சிதம்பரம் :
மாணவர்கள் பயன் பெறும் வகையில் அறிவியல் கருவிகள், நாளிதழ்கள் பள்ளியில் வாங்குவதற்கு உத்தரவிட்ட தமிழக அரசுக்கு தேசிய இடை நிலைக் கல்வித் திட்டம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
தேசிய இடை நிலைக் கல்வித் திட்டம் சார்பில் பள்ளி நிர்வாக மேம்பாட்டுக்குழு திட்டமிடல் கூட்டம் சிதம்பரம் அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் நடந்தது. சி.முட் லூர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார்.
சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜன் திட்டம் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் தமிழக அரசு ஒவ்வொரு பள்ளிக்கும் 40 ஆயிரம் ரூபாய் வழங்கி 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் பயன் பெறும் வகையில் அறிவியல் கருவிகள், நாளிதழ், வார மற்றும் மாத இதழ்கள் வாங்க உத்தரவிட்ட அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர்கள் கலைமணி, காவேரி, ராஜகுமாரி, ராணி, அம்பிகாபதி, தமிழ்ச்செல்வன், பெற் றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மற்றும் 12 பள்ளிகளை சேர்ந்த உதவி தலைமை ஆசிரியர்கள் பேசினர்.