உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 01, 2010

காப்பீட்டு திட்டத்தில் 1,696 பேருக்கு சிகிச்சை : இணை இயக்குனர் கிருஷ்ணராஜ் தகவல்

கடலூர் : 

                    தமிழகத்தில் முதல் முறையாக கடலூர் மாவட்டத்தில் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள நோயாளிகளை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் திட்டம் நேற்று துவங் கியது.
இது குறித்து மாவட்ட சுகாதார துணை இயக்குனர் (பொறுப்பு) கிருஷ்ணராஜ் கூறியதாவது:

                தமிழகத்தில் முதல் முறையாக கடலூர் மாவட்டத்தில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள நோயாளிகளை அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் நேரடியாக அழைத்துச் செல்லும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் நடுவீரப்பட்டு, வடலூர், மருதூர், ஒறையூர், புதுச்சத்திரம், கம்மாபுரம், கிருஷ்ணபுரம், சிவக்கம், ஒரத்தூர், மங்களம் பேட்டை, நல்லூர், குமராட்சி, ஆயங்குடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் இத் திட்டம் துவக்கப்பட் டுள் ளது. இதன் மூலம் நேற்று மட்டும் 221 பயனாளிகள் பயனடைந்தனர். பரிசோதனைக்கு பின் 15 நாட்களுக்கு ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை ஆம்புலன்ஸ் திட்டம் நடைமுறைபடுத்தப்படும். மாவட்டத்தில் மருத்துவ காப்பீட்டு திட்டத் தில் இதுவரை 5.81 கோடி ரூபாயில் 1696 பேர் பயனடைந்துள்ளனர். வரும் 4ம் தேதி ஸ்ரீமுஷ்ணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 300 கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணியும் விழா நடக்கிறது. இதில் அமைச்சர் பன்னீர்செல்வம், கலெக்டர் சீத்தாராமன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இவ்வாறு சுகாதார துணை இயக்குனர் கூறினார்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior