உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 12, 2010

மே 14-ல் பிளஸ் 2 முடிவு?


 
                    பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 14)  அல்லது சனிக்கிழமை (மே 15) வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த சுமார் 7.5 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். விடைத்தாள் திருத்தும் பணி முழுவதும் முடிந்து, பாட வாரியான மதிப்பெண்கள் தயாரிக்கும் பணியும் முற்றிலும் முடிந்துவிட்டது. இப்போது சிடி வடிவில் தேர்வு முடிவு விவரம் தயாரித்து இறுதி செய்யப்பட்டு விட்டது.இதற்கிடையில், பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை வெளியாகும் என்று தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 
 
மதிப்பெண் நகல் மூலம் விண்ணப்பிக்கலாம்...: 
 
                 தேர்வு முடிவு வெளியாகி 10 நாள்களுக்குப் பிறகு தான் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுவது வழக்கம். எனவே கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், பள்ளிக்கல்வி இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பெறப்படும் மதிப்பெண் நகலை வைத்து விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை தெரிவிக்கிறது.இந்த ஆண்டில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான முக்கியப் பாடமான கணிதம் மற்றும் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான உயிரியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் கடினமாக இருந்தன என்று மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.எனவே இந்த முறை கணிதம் மற்றும் உயிரியல் பாடத்தில்  மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு அதிகமான மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுகூட்டல், மறுமதிப்பீடு: பிளஸ் 2 பொதுத் தேர்வைத் தொடர்ந்து மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கும் மாணவர்கள் கூட பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீடு, மறுகூட்டலில் மதிப்பெண் மாறும் மாணவர்களின் விவரத்தைச் சிடியாக அண்ணா பல்கலைக்கழகத்துக்கு, தேர்வுத்துறை வழங்கிவிடும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior