உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 12, 2010

விவசாயிகளுக்கு இம்மாத இறுதிக்குள் மழைக் காப்பீடு திட்ட இழப்பீடு

கடலூர்:

                   கடலூர் மாவட்டத்தில் 2009-ம் ஆண்டு நெல் பயிரிட்டு பாதிக்கப்பட்ட  விவசாயிகளுக்கு, வர்ஷ பீமா மழைக்காப்பீடு திட்டத்தில் இழப்பீட்டுத் தொகை இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்தார்.

ஆட்சியர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:   

             வர்ஷ பீமா மழைக் காப்பீடு திட்டத்தை, 2009-ம் ஆண்டு மத்திய அரசு நிறுவனமான தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனம் அமல்படுத்தியது. அந்த ஆண்டு பெய்த குறைந்த அளவு மழை, கூடுதல் மழை அளவு, வறண்ட தினங்கள் ஆகியவற்றைக் கணக்கிட்டு இழப்பீடு நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி 2009 ஆகஸ்ட் 15 முதல் டிசம்பர் 31 வரை மழை குறைந்த தினங்களைக் கணக்கிட்டும், செப்டம்பர் 15 முதல் நவம்பர் 15 வரை தொடர்ச்சியாக வறண்ட தினங்களைக் கணக்கிட்டும், செப்டம்பர் 15 முதல் ஜனவரி 31 வரை கூடுதல் மழை பெய்த தினங்களைக் கணக்கிட்டும் வட்டார வாரியாக இழப்பீடு கணக்கிடப்பட்டு உள்ளது.

                அதன்படி கடலூர் மாவட்டத்தில் கீரப்பாளையம் வட்டாரத்துக்கு ஏக்கருக்கு ரூ.606, பரங்கிப்பேட்டைக்கு ரூ.563, நல்லூருக்கு ரூ.1593, மங்களூருக்கு ரூ.493, குறிஞ்சிப்பாடிக்கு ரூ.563, மேல்புவனகிரிக்கு ரூ.606, குமராட்சிக்கு ரூ.623, காட்டுமன்னார்கோயிலுக்கு ரூ.367, கம்மாபுரத்துக்கு ரூ.211 இழப்பீடாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏனைய வட்டாரங்களுக்கு இத்திட்டத்தில் இழப்பீடு அறிவிக்கப்படவில்லை. இம்மாத இறுதிக்குள் தகுதியுடைய அனைத்து விவசாயிகளுக்கும், காப்பீட்டு நிறுவனம் மூலம் இழப்பீட்டுத் தொகை வரைவேலையாக வழங்கப்படும் என்று செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior