உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 01, 2010

பச்சை வேர்க்கடலை குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள் : கலெக்டர் சீத்தாராமன் 'அட்வைஸ்'


கடலூர் : 
 
               கோடை காலம் துவங்கியுள்ளதால் குழந்தைகளுக்கு பச்சை வேர்க் கடலை அதிகம் கொடுக்க வேண்டாம் என கலெக் டர் அறிவுறுத்தியுள்ளார்.

                  கடலூர் சிப்காட் பகுதி மற்றும் அருகாமையில் அமைந்துள்ள கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்த சிறப்பு தோல் சிகிச்சை முகாம் கண்ணாரப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது. சிப்காட் தொழிற்சாலை சங்கம், சாசன் கெமிக் கல்ஸ் அண்ட் ட்ரக்ஸ் நிறுவனத்தால் ஒருங்கிணைந்து நடத்திய முகாமில் பிரபல தோல் நோய் நல சிறப்பு மருத்துவ நிபுனர்களான ஜானகி, விஜய் கார்த்திக், இருதயராஜன் அடங்கிய குழுவினர் மற் றும் இணை இயக்குனர் ஜெயவீரக்குமார், பாஸ்கரன் உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்ற 160 பேரை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர்.
 
                    முகாமை கலெக்டர் சீத்தாராமன் ஆய்வு செய்தபோது, 'ஆலா' கரைசலை குடித்துவிட்டதாக மூன்று வயது குழந்தையை  அழைத்து வந்தனர். உடன் அந்த குழந்தையை ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கலெக்டர் அனுப்பி வைத்தார். பின்னர் வீடுகளில் ரசாயன பொருட்களை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்குமாறு அறிவுறுத்தினார். பின்னர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் வருகை பதிவேட்டை ஆய்வு செய்ததில், பச்சை மணிலாவை சாப்பிட்டு பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிக அளவில் சிகிச்சை பெற்றுள்ளனர். தற்போது மாவட்டத்தில் மணிலா அறுவடை சீசன் துவங்கியுள்ளது. கோடை வெயிலில் உடலுக்கு மிகுந்த உஷ்ணம் மற்றும் அஜீரண கோளாறு உண்டாக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே, குழந்தைகளுக்கு பச்சை வேர்க்கடலை அதிகமாக கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தினார்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior