உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 01, 2010

500 ரூபாய் கள்ளநோட்டு கும்பல்: போலீஸ் எச்சரிக்கை

நெய்வேலி:

                 கடலூர் மாவட்டத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடும் மர்ம கும்பல் ஊடுருவி இருப்பதாகவும், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் போலீஸôர் எச்சரித்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் படித்தவர்களின் எண்ணிக்கையும் சராசரிக்கும் சற்று குறைவாகவே உள்ளது. இதைச் சாதகமாக பயன்படுத்தி கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடும் கும்பல் கடலூர் மாவட்டத்தில் ஊடுருவி இருப்பதாக தெரியவந்துள்ளது. நெய்வேலி, வடலூர், குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், பண்ருட்டி ஆகிய இடங்களை தேர்வுசெய்துள்ளதும் தெரியவந்துள்ளது. கள்ள நோட்டை எளிதாக புழக்கத்தில் விட ஏதுவாக வாரச் சந்தை, சம்பள நாள் சந்தை ஆகிய பகுதிகளை கள்ளநோட்டு கும்பல் தேர்வு செய்திருப்பதும் தெரிவந்துள்ளது.

                     இதுகுறித்து தகவலறிந்த டெல்டா பிரிவு போலீசாரும் கள்ளநோட்டு கும்பலைச் சேர்ந்த ஒருவரைப் பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் இக்கும்பலைச் சேர்ந்த மேலும் சிலரைப் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். எனவே 500 ரூபாய் நோட்டுக்களை வாங்குபவர்கள் அந்த நோட்டுக்களை சரிபார்த்து வாங்குமாறு போலீசாரும் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior