவா வந்தீர்கள்... வெளியில் பார்த்துக்கலாமா... என ஆவேசமாக சத்தம் போட' , பதிலுக்கு ரவிச்சந்திரன் 'வெளியே வா பார்த்துக்கலாம் என சத்தம் போட்டார்'. சேர்மனை, துணை சேர்மன் மற்றும் தி.மு.க.,வினர் சமாதானம் செய்தனர். இதனையடுத்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷம் போட்டு கலைந்து சென்றனர். இதனால் தீர்மானம் படிக்காமலேயே கூட்டம் முடிந்தது.
 
                இந்நிலையில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள்  பன்னீர்செல்வம், கமலக்கண்ணன், சரஸ்வதி, சேகர் மற்றும் அ.தி.மு.க., நகர செயலர் ரவிச்சந்திரன், ராமலிங்கம், மேகவண்ணன், கோவிந்தன் ஆகியோர் தன்னை கொலை செய்யும் நோக்கில் தாக்கியதாக சேர்மன் பச்சையப்பன் போலீசில் புகார் செய்துவிட்டு அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். அதேபோல், சேர்மன் பச்சையப்பன், தி.மு.க., கவுன்சிலர்கள் கிருஷ்ணமூர்த்தி, பழனி, வைத் தியலிங்கம், தட்சணாமூர்த்தி, ரகூப், ராமகிருஷ்ணன் ஆகியோர் கூட்டம் முடித்துவிட்டு வெளியே வந்த என்னை வழிமறித்து தலைமுடியை பிடித்து இறுக்கி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக அ.தி.மு.க., கவுன்சிலர் ரமாதேவி  போலீசில் புகார் செய்தார்.
 
                       சேர்மன் கொடுத்த புகாரின் பேரில் அ.தி.மு.க., கவுன்சிலர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 8 பேர் மீது 147, 294(பி), 323, 353, 506(2), 307 ஆகிய பிரிவுகளிலும், அ.தி.மு.க., கவுன்சிலர் ரமாதேவி கொடுத்த புகாரின் பேரில் சேர்மன் பச்சையப்பன் மற்றும் 6 தி.மு.க.கவுன்சிலர்கள் மீது  294, 506(1), பெண்கள் வன்கொடுமை பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior