உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 01, 2010

பி.டி.ஓ.,விடம் தகராறு: காங்., கவுன்சிலர் கைது

பண்ருட்டி : 

              பண்ருட்டி துணை பி.டி.ஓ.,வை வேலை செய்ய விடாமல் தடுத்து தகராறு செய்த காங்., கவுன்சிலரை போலீசார் கைது செய்தனர்.
 
                பண்ருட்டி அடுத்த கீழ் மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கம்சலிங்கம். காங்., கட்சியை சேர்ந்த இவர் ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் மாலை பண் ருட்டி பி.டி.ஓ., அலுவலகத்தில் பணியில் இருந்த துணை பி.டி.ஓ., ராமமூர்த்தியிடம், தங்கள் பகுதியில் உள்ள வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகளின் அடையாள அட்டையை  தன்னிடம் தருமாறு கேட்டார். அதற்கு ராமமூர்த்தி மறுத்துவிட்டார்.
 
                ஆத்திரமடைந்த கம்சலிங்கம், ராமமூர்த்தியை திட்டி அவரை பணி செய்ய விடாமல் தகராறு செய்தார். இதனை தடுக்க வந்த பி.டி.ஓ., சிவனையும் திட்டினார். இதுகுறித்து ராமமூர்த்தி பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் துணை பி.டி.ஓ., ராமமூர்த்தியிடம் காங்., கவுன்சிலர் தகராறு செய்ததைக் கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பி.டி.ஓ., அலுவலக ஊழியர்கள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஊரக வளர்ச்சி சங்க மாநில துணை தலைவர் ஞானக்கண் செல் லப்பா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆதவன், மாவட்ட தலைவர் ஆனந்ததுரை முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் காசிநாதன், மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியன், பி.டி.ஓ.க்கள் கல்யாண்குமார், சிவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஊழியர்களின் போராட் டத்தை தொடர்ந்து, நேற்று மதியம் காங்., கவுன்சிலர் கம்சலிங்கத்தை போலீசார் கைது செய்து கோட்டில் ஆஜர்படுத்தினர்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior