உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 01, 2010

கடத்தப்பட்ட தொழிலாளியின் மகன் மீட்பு : செங்கல் சூளை உரிமையாளர்கள் இருவர் கைது

ஸ்ரீமுஷ்ணம் : 

                ஸ்ரீமுஷ்ணம் அருகே கல் அறுக்கும் தொழிலாளியின் மகனை கடத்திய செங்கல் சூளை உரிமையா ளர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். கடத்தப்பட்ட சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
 
                 ஸ்ரீமுஷ்ணம் அடுத்த மேல்புளியங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (37). கல் அறுக்கும் தொழிலாளி. திட்டக்குடி அடுத்த கொசப்பள்ளம் செங்கல் சூளை உரிமையாளர்கள் ஜெயராமன், சுப்ரமணியம். ஜெயராமனிடம், ராமமூர்த்தி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்  27 ஆயிரம் ரூபாய் முன்பணம் பெற்று சில நாட்கள் வேலைக்கு சென்றார். பின்னர் வேலைக்கு செல்லவில்லை. ஜெயராமன், சுப்ரமணியன் இருவரும் ராமமூர்த்தியை சந்தித்து வேலை முடித்து கொடுக்குமாறு கூறினர்.  ராமமூர்த்தி காலம் கடத்தி வந்தார்.  ஆத்திரமடைந்த இருவரும், நேற்று முன்தினம் இரவு  மேல்புளியங்குடி பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த ராமமூர்த்தியின் மகன் வீரா(12)வை கடத்தி சென்றனர்.
 
               இதுகுறித்து ராமமூர்த்தி ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்தார்.  இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் கொசப்பள்ளம் கிராமத்திற்கு சென்று ஜெயராமன், சுப்ரமணியன் ஆகியோரை பிடித்து  விசாரித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுவன் வீராவை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சிறுவனை கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட ஜெயராமன் மற்றும்  சுப்ரமணியனை கோர்ட் டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior