உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 12, 2010

டாஸ்மாக் கடைகளில் 'சரக்கு'தட்டுப்பாடு! : 'குடி' பிரியர்கள் திண்டாட்டம்

கடலூர் : 

               டாஸ்மாக் கடைகளுக்கு தேவைக்கேற்ப மது பாட்டில்கள் வழங்கப்படாததால் கடலூர் மாவட்டத்தில் விற்பனை குறைந்துள்ளது. குடிபிரியர்கள் மது வகைகள் கிடைக்காமல் திண் டாடி வருகின்றனர்.

              கடலூர் மாவட்டத்தில் 228 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு தேவையான பிராந்தி, விஸ்கி, ரம், ஒயின் மற்றும் பீர் போன்ற மதுபானங்கள் தேவைக்கேற்ப கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள டாஸ்மாக் குடோன்களில் இருந்து வாரம் இருமுறை வழங்கப்படுகிறது. துவக்கத்தில் மாவட்டத்தில் தினசரி விற்பனை 35 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாயாக இருந்தது தற்போது ஒரு கோடி ரூபாயை தாண்டியுள்ளது. கோடைகாலம் என்பதால் விற்பனை மேலும் அதிகரிக்கும் சூழல் உள்ளது. ஆனால் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு, கடலூர் சிப்காட்டில் உள்ள குடோன்களில் இருந்து சரக்குகளை தேவைக்கேற்ப சரவர வழங்குவதில்லை.

                   உதாரணத்திற்கு, ஒரு கடையில் 10 பெட்டி பீர் 'இன்டென்ட்' (கேட்பு பட்டியல்) கொடுத்திருந்தால் மூன்று அல்லது நான்கு பெட்டி மட்டுமே வழங்கப்படுகிறது. அதுவும் அதிகம் விற்பனையாகும் 'மெக்டோவல்', 'மானிட்டர்' பிராந்தி, 'ஓல்ட்மங்க்' ரம் போன்ற பிரபல கம்பெனிகளின் தயாரிப்புகளை வழங்காமல், புதுப்புது கம்பெனிகளின் தயாரிப்புகளை குறைந்த அளவிற்கு வழங்குகின்றனர். பீர் வகைகள் மிக குறைந்த அளவே வழங்கப்படுகிறது. குடிப்பிரியர்கள் தங்களுக்கு தேவையான 'பிராண்ட்' மதுவகை கிடைக்காததால், டாஸ்மாக் விற்பனையாளர்களிடம் தகராறு செய்வது அதிகரித்து வருகிறது. மாவட்டத்தின் தேவைக்கேற்ப சென்னை தலைமையகத்திலிருந்து மதுபாட்டில்கள் கடலூர் சிப்காட்டில் உள்ள குடோன்களுக்கு லாரிகளில் அனுப்பட்டு வருகிறது. இதனை குடோனில் இறக்கி, பின்னர் வேறு லாரிகள் மூலம் கடைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

                        இதற்காக குடோனில் 20 லோடுமேன்கள் உள்ளனர். தற்போது விற்பனை அதிகரித்துள்ளதால் கூடுதல் மது பாட்டில்களை அனுப்பிட கூடுதலாக லோடு மேன்களை நியமிக்க வேண்டும். அதற்கு தற்போது பணியில் உள்ள லோடுமேன்கள் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதற்காக புதிதாக தொழிலாளர்களை நியமிக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக மதுபாட்டில்களை கடைகளுக்கு உரிய நேரத்தில் தேவைக்கு ஏற்ப அனுப்புவதில் சிக்கல் நிலவுகிறது. அதேபோன்று மதுபான கம்பெனிகள் தங்கள் தயாரிப்பு மதுபானங்களை விற்பனை செய்வதற்காக அதிகாரிகளுக்கு 'கமிஷன்' வழங்கி வருகிறது.

                      புதிய கம்பெனிகள் அதிகமாக 'கமிஷன்' தருவதால் நுகர்வோர் அதிகம் விரும்பி வாங்கும் பிரபல கம்பெனி தயாரிப்பு மதுபானங்களை அனுப்பாமல், அதிக கமிஷன் தரும் கம்பெனிகளின் மதுபாட்டில்களை கடைகளுக்கு அனுப்புகின்றனர். மொத்தத்தில் டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் குடோனில் பணியாற்றும் லோடுமேன்களின் சுய நலத்தால் மாவட்டத்தில் மதுபானங்களின் விற்பனை பாதிக்கிறது. மேலும், தங்களுக்கு வேண்டிய 'பிராண்ட்' மதுபானங்கள் கிடைக்காததால் கடலூர், பண்ருட்டி பகுதியை சேர்ந்த குடிப்பிரியர்கள் அருகாமையில் உள்ள புதுச்சேரி மாநிலத்திற்கு செல்வதால், தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior