உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 12, 2010

நெய்வேலி ஆர்ச்கேட்டிலிருந்து பஸ் விட கோரிக்கை



நெய்வேலி:

               நெய்வேலி ஆர்ச்கேட்டிலிருந்து நெய்வேலி நகரியத்துக்கு புதிய பஸ்ûஸ இயக்க என்எல்சி தொழிற்சங்கங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் என்எல்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. நெய்வேலி ஆர்ச்கேட் எதிரே முந்திரிக்காடாக காட்சியளித்த விளை நிலங்கள் தற்போது வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு, அங்கு அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்துள்ளன. இதனால் அப்பகுதியில் மக்கள் பெருக்கம் வெகுவாக உயர்ந்துள்ளது. இங்கு வாழும் மக்கள் 6 கி.மீ. தொலைவுள்ள நெய்வேலி நகரியத்துக்கு வர மிகுந்த சிரமமடைந்து வந்தனர். வெளியூர்களிலிருந்து வரும் அரசு பஸ்களை மட்டுமே இவர்கள் நம்பியிருக்க வேண்டிய சூழல் உருவானது. மேலும் இரவு நேரங்களில் வெளியூர் சென்றுவரும் பயணிகள், இரவு நேர பஸ் இல்லாததால், அதிக கட்டணம் கொடுத்து ஆட்டோக்களில் வர நேரிடுகிறது. மேலும் விழுப்புரம், பண்ருட்டி, வடலூர், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நெய்வேலிக்கு பணிக்கு வரும் ஊழியர்களும், பள்ளி கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவர்களும் பஸ் கிடைக்காமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர் இதையடுóத்து நெய்வேலியில் உள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் பயோனியர் தொண்டு நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில், நெய்வேலி ஆர்ச்கேட்டிலிருந்து நெய்வேலி நகருக்கு என்எல்சி பஸ்களை இயக்கவேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து என்எல்சி பஸ் பிரிவு அலுவலர்கள் கூறியது 

                எங்களது பஸ் பிரிவு சேவை மனப்பான்மையுடன் இயக்கப்பட்டு வருகிறது. வர்த்தக நோக்கில் கணக்கிட்டால் எங்களது பஸ்ஸþக்கு நிரப்பப்படும் எரிபொருளுக்கு ஆகும் செலவுகூட எங்களுக்கு திரும்ப கிடைப்பதில்லை. இருப்பினும் பொதுமக்கள் நலன்கருதி ஆர்ச்கேட்டிலிருந்து பஸ் இயக்க ஒப்புதல் கேட்டு நிர்வாகத்துக்கு கோப்பு அனுப்பியுள்ளோம். நிர்வாகம் அனுமதி அளிக்கும் பட்சத்தில் பஸ் இயக்குவோம் என்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior