76 கோடி வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கும் பணி 2011 டிசம்பருக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தின் வைரவிழா கொண்டாட்டத்தைக் குறிக்கும் வகையில் புகைப்பட கண்காட்சி ஒன்றை நவீன் சாவ்லா பெங்களூரில் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா
58 கோடி வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுவிட்டன என்றார். வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபடுவது தொடர்பாக நிறைய புகார்கள் வருவதை ஒப்புக்கொண்ட சாவ்லா, நகர்ப்புற பகுதிகளில் வாக்காளர்களின் அக்கறையின்மையை தேர்தல் அதிகாரிகள் எதிர்கொள்ள நேரிடுகிறது என்றார். வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்கள் இருக்கின்றனவா என்பது பற்றி நகர்ப்புற வாக்காளர்கள் கவலைப்படுவதில்லை என்றும் தேர்தல் நாளன்றுதான் இதுதொடர்பாக புகார் கூறுகின்றனர் என்றும் நவீன் சாவ்லா தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக