சிதம்பரம் :
சுற்றுச்சூழலை வலியுறுத்தி சிதம்பரம் போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் இந்தியா முழுவதும் விழிப்புணர்வு சைக்கிள் பிரசார பயணத்தை இன்று துவக்குகின்றனர்.
இயற்கை வளங்களைப் காப்போம். ஓசோன் பாதிப்பை தவிர்ப்போம். தட்ப வெப்ப நிலையைச் சீரமைப்போம். கரும்புகை தவிர்ப்போம். உலகை பேரழிவில் இருந்து மீட்போம். உடல் ஆரோக்கியத்தை காப்போம் என்பதை வலியுறுத்தி சிதம்பரம் போலீஸ் நண்பர்கள் குழு கமாண்டர் மகேந்திரன் தலைமையில் செந்தில்குமார், அன்புச்செல் வன், வினோத் ராஜ், ராஜ செல்வம் ஆகியோர் சிதம்பரத்திலிருந்து சைக்கிள் பிரசார பயணத்தை துவக்குகின்றனர். இந்தியா முழுவதும் செல்லும் இந்த பயணத்தை எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் தலைமையில் விஜிலென்ஸ் (ஆவின்) ஐ.ஜி., பிரதீப் வி பிலிப் இன்று காலை 7 மணிக்கு துவக்கி வைக்கிறார்.
கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தராஞ்சல், உத்தர பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், சிக்கிம், அசாம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து மணிப்பூர், மிசோராம், திரிபுரா, மேகாலயா, ஒரிசா, புதுச்சேரி வழியாக மீண்டும் சிதம்பரம் வருகின்றனர். மொத்தம் 150 நாட்கள் பயணம் மேற்கொள்கின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக