உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 30, 2010

ஏரியில் இலவசமாக களிமண் எடுக்க அனுமதி வேண்டும்


கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அருண்.
 
பண்ருட்டி:

 
               கிருஷ்ண ஜயந்தி நெருங்கிவிட்ட நிலையில் பண்ருட்டி அருகே கிருஷ்ணர் பொம்மைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. பண்ருட்டி வட்டம் ஏரிப்பாளையம், வையாபுரிபட்டிணம், திருவதிகை, பூங்குணம், புதுப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் நூற்றுக்கணக்கான குயவர் குடும்பங்கள் மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
 
                தற்போது மண்பாண்டங்களின் பயன்பாடு வெகுவாகக் குறைந்துவிட்ட நிலையில், இவர்கள் சீசனுக்குத் தகுந்தபடி பல்வேறு பொம்மைகள் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ண ஜயந்தி பண்டிகையையொட்டி தற்போது கிருஷ்ணர் பொம்மைகள் தயாரிப்பில் இவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
 
இதுகுறித்து வையாபுரிபட்டிணத்தைச் சேர்ந்த மண்பாண்டத் தொழிலாளர் அருண் கூறியது:
 
                 தற்போது மக்கள் மண்பாண்டங்களை பயன்படுத்துவது இல்லை. திருமணம், கோயில் திருவிழா, பொங்கல் பண்டிகை ஆகிய நிகழ்ச்சிகளுக்கு மட்டும் மண்பாண்டங்கள் வாங்குகின்றனர்.கார்த்திகை தீபத்தன்று அகல் விளக்கு பயன்படுத்துவோர் கூட தற்போது மெழுகு மற்றும் பீங்கான் விளக்குகளுக்கு மாறி வருகின்றர். இதனால் மண்பாண்டங்கள் உற்பத்தி குறைந்து பல குடும்பங்கள் கஷ்டப்படுகின்றன. அக் குடும்பங்களைச் சேர்ந்த இளைய தலைமுறையினர் குடும்பத் தொழிலை விடுத்து மாற்றுத் தொழிலுக்கு மாறி வருகின்றனர்.
 
                இந்நிலையில் குடும்பத் தொழிலை செய்துவரும் நாங்கள், விநாயகர், கிருஷ்ணர் உள்ளிட்ட கடவுள் பொம்மைகள், குழந்தைகளை கவரும் வகையில் விலங்குகள், பறவைகள், உண்டியல் போன்ற பொம்மைகள் செய்து வருகிறோம். இவற்றை உள்ளூர் சந்தையிலும், கோயில் திருவிழாக்களிலும் விற்பனை செய்கிறோம்.விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜயந்தி, நவராத்திரி ஆகிய காலத்தில் சென்னை, திருச்சி, சேலம், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் எங்களிடம் பொம்மைகள் வங்கிச் செல்வர். இதில் கிடைக்கும் கணிசமான வருவாய் மூலமே குடும்பத்தை நடத்தி வருகிறோம்.
 
                  இந்நிலையில் ஏரியில் இருந்து களிமண் எடுக்க, பணம் செலுத்தி, சுரங்க உதவி இயக்குநரிடம் அனுமதி பெற பின்புதான் மண் எடுக்க வேண்டும் என அறிவித்துள்ளனர். மேலும் அவர்கள் அளந்து விடும் இடத்தில் தான் களிமண் எடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இதனால் தரமான களிமண் எடுக்க முடியாத சூழல் ஏற்படும். மண் சரியில்லை என்றால் பொம்மைகள், சட்டி பானைகள் செய்ய முடியாது. நலிவடைந்த நிலையில் மாற்றுத் தொழிலுக்கும் செல்ல முடியாத சூழலில், நாங்கள் பணம் கட்டி ஏரியில் களிமண் எடுக்க முடியாத நிலையில் உள்ளோம். பல்வேறு இலவச திட்டங்களை செயல்படுத்தும் தமிழக அரசு, மண்பாண்டத் தொழிலாளர்களின் நலன் கருதி ஏரியில் இலவசமாக களிமண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.

Read more »

சீர்கேட்டின் பிடியில் பண்ருட்டி அரசு மருத்துவமனை



மின் விளக்குகள், இயங்காததால் இருளில் மூழ்கிய பெண்கள் வார்டு.
 
பண்ருட்டி:
 
                 பண்ருட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் தங்கும் வார்டு உள்ளிட்ட பகுதிகள், அடிப்படை வசதி இல்லாமலும் அசுத்தமாகவும் உள்ளதால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. 
 
                பண்ருட்டி மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதியில் இருந்து நாள்தோறும் 1500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் புறநோயாளிகளாக சிகிச்சை பெற வருகின்றனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.மருத்துவமனை வளாகம் பராமரிப்பின்றி புதர் மண்டிக் கிடப்பதால் பாம்பு, விஷப் பூச்சிகளின் சரணாலயமாக உள்ளது. மேலும் சில இடத்தில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் உள் நோயாளிகள் கொசுக் கடிக்கும், விஷப்பூச்சிகளுக்கு இடையே தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
                    மருத்துவமனைக்கு வருகை தரும் நோயாளிகளுக்காக கட்டப்பட்ட இரு கழிப்பறைகள் இது நாள் வரையில் திறக்கப்படாமல் உள்ளன. இதனால் மருத்துவமனைக்கு வருபவர்களால் வளாகம் அசுத்தம் செய்யப்படுவதாலும், பன்றிகள், கால்நடைகள் உள்ளிட்ட விலங்குகள் மருத்துவமனை வளாகத்தில் சுதந்திரமாக சுற்றி வருவதாலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர் .மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் வார்டு, பிரசவ வார்டு பகுதியில் உள்ள ஜன்னல்கள் சேதமடைந்தும், கண்ணாடிகள் உடைந்து உள்ளன. மேலும் வார்டு பகுதியில் விளக்குகள் எரியவில்லை, மின் விசிறிகள் இயங்கவில்லை. இதனால் கொசுக்கடியில் பாதிக்கப்படும் நோயாளிகள் தங்களைச் சுற்றிலும் கொசுவர்த்திகளை ஏற்றி வைத்துக்கொள்கின்றனர்.  இந்த கொசுவர்த்தியில் இருந்து வரும் புகையை நோயாளிகள் சுவாசிப்பதால் சுவாச நோய்க்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பிறந்த சிசுக்களும், குழந்தைகளும் கொசு வத்தி புகையால் பெரிதும் பாதிப்படைகின்றனர். 
 
                பல்வேறு விபத்துகள், உயிருக்கு போராடும் நோயாளிகள் சிகிச்சைக்காக கடலூருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். பண்ருட்டி அரசு மருத்துவமனையில் உள்ள அவசர ஊர்தி ஆயுள் முடிந்தும் ஓடிக்கொண்டுள்ளது.  இவற்றை மாற்றி தரவேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் பலமுறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் பலனில்லை.பராமரிப்புப் பணிகளை டெண்டர் மூலம் எடுக்கும் முக்கியஸ்தர்கள் பெயரளவில் பணிகளை செய்துவிட்டு கணக்கு முடித்து விடுகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினர் இருப்பதால் பொதுப்பணித் துறை அதிகாரிகளும், மற்றவர்களும் கேள்வி கேட்க முடியாத நிலையில் உள்ளதாக தெரிவித்தனர்.
 
இது குறித்து பொதுப்பணித்துறை (கட்டட பராமரிப்பு) இளநிலை பொறியாளர் எஸ்.கிருஷ்ணசாமி கூறியது: 
 
                    "ஆண்டுக்கு ஒரு முறைதான் பணம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பராமரிப்பு செய்யப்பட வேண்டிய கட்டடங்கள் குறித்த அறிக்கையை ஏப்ரல் மாதத்தில் உயர் அதிகாரிகள் கேட்பர். இதை அனுப்பிய பின்னர்தான் நிதி ஒதுக்கப்படும்.நிதி எப்போது ஒதுக்குவார்கள் என்பது தெரியாது. வரும் நிதியில் அத்தியாவசியப் பணிகளை முதலில் முடிப்போம்' என்றார். தமிழக சுகாதார அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான பண்ருட்டியிலேயே இந்த நிலை என்றால் பிற மருத்துவமனைகளை கேட்கவா வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Read more »

கடலூரில் 5 நூல்கள் வெளியீட்டு விழா

கடலூர்:

                 டலூர் வாசிப்போர் இயக்கத் தலைவர் ஆர்.நடராஜன் எழுதிய 5 நூல்கள் வெளியீட்டு விழா கடலூரில் அண்மையில் நடைபெற்றது. கடலூர் வாசிப்போர் இயக்கம் மற்றும் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தன.

               வாசிப்போர் இயக்கத் தலைவரும் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வருமான ஆர்.நடராஜன் எழுதிய, ஒரு தோழியின் கதை, நவீன பஞ்ச தந்திரக் கதைகள், நம்பர் பூதம் (மொழி பெயர்ப்பு), பெடரிக் டக்ளஸ் (மொழி பெயர்ப்பு), அறிவியல், வளர்ச்சி... வன்முறை (மொழி பெயர்ப்பு) ஆகிய 5 நூல்கள் இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன.

                  புத்தகங்களை பள்ளி மாணவச் சிறுவர் சிறுமியர் வெளியிட, முதல் பிரதியை மாவட்ட நூலக அதிகாரி த.வெல்லஸ் ரோஸ் பெற்றுக் கொண்டார். இந்தப் புத்தகங்களை முறையே ஆசிரியை கேத்தரின், எல்.ஐ.சி. ஜெயஸ்ரீ, பேராசிரியை சாந்தி, எழுத்தாளர் வளவ துரையன், அறிவியல் விமர்சகர் வைத்தியலிங்கம் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்துப் பேசினர்.÷நிகழ்ச்சிக்கு வெல்லஸ் ரோஸ் தலைமை வகித்தார். வாசிப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் கவிஞர் பால்கி முன்னிலை வகித்து தொகுத்து வழங்கினார்.

Read more »

தொழிற்சாலைக்கு வாங்கப்பட்ட நிலத்தில் வெட்டப்படும் மரங்கள்: பாமக கண்டனம்

கடலூர்:

            கடலூர் அருகே தொழிற்சாலைக்கென வாங்கப்பட்ட நிலத்தில் ஆயிரக் கணக்கான மரங்கள் வெட்டப்படுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் தி.திருமால்வளவன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

                கடலூர் அருகே நொச்சிக்காடு, தியாகவல்லி, நடுத்திட்டு, ராசாப்பேட்டை, சித்திரைப்பேட்டை, குடிகாடு உள்ளிட்ட கிராமங்களில் அனல்மின் நிலையம் அமைக்க 1100 ஏக்கர் நிலம் வாங்கத் திட்டமிட்டு 500 ஏக்கருக்கு மேலான நிலம் வாங்கப்பட்டு உள்ளது. இந்த நிலங்களில் முந்திரி, சவுக்கு, பனை, தென்னை, வேம்பு, யூகலிப்டஸ் மரங்கள், வெட்டி வேர் வயல்கள் அதிகம் உள்ளன. தொழிற்சாலைக்காக வாங்கப்பட்ட நிலத்தில் இருந்து 20 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் தொழிற்சாலை அமைக்க இன்னமும் அனுமதி கிடைக்க வில்லை.

                         ஆனால் நிலம் வாங்கிய நிறுவனம் இந்த நிலங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டத் தொடங்கி உள்ளன. சுற்றுச்சூழலைப் பாதிக்காத அளவுக்கு தொழிற்சாலை அமைக்கப்படும் என்று அரசிடமும் மக்களிடமும் வாக்குறுதி அளித்து இருக்கும் இந்த நிறுவனம் தற்போது சுற்றுச் சூழலைப் பாதிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான முந்திரி மரங்கள் உள்ளிட்டவற்றை வெட்டி விற்கத் தொடங்கி உள்ளன. இதனால் அந்த நிலங்கள் பாலைவனமாக்கப்பட்டு வருகிறது. வேளாண் நிலங்களை தொழிற்சாலைகளுக்காகக் கையகப்படுத்த மாட்டோம் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த நிலையில் மேற்கண்ட கிராமங்களில் வேளாண் நிலங்களை தொழிற்சாலைகள் வாங்கிக் கொண்டு, சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில், சுனாமியின்போது பாதுகாப்பு அரணாக விளங்கிய மரங்களை வெட்டி வீழ்த்துவதை அனுமதிக்க முடியாது.  

                      மரங்கள் வெட்டப்படுவதைத் தடுத்து நிறுத்தாவிட்டால், அப்பகுதி மக்களையும் மனித உரிமை, நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளைத் திரட்டி போராட்டம் நடத்துவோம். தொழிற்சாலைக்கு அனுமதி கிடைக்காததால், வாங்கப்பட்ட நிலங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று திருமால்வளவன் தெரிவித்துள்ளார்.

Read more »

கடலூர் மாவட்ட டெல்டா பகுதிகளில் 1.54 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி திட்டம்: இணை இயக்குநர் தகவல்

கடலூர்:

             கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் இந்த ஆண்டு 1.54 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யத் திட்டமிட்டு இருப்பதாக வேளாண் இணை இயக்குநர் ச.இளங்கோவன் தெரிவித்தார். இந்தப் பரப்பளவு இயல்பைவிடக் கூடுதல் ஆகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

                நடப்பு ஆண்டில் மேட்டூர் அணையில் நீர்மட்டம் 84 அடியாக இருந்த போதிலும், சாகுபடிப் பணிகள் காலதாமதம் ஏற்படுவதைத் தடுக்க, ஜூலை 28-ல் பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணையில் இருந்து ஆகஸ்ட் 1-ம் தேதியும், கீழணையில் இருந்து ஆகஸ்ட் 11-ம் தேதியும் தண்ணீர் திறக்கப்பட்டது. விவசாயிகள் கிடைக்கும் தண்ணீரைக் கொண்டும், ஆழ்குழாய்க் கிணறுகள் உள்ள இடங்களிலும் சம்பா நெல் நாற்று விடும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். செம்மை நெல் சாகுபடியில் நாற்றின் வயதைக் குறைக்கலாம். 

               இதனால் தாமதமாகத் தண்ணீர் கிடைத்தாலும், செப்டம்பர் இறுதிக்குள் நடவுப் பணிகளை முடித்து விடலாம்.÷சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் தற்போது பெய்துள்ள மழையைப் பயன்படுத்தியும், ஆழ்குழாய்க் கிணறுகள் மூலமாகவும் நேரடி விதைப்பு மற்றும் நாற்றங்கால் பணிகளை மேற்கொண்டால் செப்டம்பர் இறுதிக்குள் நடவை முடித்து, நவம்பர் மாத மழையில் இருந்து நெல் பயிர்களைக் காப்பாற்றிவிட முடியும். ஜனவரி மாதத்தில் அறுவடைக்கு ஏதுவாகும். அதைத் தொடர்ந்து நிச்சயம் நஞ்சைத் தரிசில் பயறு வகைகளைச் சாகுபடி செய்யலாம்.

                வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 20-ல் ஆரம்பமாகும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறியிருக்கிறார். கடலூர் மாவட்ட டெல்டா பாசனப் பகுதிகளில் 600 ஏக்கரில் நாற்றங்கால் விடப்பட்டு உள்ளது. ÷விவசாயிகள் வீராணம் ஏரி நீர் திறப்பை எதிர்நோக்கி உள்ளனர். ஒருங்கிணைந்த தானிய அபிவிருத்தித் திட்டத்தில் கிலோவுக்கு |5 மானிய விலையிலும், விதை கிராமத் திட்டத்தில் 50 சதம் மானிய விலையிலும், விதை நெல் வழங்கப்படுகிறது. இதுவரை 122 டன் விதை நெல் வேளாண் துறை மூலமாகவும், 62 டன் தொடக்கக் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும் விநியோகிக்கப்பட்டு உள்ளது.

                  வெள்ளைப் பொன்னி, ஏடிடி 39, ஏடிடி 38, ஆந்திரா பொன்னி, கோ-43, கே.ஆர்.எச்-2 வீரிய ஒட்டு ரக விதை நெல் 282 டன் வேளாண் விரிவாக்க மையங்களிலும் 120 டன் தொடக்கக் கூட்டுறவு சங்கங்களிலும் இருப்பு உள்ளது. டெல்டா சாகுபடிக்குத் தேவையான ரசாயன உரங்கள் தயார் நிலையில் தனியார் உரக் கடைகளிலும், கூட்டுறவு சங்கங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. நுண்ணுயிர் பொட்டலங்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துகள் இருப்பு உள்ளது. விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண் அலுவலர்களை அணுகி செம்மை நெல் சாகுபடி தொழில் நுட்பங்களையும் மானிய திட்டங்களையும் கேட்டறிந்து பயன்பெறலாம் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

குறிஞ்சிப்பாடியில் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்: வாடிக்கையாளர்கள் அதிருப்தி

நெய்வேலி:

            குறிஞ்சிப்பாடி வட்டம் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலத்தில், மாவட்ட வழங்கல் அலுவலர் கே.தேவராஜன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில் நுகர்வோர் கூறிய குறைகள்: 

              தொலைபேசி மூலம் பதிவு செய்யும்போது, முகவர் அலுவலக ஊழியர்கள் மரியாதைக் குறைவாக பேசுகின்றனர், ஒவ்வொரு முறையும் சிலிண்டருக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர், தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள டோக்கன் முறைக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கின்றனர், 21 நாள்களுக்குப் பிறகே அடுத்த சிலிண்டர் பதிவு செய்யவேண்டும் என்று கெடுபிடி செய்கின்றனர், அவ்வாறு பதிவுசெய்தாலும் குறைந்தபட்சம் 50 நாள்களுக்குப் பிறகே சிலிண்டர் சப்ளை செய்கின்றனர் என்று கூறினர்.

இவற்றை கேட்டுக்கொண்ட மாவட்ட வழங்கல் அலுவலர் தேவராஜன் கூறுகையில், 

               ""சிலிண்டர் பதிவுக்கு 21 நாள் காலஅவகாசம் தேவை என்று எந்த உத்தரவும் கிடையாது. டோக்கன் முறை உங்களது வசதிக்காவே கொண்டுவரப்பட்டுள்ளது. நீங்கள் சரியாக நடந்துகொண்டால் தவறு நடக்க வாய்ப்பில்லை. மேலும் முகவர்களுக்கு பல்வேறு சிரமங்கள் உள்ளன. எனினும் முகவர்கள் நுகர்வோரிடம் மரியாதையாக நடந்துகொள்வது அவசியம்'' என்று கூறி கூட்டத்தை முடித்துக்கொண்டார். வாடிக்கையாளர் அதிருப்தி: இந்நிலையில் கூட்டத்துக்கு வந்திருந்த நுகர்வோர், இக் கூட்டம் வெறும் கண்துடைப்புக்காக நடத்தப்பட்டுள்ளது என்று குறைகூறினர். 

                 ""இவ்வுளவு குறைகளை நாங்கள் கூறிய பின்னரும், முகவருக்காக வக்காலத்து வாங்குகிறார். அரசு விதித்துள்ள நடைமுறைகளை செயல்படுத்தாத முகவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் முகவர்களை எச்சரிக்கவில்லை. வீட்டு உபயோக சிலிண்டரை வணிக நிறுவனங்கள் பயன்படுத்தினால், சம்பந்தப்பட்டவரிடம் நீங்களே போய் கேளுங்கள், அப்போது தான் விமோசனம் பிறக்கும் என்கிறார். டோர் டெலிவரி செய்யாத முகவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கத் தயங்கும் அலுவலரின் செயல் முகவர்களுக்கு ஆதரவான நிலையையே காட்டுகிறது'' என்று விரக்தியுடன் கூறிவிட்டுச் சென்றனர். 

                       இக் கூட்டம் 150 சதுரஅடி பரப்பளவு அறைக்குள் நடத்தப்பட்டதால் பெரும்பாலான நுகர்வோர் அறைக்கு வெளியிலேயே நிற்கவேண்டியிருந்தது.

Read more »

Fishermen return from sea after 10 days

CUDDALORE: 

              After nearly 10 days of nightmarish experience in the sea after their mechanised boat suffered engine failure, five fishermen returned home on Saturday night.

             They ventured into the sea from Cuddalore Old Town on August 19 and while fishing near Puducherry shore, the engine failed. Attempts to repair the engine were unsuccessful and the boat drifted away, P. Shankaran, driver of the motorised boat, told The Hindu.

                “There was heavy wind and the boat drifted close to the Sri Lankan shore. We had stored food only for three days and all these days, we survived on fish,” he said. Finally on August 26, the crew was able to repair the engine and reached Nagapattinam on Saturday. Again, the engine failed, he said. “Till we reached Nagapattinam, we were not able to contact our people through cell phone. On Saturday, we were able to contact the boat owner,” Mr. Shankaran said. A rescue team from Cuddalore was deployed and the boat was towed back. On reaching Cuddalore, the fishermen were given medical aid.

Read more »

உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை

சிதம்பரம் : 

                    சிதம்பரத்தில் வேலையில்லா உடற்கல்வி ஆசிரியர் கழக மாநில உயர் மட்டக்குழு அவரசக் கூட்டம் நடந்தது. மாநிலத் தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயதேவன் வரவேற்றார்.  கோவலன், அருள் மொழிவர்மன், பன்னீர், சுந்தரேசன், ராஜசுந்தரம் முன் னிலை வகித்தனர். கூட்டத்தில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் உடற்கல்வி ஆசிரியர் நியமனத்திற்கு தேர்வு செய்தவர்களின் பெயர் பட்டியலை இணையதளத்தில் வெளியிட கேட்டுக்கொள்வது. 

                  2010-2011ம் கல்வியாண்டில் அனுமதிக்கப்பட்ட 158 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் மத்திய அரசின் இடைநிலைக் கல்வித் திட்டத்தில் அனுமதிக்கப் பட்ட 200 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களையும் உடன் நியமிக்க அரசை கேட்டுக்கொள்வது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சிவக்குமார் நன்றி கூறினார்.

Read more »

விருத்தாசலத்தில் மோசமானது மாற்று வழிச்சாலை தொடர் விபத்துக்களால் வாகன ஓட்டிகள் அச்சம்

விருத்தாசலம் : 

              விருத்தாசலம் எறுமனூர் மாற்று வழிப்பாதை சாலையில் உள்ள மோசமான பள்ளங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வாகனங்கள் கவிழ்வதை தவிர்க்க நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு செய்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விருத்தாசலத்தில் இருந்து வேப்பூர், திருச்சி செல்லும் வாகனங்கள் பாலக்கரை, கடைவீதி, மணலூர் வழியாகச் சென்று வந்தது. தற்போது மணலூரில் உள்ள ரயில்வே கேட்டில் மேம் பால பணி நடந்து வருகிறது.

                      இதனால் இந்த வழியாக வந்த வாகனங்கள் எறுமனூர் பாலம் வழியாக ரயில்வே ஜங்ஷனை கடந்து பஸ் நிலையம் அடையுமாறு மாற்றுப் பாதையில் மாற்றி விடப் பட்டுள்ளது. இதனால் இந்த சாலையில் எப்போதும் இல்லாத வகையில் தற்போது அதிக அளவில் வாகனங்கள் செல்கின்றன. இச்சாலை அமைந்துள்ள பகுதி களிமண் பகுதி என்பதாலும், அதிக அளவிலான கனரக வாகனங்கள் செல்வதாலும் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக உள்ளது.  மேலும் வளைவுகள் அதிகமாக இருப்பதால் வேகமாக வரும் வாகனங்கள் நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துகள் ஏற்படுகிறது. 

                       கடந்த சில மாதங்களுக்கு முன் இச்சாலையில்  சென்ற தனியார் பஸ் நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக் குள்ளானதில் பஸ் டிரைவர் சம்பவ இடத்திலே உயிர் இழந்தார். 50க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து சிமென்ட் லோடு ஏற்றிச் சென்ற லாரி உட்பட மூன்று லாரிகள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கி கவிழ்ந்தது. விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சாலையை ஆய்வு செய்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

காணாமல் போன கடலூர் மீனவர்கள் 5 பேர் நாகப்பட்டினம் துறைமுகத்தில் கரையேறினர்

கடலூர் : 

                  கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன ஐந்து மீனவர்கள் 10 நாட்களுக்குப் பின் நேற்று நாகை துறைமுகத்தில் கரையேறினர். பின் அவர்கள் கடலூருக்கு அழைத்து வரப்பட்டனர். 

                   கடலூரை அடுத்த தம்மனாம்பேட்டையைச் சேர்ந்தவர் அஞ்சாபுலி (47). இவருக்குச் சொந்தமான விசைப் டகில் கடந்த 19ம் தேதி அதிகாலை கடலூர் முதுநகரை அடுத்த நஞ்சம்பேட்டை சங்கரன் (50), ஏழுமலை (53), பெரியக்குப்பம் கருப்பர் (55), சித்திரைப் பேட்டை சேகர் (55), சாமியார்பேட்டை முத்துசாமி (42) ஆகியோர் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். படகின் உரிமையாளர் அஞ்சாபுலி 20ம் தேதி மாலை மொபைல் போன் மூலம் கடலுக்குள் சென்ற மீனவர்களிடம் தொடர்பு கொண்டு பேசினார்.  

                        அதன்பின் மீனவர்களின் நிலை குறித்து தெரியாததால் அச்சமடைந்த மீனவர்கள், காணாமல் போனவர் களை கண்டு பிடித்துத் தரக்கோரி 26ம் தேதி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். உடன் ஹெலிகாப்டர் மற்றும் கடலோர காவல்படை மூலம் தேடுவதாக கலெக்டர் தெரிவித்தார். நேற்று முன்தினம் நடந்த கூட்டத் திலும் கடலோர காவல் படை ஹெலிகாப்டர் மற்றும் கப்பல்கள் மூலம் 200 பேர் தேடுவதாக டி.ஆர்.ஓ., நடராஜன் தெரிவித்தார். ஆனால், காணாமல் போன மீனவர்கள் குறித்து 28ம் தேதி காலை வரை எவ்வித தகவலும் தெரியவில்லை.

                        இதனால் 10க்கும் மேற்பட்ட  மீனவர்கள் வெள்ளைக் கொடி கட்டிய  நான்கு விசைப் படகுகளில் மீனவர்களைத் தேடி கடலுக்குள் சென்றனர். இந்நிலையில், காணாமல் போன மீன வர்கள் நேற்றுமுன்தினம் மதியம் நாகப்பட்டினத்தில் படகுடன் கரை ஏறினர். அவர்கள் படகை கடலூரில் இருந்து சென்ற மீனவர்கள் கயிறு கட்டி இழுத்து வந்தனர். நேற்று காலை 5 மீனவர்களும் கடலூர் துறைமுகத் திற்கு வந்தனர். அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டி.ஆர்.ஓ., நடராஜன் சந்தித்து ஆறுதல் கூறினார். 

கரை திரும்பிய மீனவர்களில் விசைப்படகு டிரைவர் சங்கரன் கூறுகையில், 

                    ""கடந்த 19ம் தேதி புறப் பட்ட நாங்கள் புதுச்சேரி அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். அப் போது கியர் ராடு உடைந்து விட்டது. அதனால் குறிப்பிட்ட திசை நோக்கி படகை செலுத்த முடியவில்லை. சரி செய்வதற்குள் காற்றின் வேகத்தால் ஆழ்கடலை நோக்கித் தள்ளப்பட்டு இலங்கை அருகே சென்று விட்டோம். தொலைபேசியிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன் பின்னர்  படகில்  மெல்ல மெல்ல  நாகப்பட்டினம் வந்தடைந்தோம். நாங்கள் கரைக்கு வந்த பின்னர்தான்  எங்களைத் தேடி வந்தவர்களை சந்தித் தோம். நாங்கள் சோறு சாப்பிட்டு நான்கு நாட்களாகிறது,'' என்றார்.

Read more »

சனி, ஆகஸ்ட் 28, 2010

கடலூரில் பஸ் வசதியின்றி மாணவர்கள் தவிப்பு

கடலூர்:
               கடலூரில் இருந்து போதிய பஸ் வசதியின்றி மாணவர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இதனால் மாணவர்கள் மணிக்கணக்கில் பஸ் நிலையத்தில் காத்துக் கிடக்கும் அவல நிலை உருவாகி இருக்கிறது.
                  கடலூரில் உள்ள பள்ளிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்களில் 15 ஆயிரம் மாணவர்கள் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வந்து, பல்வேறு பள்ளிகளில் படிக்கிறார்கள். இவ்வாறு சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வந்து படிக்கும் மாணவ, மாணவிகள் போதிய பஸ் வசதியின்றித் தவிக்கிறார்கள். காலை நேரத்தில் பல்வேறு ஊர்களில் இருந்தும், பல்வேறு பஸ்களிலும் மாணவர்கள் வந்து விடுவதால், பிரச்னை பெரிதாக உணரப்படவில்லை.
                   ஆனால் மாலை நேரத்தில் மாணவ, மாணவிகள் தங்கள் ஊர்களுக்கு பஸ்களை பிடித்துச் செல்வதில் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். கடலூர் திருப்பாப்புலியூர் பஸ்நிலையத்திலும், நகரின் சாலைகளில் உள்ள பல்வேறு பஸ் நிறுத்தங்களிலும் மாணவர்கள் பஸ்களுக்காக மணிக்கணக்கில் காத்துக் கிடக்கும் நிலை, மிகவும் பரிதாபமாக உள்ளது. பஸ்கள் மாணவர்களை புளி மூட்டைபோல் ஏற்றிச் செல்வதும், ஒரு பஸ்ஸில் இடம் கிடைக்காமல், மறு பஸ்சை   பிடிப்பதற்கு ஓடோடிச் செல்லும் இளம் சிறார்களின் நிலையும் பரிதாபமாக உள்ளது. 
                        ற்கெனவே 100-க்கும் மேற்பட்ட கடைகளால் வணிக வளாகமாக மாற்றப்பட்டு இருக்கும் திருப்பாப்புலியூர் பஸ் நிலையத்தில், மாலை நேரத்தில் பஸ்களுக்கு காத்து நிற்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கூட்டம் நாள்தோறும் காணப்படுகிறது. கடலூரில் இருந்து நகரப் பஸ்கள் அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் 50-ம், தனியார் துறையில் 25 பஸ்களும் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களால் மாணவர்கள் எண்ணிக்கையை எதிர்கொள்ள முடியாத நிலை உள்ளது.
இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழகப் பொது மேலாளர் உதயசூரியன்  கூறியது:
                       கடலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் 80 ஆயிரம் மாணவர்களுக்கு மேல் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு 83 ஆயிரம் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்கப்பட்டது. நகருக்கு அருகில் உள்ள கிராமங்களில் இருந்து மாணவர்கள் பெருமளவில் நகரப் பள்ளிகளில் படிக்கிறார்கள்.மாணவர்கள் பயணிக்கும் காலை, மாலை நேரங்களை தவிர மற்ற நேரங்களில் பஸ்கள் காலியாகத்தான் செல்கின்றன என்றார்.
இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், 
                     கடலூரைச் சுற்றி அரசுப் பள்ளிகள் பல சிறப்பாக உள்ளன. அவற்றில் படிக்காமல் நகரப் பள்ளிகளில்தான் படிக்க வேண்டும் என்று பலர் விரும்புவதால் இந்தச் சிக்கல் ஏற்படுகிறது.பள்ளிகள் விடும் நேரத்தை மாற்றி அமைத்தால் இப்பிரச்னைக்குத் தீர்வு காண முடியும். மாலையில் ஒரே நேரத்தில் அனைத்து பள்ளிகளையும் விடுவதை மாற்றி, வெவ்வேறு நேரங்களில் விடவேண்டும். அனைத்து மாணவர்களும் மதிய உணவு நேரத்தை குறைத்தால், பள்ளிகள் விடும் நேரத்தை மாற்றி அமைத்து விடலாம்.சில பள்ளிகளில் கடந்த ஆண்டு, தலைமை ஆசிரியர்களால் இது நடைமுறைப்படுத்தப்பட்டது. அந்தப் பள்ளி மாணவர்கள் நிம்மதியாகச் சென்று வந்தனர் என்றார்.

Read more »

பண்ருட்டியில் அரசுப் பள்ளி சுவர் உடைப்பு மாணவர்கள் பாதிப்பு


மைதானத்தில் தேங்கியுள்ள கழிவுநீர் கலந்த மழை நீரில் விளையாடும் மாணவர்கள். (உள்படம்) பள்ளியின் சுற்றுச்சுவரில் போடப்பட்டுள்ள ஓட்டை.
 
பண்ருட்டி:
               பண்ருட்டி தாலுகா புதுப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி சுற்றுச் சுவரை உடைத்து மழை நீரை உள்ளே திருப்பிவிட்டதால், பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரால் பள்ளி மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
              புதுப்பேட்டை, பேட்டை வீதியில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 1200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.புதுப்பேட்டை சுற்று வட்டப் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழை நீர் சுண்ணாம்புக்கார குட்டையில் சென்று கலக்கும். இக்குட்டையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதால் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி புதுப்பேட்டை பகுதியில் பொது சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. 
 
              மழைக் காலத்தில் கழிவுநீர் மற்றும் மழைநீர் கலந்து சாலையில் தேங்கி நிற்கும்.அண்மையில் பெய்த மழையால் புதுப்பேட்டை பகுதியில் மழை மற்றும் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி நின்றதால், தாழ்வான பகுதியில் இருந்த வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மழை நீரை வெளியேற்ற வேண்டி பள்ளியின் நுழைவு வாயில் அருகே உள்ள சுற்றுச் சுவரில் ஓட்டை போட்டு பள்ளி வளாகத்தினுள் மழை நீரை திருப்பி விட்டுள்ளனர்.
 
             இதனால் பள்ளி வளாகம் மழை மற்றும் கழிவுநீர் சூழ்ந்து ஏரி போல் காட்சி அளித்து, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதிப்படைந்தனர்.தற்போது மழை முடிந்து 3 நாள்கள் ஆகியும் பள்ளி மைதானத்தில் தேங்கிய நீர் வற்றவில்லை. இதனால்  மாணவர்கள் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் தேங்கியுள்ள மழை மற்றும் கழிவுநீரில் மாணவர்கள் விளையாடுவதால் நோய் தாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
 
இது குறித்து ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 
 
                     "பள்ளி சுற்றுச் சுவர்களை உடைத்து மழை நீரை பள்ளி வளாகத்தினுள் திருப்பி விட்டுள்ளனர். இதுபோல் பலமுறை செய்துள்ளனர். விளையாட்டு மைதானத்தில் தண்ணீர் நிற்பதால் உடற்பயிற்சி செய்ய முடியவில்லை. பைக்கா போட்டியும் நடத்தப்படவில்லை. பள்ளி சுகாதாரம் பாதிக்கப்பட்டு மாணவர் நலம் பாதிக்கப்படுகிறது. பள்ளி சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது குறித்து புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் அளித்து ஒரு வாரம் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என வேதனையுடன் கூறினர்.

Read more »

கடலூரில் அமைச்சர் உத்தரவிட்டும் அகற்றப்படாத பேனர்கள்

கடலூர்:

            மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உத்தரவிட்டும் கடலூரில் டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்படவில்லை.

              தலைவர்கள் பிறந்த நாள், நன்றி அறிவிப்பு, திருமணம், காதுகுத்து போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மிகப்பெரிய அளவில் டிஜிட்டல் பேனர்கள் வைப்பது கடலூரில் இப்போது புதிய கலாசாரமாகிவிட்டது. நிகழ்ச்சிக்குப் பல நாள்களுக்கு முன்னரே பேனர்கள் வைப்பதும், நிகழ்ச்சி முடிந்து பல நாள்கள் ஆனாலும் அவற்றை அகற்றாததும் பொதுமக்களுக்கு பெரிதும் இடையூறையும் எரிச்சலையும் ஏற்படுத்துகிறது.

              இந்த பேனர்கள் சாலைகளில் செல்வோரின் கவனத்தை திசை திருப்பி, விபத்துகளுக்குக் காரணமாகவும் அமைந்துவிடுகின்றன. மேலும் வர்த்தக நிறுவனங்கள் முன்னால் வைக்கப்படும் பெயர்ப் பலகைகளை மறைத்தும், அவர்களது நிறுவனத்தின் முகப்பே மறைந்து போகும் அளவுக்கும், பிரச்னைகளை ஏற்படுத்தி விடுகின்றன. போக்குவரத்துக்கு இடையூறாகவும் உள்ளதாக போலீசார்  தெரிவிக்கிறார்கள். பொதுமக்கள் பலரும் இந்த பேனர்களால் முகம் சுழித்துக் கொண்டு இருந்த நிலையில், அண்மையில் கடலூரில் நடந்த அரசு விழா ஒன்றில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், இந்த டிஜிட்டல் பேனர்கள் குறித்து தனது கவலையைத் தெரிவித்தார்.

                    டிஜிட்டல் போனர்களை போலீஸôர் ஒழுங்குபடுத்த வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர், நிகழ்ச்சிக்கு ஒரு நாள் முன்பு பேனர்களை வைக்கவும் நிகழ்ச்சி முடிந்த மறுநாள் அகற்றிவிடவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அமைச்சரே உத்தரவிட்டதால் மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அமைச்சரின் உத்தரவு வியாழக்கிழமை மாலை வரை கடைபிடிக்கப்படாதது, கடலூர் மக்களை பெரிதும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த மாவட்ட அமைச்சரின் உத்தரவுக்கு இவ்வளவுதான் மரியாதையா என்றும் மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். பல தலைவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் முடிவடைந்து பல நாள்கள் ஆகியும், இந்த டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

Read more »

சிதம்பரத்தில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

சிதம்பரம்:

             சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவு சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. 

                நகர சிறுபான்மை பிரிவுத் தலைவர் பி.என்.ஷாஜகான் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆர்.ரியாஸ் அகமது, அமைப்பாளர் என்.மன்சூர்கான், ஒருங்கிணைப்பாளர் இர்பான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பி.ஜாகீர்உசேன் வரவேற்றார். காஜா மொய்னுதீன் தலைமையில் நோன்பு திறப்பு நிகழ்ச்சியும், தொழுகையும் நடைபெற்றது. சிறுபான்மைப் பிரிவு மாவட்டத் தலைவர் ஏ.காதர், துணைத் தலைவர் ஏ.எஸ்.ஷாகுல்வஹமீது, அமைப்பாளர் ஏ.எம்.ஆரிஃபுல்லா, ஒருங்கிணைப்பாளர் ரோஸ்மேரி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

                    இந்நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.பி.கலியபெருமாள், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ.எஸ்.வேல்முருகன், மாநில சேவாதள கூடுதல் அமைப்பாளர் எஸ்.சரவணக்குமார், நாடாளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் பி.பி.கே.சித்தார்த்தன், சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். யு.அஷ்ரப்புல்லா நன்றி கூறினார்.

Read more »

போக்குவரத்து அதிகாரிகள் திடீர் சோதனை: வாகன உரிமையாளர்களுக்குரூ.63 ஆயிரம் அபராதம்

கடலூர்:

            போக்குவரத்து அதிகாரிகள் ஒரே நாளில் நடத்திய திடீர் சோதனையில் வாகன உரிமையாளர்களிடம் இருந்து அபராதத் தொகையாக ரூ.63,575 வசூலிக்கப்பட்டது.ரூ.19 ஆயிரம் அபராதத் தொகை வசூலிக்க நோட்டீஸ் வழங்கப்பட்டது. 

 இதுகுறித்து கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயக்குமார் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

                   சென்னை போக்குவரத்து ஆணையரின் உத்தரவின்பேரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் தலைமையில் 25-ம் தேதி இரவு, இரு பிரிவுகளாக மாவட்டத்தில் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை, கிழக்குக் கடற்கரைச் சாலை, கடலூர்-புதுவை சாலை ஆகியவற்றில் இந்த திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.  தணிக்கையின்போது வாகனங்களில் சிவப்பு பிரதிபலிப்பான் ஒட்டாதது கண்டுபிடிக்கப் பட்டது. 67 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை அளிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. வாகனங்களில் பிற குற்றங்களும் காணப்பட்டன. புதுவை- கடலூர் சாலையில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய இருவரது வாகனங்கள பறிமுதல் செய்யப்பட்டன; வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது என்று செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

பண்ருட்டியில் வயிற்றுப்போக்கு

பண்ருட்டி:

              ண்ருட்டி நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கடந்த 2 மாதமாக வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கின் பிடியில் சிக்கி பாதிப்படைந்து வருகின்றனர்.

               பண்ருட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியான திருவாமூர், கரும்பூர், எலந்தம்பட்டு, கருக்கை, முத்தாண்டிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தில் திடீர் என வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் பலர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்நிலையில் கடந்த இரு நாள்களாக சிறுவத்தூர் மற்றும் பண்ரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

               இத்தகவல் அறிந்த கடலூர் மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் ஜெயவீரகுமார் வெள்ளிக்கிழமை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு வந்து நோயாளிகளை  பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் பி.பன்னீர்செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர் துரை ஆகியோரும் பார்வையிட்டனர்  கடந்த இரு மாதங்களாக தொடர்ந்து பல்வேறு கிராமத்தை பதம் பார்த்து வரும் வயிற்றுப்போக்கு நோய்க்கு இதுவரையில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இதனால் கிராம மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

              தொடர்ந்து வயிற்றுப்போக்கு நோய் தாக்கி வரும் நிலையில், துணை சுகாதார நிலையங்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், மாவட்ட துணை இயக்குநரகத்துக்கு தெரியப்படுத்தி காலரா குழுவை வரவழைத்து நோய் பாதித்த பகுதியில் மருத்துவம் பார்க்கவில்லை எனவும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

கோட்டாட்சியர் விசாரணை:

                 வயிற்றுப்போக்கு நோயால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவத்தூர் கிராம மக்களை கோட்டாட்சியர் வி.முருகேசன் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தலைமை மருத்துவர் எம்.மலர்கொடியிடம் அவர் ஆலோசனை செய்தார். அப்போது நோய் பாதித்த சிறுவத்தூர் பகுதியில் மருத்துவக் குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளதாக மருத்துவர் மலர்கொடி கூறினார். பின்னர் கிராமப் பகுதியில் உள்ள குடிநீர் குழாய்களை சுத்தம் செய்யவும், பள்ளம் வெட்டி தண்ணீர் பிடிக்கும் பகுதியில் பள்ளத்தை அடைத்து மாசடைந்த நீர் குடிநீரில் கலக்காதபடி பாதுகாக்கப்பட்ட குடிநீரை கிராம மக்களுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர் துரைக்கு உத்தரவிட்டார்.

Read more »

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் மாறுவேடத்தில் இயக்குநர் ஆய்வு: முதன்மை மருத்துவ அதிகாரி இடமாற்றம்

சிதம்பரம்:

                     சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனையை ஊரக மருத்துவத்துறை இயக்குநர் மற்றும் அதிகாரிகள் மாறுவேடத்தில் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து முதன்மை மருத்துவ அதிகாரி கே.நடராஜன் மற்றும் முதன்மை செவிலியர் டி.பேபி ஆகிய இருவரையும் உடனடியாக ராமநாதபுரம் மற்றும் பல்லடம் ஆகிய ஊர்களுக்கு இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

                 தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனையை வியாழக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்ட போது சுகாதார சீர்கேடாக உள்ளதாகவும், சரியான பராமரிப்பு இல்லாததால் உயரதிகாரிகளைக் கொண்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். அதனடிப்படையில் ஊரக மருத்துவத்துறை இயக்குநர் (டி.எம்.எஸ்.) டாக்டர் புருஷோத்தம் விஜயகுமார், கடலூர் மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் ஜெயவீரக்குமார் உள்ளிட்ட அதிகாரிகளைக் கொண்ட குழு வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் 9 மணி வரை பொதுமக்கள் போன்று மாறுவேடத்தில் சென்று சோதனை மேற்கொண்டனர்.

                 அப்போது தலைமை மருத்துவர் டாக்டர் கே.நடராஜன் மற்றும் தலைமை செவிலியர் டி.பேபி ஆகியோரின் செயல்பாடுகள் சரியில்லாததை அறிந்து இருவரையும் முறையே ராமநாதபுரத்துக்கும், கோவை பல்லடத்துக்கும் உடனடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டனர். அதற்கு பதிலாக காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த டாக்டர் சங்கரலிங்கத்தை தலைமை மருத்துவராகவும் (பொறுப்பு), கடலூரைச் சேர்ந்த ரூபிஜோபிதத்தை தலைமை செவிலியராகவும் உடனடியாக நியமித்து இயக்குநர் புருஷோத்தம் விஜயகுமார் உத்தரவிட்டார்.

பின்னர் ஊரக மருத்துவத்துறை இயக்குநர் புருஷோத்தம் விஜயகுமார்  தெரிவித்தது: 

                     அமைச்சரின் உத்தரவின்பேரில் மருத்துவமனையை எனது தலைமையிலான குழு மாறுவேடத்தில் ஆய்வு செய்தது. அப்போது முதன்மை மருத்துவ அதிகாரி மற்றும் முதன்மை செவிலியர் ஆகியோரின் திறமையற்ற செயல்பாடு குறித்து தெரியவந்து இருவரும் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். சரியாக பணியாற்றாத செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. லேப்-டெக்னீஷியன் மலர்கண்ணன் பணிக்கு காலதாமதமாக வந்ததால் அவரிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. 

                   மருத்துவமனையில் மொத்தம் உள்ள 22 மருத்துவர் பணியிடங்களில் 9 இடங்கள் காலியாக உள்ளன. விரைவில் அப்பணியிடங்கள் நிரப்பப்படும். 3 மருத்துவர்கள் மருத்துவ விடுப்பில் உள்ளனர். அவர்கள் உடனடியாக பணியில் சேருமாறு எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மீதம் உள்ள 10 மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். இம்மருத்துவமனைக்கு எலும்பு முறிவு டாக்டர் நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு சுற்றுச் சுவர், கட்டடங்களை பழுது நீக்கல், கழிப்பறை மற்றும் வடிகால் வசதி போன்ற பணிகலை பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளரூ.45 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் புருஷோத்தம் விஜயகுமார்.

Read more »

ஐஏஎஸ் அதிகாரி சஸ்பெண்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சிதம்பரம்:

            தலித் சமூகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் பணியிடை நீக்கத்தை கண்டித்து மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
              
       நகர ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.செந்தில் தலைமை வகித்தார். மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜூ சிறப்புரையாற்றினார். 

மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜூ பேசியது:

                   தமிழக அரசு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்க விதிமுறைகள், குற்றவியல் நடைமுறைகள் சட்டத்துக்கும், ஊழல் தடுப்பு சட்டத்துக்கும் விரோதமாக திட்டமிட்டே உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த விதிமுறைகள் ஊழல் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு கவசமாக பயன்படுவதுடன், விசாரணைக்கு அனுமதி அளிக்கும் அதிகாரம் முதல்வர் உள்ளிட்ட 3 பேர் குழுவிடம் இருப்பதால் நேர்மையான அதிகாரிகளை மிரட்டுவதற்கும், ஊழல் அதிகாரிகளை பாதுகாப்பதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது என உயர் நீதிமன்றத்தில் உமாசங்கர் ஐஏஎஸ் ஆதாரங்களுடன் தாக்கல் செய்துள்ளார்.

                மேலும் பல்வேறு ஊழல்களை கண்டுபிடித்துள்ளார். இதனால் தலித் சமூகத்தைச் சேர்ந்த நேர்மையான அதிகாரி உமாசங்கர் 20 ஆண்டுகள் கழித்து பொய் சான்றிதழ் கொடுத்ததாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. எனவே பணி இடைநீக்கத்தை தமிழக அரசு நீக்க வேண்டும். உமாசங்கர் தெரிவித்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் சி.ராஜூ தெரிவித்தார். மாவட்டச் செயலாளர் செந்தில்குமார், புஷ்பதேவன், புரட்சிகர மாணவர் முன்னணி பாலு உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

Read more »

கடலூரில் அனுமதி இன்றி கிளிஞ்சல் ஏற்றிய லாரி பிடிபட்டது

கடலூர் : 

          அனுமதி இல்லாமல் கிளிஞ்சல் ஏற்றிய டாரஸ் லாரியை தாசில்தார் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

               கடலூர் தாசில்தார் தட்சணாமூர்த்தி மற்றும் அதிகாரிகள் முதுநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நொச்சிக்காடு உப்பனாற்று பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் கிளிஞ்சல் ஏற்றிய டாரஸ் லாரியை அதிகாரிகள் மடக்கி பிடித்து துறைமுகம் போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து தாசில்தார் தட்சணாமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் துறைமுகம் போலீசார் டிரைவர் பழனிவேல், லாரி உரிமையாளர் சிதம்பரம் அப் துல் அஜீஸ், லாரியை வாடகைக்கு எடுத்த நொச் சிக்காடு தட்சணாமூர்த்தி ஆகியோர் மீது வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.

Read more »

வெள்ளி, ஆகஸ்ட் 27, 2010

கடலூரில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தால் பள்ளத்தில் 10 ஆயிரம் வீடுகள்


கடலூர் தெளலத் நகரில் சாலைகள் மட்டம் உயர்ந்ததால், பள்ளத்தில் இருக்கும் கடைக்குள் மழைநீர் புகாமல் இருக்க அமைக்கப்பட்ட தடுப்புக் கட்டை.
 
கடலூர்:
 
           கடலூரில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தால் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் சாலை மட்டத்திலிருந்து 3 அடி வரை பள்ளத்துக்குள் போய்விட்டன.  2006-ம் ஆண்டு புதிய நகராட்சிக் கவுன்சில் பொறுப்பேற்றது.
 
             முந்தைய கவுன்சில் முயற்சியால் 2006-ல் நகரில் 100 சாலைகள் 4 கோடியில் அமைக்கப்பட்டன. தார்த் தளம் அமைப்பதற்குள், பாதாளச் சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படுவதால், சாலைகள் போடக்கூடாது என்று, நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவிட்டார். சாலைகள் ஒரு அடி உயரம் உயர்ந்ததுதான மிச்சம், பணிகள் நிறுத்தப்பட்டன.பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காக அனைத்து சாலைகளும் தோண்டி சிதைக்கப்பட்டன. 
 
              அதில் அகற்றப்பட்ட மண் முழுவதும் சாலைகளிலேயே கொட்டி நிரவப்பட்டது. மழை பெய்ததும் சாலைகள் அனைத்தும் உழுத வயல்கள் போல் மாறின. மக்கள் நடக்க முடியவில்லையே என்ற குரல்கள் தொடர்ந்து ஒலித்ததால், கேப்பர் மலையில் இருந்து மீண்டும் களிமண் கலந்த சரளைக் கற்கள் கொண்டு வந்து சாலைகளில் கொட்டப்பட்டன. இத்தகைய நடவடிக்கைகளால் சாலைகள் 2 அடி உயரத்துக்கு உயர்ந்து விட்டன. தற்போது மீண்டும் சாலைகள் அமைக்கும் திட்டத்தை நகராட்சி தொடங்க இருக்கிறது. 
 
                முதல் கட்டமாக 50 கி.மீ. நீளச் சாலைகள் (நகரின் சாலைகள் மொத்த நீளம் சுமார் 200 கி.மீ.) அமைக்கப்படும் என்று நகராட்சித் தலைவர் து.தங்கராசு அறிவித்து உள்ளார்.இச்சாலைகளும் 2 அடுக்கு சரளைக் கற்கள், 2 அடுக்கு 2 அங்குல ஜல்லிகள் பரப்பி அதன்மீது தார்த்தளம் அமைக்கப்படும் என்று நகராட்சி அறிவித்து இருக்கிறது. தார்ச்சாலை பழுதடைந்தால் அப்படியே தார்த்தளம் மட்டும் அமைக்க நகராட்சி காண்ட்ராக்டர்கள் வரமாட்டார்களாம். எப்போது சாலை அமைத்தாலும், 2 அடுக்கு சரளைக் கற்கள், 2 அடுக்கு 2 அங்குல கருங்கல் ஜல்லி, அதற்கு மேல் தார்த்தளம் என்ற சாலைகளை அமைக்கத்தான் காண்ட்ராக்டர்கள் முன் வருகிறார்கள் என்று நகராட்சி நிர்வாகம் கூறுகிறது.
 
                நகராட்சியின் இத்தகைய நிலைப்பாடு காரணமாக கடலூரில் உள்ள 40 ஆயிரம் வீடுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், சாலை மட்டத்தில் இருந்து 2 அடி முதல் 3 அடி வரை, பள்ளத்துக்குள் போய்விட்டன. நகரம் கடல் மட்டத்தில் இருந்து 2 மீட்டர் உயரத்தில் உள்ளது. தென் பெண்ணை ஆறு, கெடிலம் ஆறு, உப்பனாறு ஆகியவை நகருக்குள் பாய்ந்து கடலில் சங்கமிக்கின்றன. சுனாமியின் போது கடற்கரையில் இருந்து 3 கி.மீ. தூரம் வரை ஊருக்குள் கடல் நீர் புகுந்தது. 
 
               வீட்டுக் கழிவுகளை இணைக்கும் வகையில், 10 அடி முதல் 20 அடி ஆழமுள்ள 25 ஆயிரம் கழிவுநீர் சேகரிப்புத் தொட்டிகள் சாலைகளில் அமைக்கப்பட்டு, அவற்றில் இருந்து சுத்திகரிப்பு நிலையத்துக்கு, மோட்டார் பம்புகளால் கழிவுநீர் உறிஞ்சப்படும் வகையில், பாதாளச் சாக்கடைத் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. சாலைகளில் உள்ள கழிவுநீர் சேகரிப்பு தொட்டிகளில் அடைப்பு ஏற்பட்டால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி  இனி, மனிதர்கள் சுத்தம் செய்ய மாட்டார்கள், தொட்டியில் அடைப்பு ஏற்படாதவாறு மக்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நகராட்சி அறிவித்து உள்ளது. 
 
              அடைப்பு ஏற்பட்டால் சாலைகளில் உள்ள சேகரிப்பு தொட்டிகளில் இருந்து, மனிதக் கழிவுகள் வழிந்தோடும் பட்சத்தில், பள்ளத்தில் அமைந்துள்ள வீடுகளுக்குள் அவை புகுவதை தடுக்க முடியாமல் போய்விடும் என்று, பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். கடலூரில் 4 அடி தோண்டினால் நீர் ஊற்றெடுக்கும். இதனால் பாதாளச் சாக்கடை சேகரிப்பு தொட்டிகளுக்குள் இப்போதே, 1 குதிரைத் திறன் மோட்டார் மூலம் இறைக்கும் வகையில் நீர் சுரக்கிறது. சுரக்கும் நீரும் கழவு நீரும் சேர்ந்தால் அவற்றை எத்தனை திறன்கொண்ட மோட்டாராலும் வெளியேற்ற முடியாது. 
 
கடலூர் நகரக் குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன் இதுகுறித்து கூறுகையில், 
 
                    சாலைகள் உயர்ந்ததால் எனது வீடும் 2 அடி பள்ளத்தில் போய்விட்டது. பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்குப்பின்,  இதுபோன்ற நிலை சுமார் 10 ஆயிரம் வீடுகளுக்கு ஏற்பட்டு உள்ளது. இனி நீதிமன்றத்தை அணுக முடிவு செய்து இருக்கிறோம் என்றார்.

Read more »

குறுந்தகவல் மூலம் கல்வி உதவித்தொகை ஒதுக்கீடு விவரங்கள்

               மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை ஒதுக்கீடு குறித்து எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பும் திட்டம் அமல்படுத்தப்படும் என எல்காட் மேலாண்மை இயக்குநர் சந்தோஷ்பாபு கூறினார். திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை சார்பில் வெப் இன்டலிஜென்ஸ் எனும் தேசிய பயிலரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது. 

இதனைத் தொடங்கி வைத்து எல்காட் மேலாண்மை இயக்குநர் சந்தோஷ்பாபு பேசியது:

                பொறியாளராகத் தேர்ச்சி பெறும் ஒவ்வொருவரும் சமூக சிந்தனையுடன் கூடியவர்களாகத் தயாராக வேண்டும். நமது நாடு சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகள் ஆகியும் 30 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர். அவர்கள் வறுமையைப் போக்குவதற்குத்தான் தமிழக அரசு முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தகவல் தொழில்நுட்பப் புரட்சி அடித்தட்டு மக்களையும் சென்றடைய இ-கவர்னன்ஸ் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

                  செல்போன் மூலம் தகவல்: பிற்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதிதிராவிடர் இன மாணவ, மாணவியருக்கு அரசால் அளிக்கப்படும் கல்வி உதவித் தொகை ஒதுக்கீடு குறித்த விவரம் செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்படும். இதற்காக 30 மாவட்ட நிர்வாகங்கள் ஒத்துழைப்புடன் 1,500 கல்லூரிகளைச் சேர்ந்த 3 லட்சம் மாணவ, மாணவியரின் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்வி உதவித் தொகை வழங்குவதில் வெளிப்படையான நடைமுறை பின்பற்றப்படும்.

Read more »

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் திடீர் ஆய்வு

சிதம்பரம்:
 
            இதய அறுவை சிகிச்சைக்காக இளஞ்சிறார்களை சென்னை மருத்துவமனைகளுக்கு அனுப்பும் நிகழ்ச்சிக்காக வியாழக்கிழமை சிதம்பரம் வந்த தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையில் திடீர் சோதனை மேற்கொண்டார்.
 
             மருத்துவமனை வளாகத்தில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு பிரிவு, குழந்தைகன் நலப் பிரிவு, பொதுப்பிரிவு உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது மருத்துவமனை வளாகம் சுகாதார சீர்கேடாக உள்ளது குறித்து தலைமை மருத்துவரிடம் தெரிவித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தினார். நகராட்சி ஆணையருக்கும் அறிவுரை வழங்கினார். 
 
             மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிப்பறைகள் மிக மோசமான நிலையில் உள்ளதை பார்த்த அமைச்சர் தலைமை மருத்துவரை அழைத்து கண்டித்தார்.மேலும் நோயாளிகளிடம் கட்டணம் வசூலித்து கழிப்பறைகளை பராமரிக்கும் மகளிர் சுய உதவிக் குழுவினரை அழைத்து கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.
 
           சுகாதார சீர்கேட்டையும், துர்நாற்றத்தையும் ஏற்படுத்தி வந்த மருத்துவமனைக்கு அருகில் உள்ள சின்ன காய்கறி மார்க்கெட்டில் உள்ள மீன் மற்றும் கறிக் கடைகளை அகற்ற மாவட்ட ஆட்சியருக்கு தொலைபேசி மூலம் உத்தரவிட்டார். மருத்துவமனைகள் வளாகத்தில் பூட்டப்பட்டுள்ள நோயாளிகள் காத்திருக்கும் கூடத்தை பார்வையிட்டு அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்குமாறும், புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள புதிய கழிப்பறையை பார்வையிட்டு அதன் பணியை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
 
பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தது: 
 
                சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பல்வேறு வசதிகளுக்காக பல கோடிகள் நிதி ஒதுக்கப்பட்டு கட்டடங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவை சரியாக பராமரிப்பின்றி உள்ளன. சுகாதாரத்தை பேணிக்காக்க மருத்துவமனை தலைமை மருத்துவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
                மேலும் இதுகுறித்து இம்மருத்துவமனை உயரதிகாரிகளைக் கொண்டு ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். தவறு செய்யும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அமைச்சருடன் தமிழக ஆரம்ப சுகாதார நிலையங்களின் மாநில இயக்குர் டாக்டர் ஆர்.டி.பொற்கைபாண்டியன், அரசு தலைமை மருத்துவர் கே.நடராஜன், ஒன்றியக்குழுத் தலைவர்கள் கே.ஆர்.செந்தில்குமார், இரா.மாமல்லன் ஆகியோர் உடன் வந்தனர்.

Read more »

கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டம் சந்தேகம் இருந்தால் புகார் தெரிவிக்கலாம்: கடலூர் மாவட்ட ஆட்சியர்

கடலூர்:

            கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்தில், இந்த ஆண்டு வீடு கட்டிக் கொடுப்பதற்கான பயனாளிகள் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. யாருக்கேனும் சந்தேகம் இருந்தால் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் புதன்கிழமை அறிவித்துள்ளார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

                கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்தில் குடிசை வீடுகளுக்குப் பதில் நிலையான வீடுகள் கட்டிக் கொடுக்க, கடலூர் மாவட்டத்தில் 2,10,758 கூரை வீடுகளில்  கணக்கெடுப்பு நடத்தப்பட்டன. இது முறையாக ஆய்வு செய்யப்பட்டு, வீடுகள் கட்டிக் கொடுக்கத் தகுதியானவை என 1,24,409 குடிசை வீடுகள் தேர்வு செய்யப்பட்டன. இப் பயனாளிகள் பட்டியல் முழுவிவரமும், தேசியத் தகவல் தொடர்பு மையத்தின் சிறப்பு மென்பொருள் மூலம் கணினியில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

                    இத்திட்டத்தில் 2010-11 ஆம் ஆண்டுக்கு 26,119 பேருக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பயனாளிகள் முன்னுரிமைப் பட்டியல் கிராம வாரியாக, சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் மூலம் ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது. முன்னுரிமைப் பட்டியலில் பெயர் விடுபட்டு இருப்பதாக யாருக்கேனும் சந்தேகம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கலாம். விசாரணைக்குப் பின் நடவடிக்கை எடுக்கப்படும்.

               இதுகுறித்து இலவசக் கட்டணத் தொலைபேசி எண் 1299 லும் புகார் தெரிவிக்கலாம். ஊரக வளர்ச்சி முகமை அலுவலக தொலைபேசி எண் 04142- 294278, 04142- 294159 

                  ஆகியவற்றிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும் இதற்காக ஊராட்சி ஒன்றிய வாரியாக பொறுப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Read more »

கடலூரில் அன்னை தெரசா 100-வது பிறந்த நாள் விழா

கடலூர்:

            அன்னை தெரசா 100-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அன்னை தெரசா பொதுநலச் சேவை இயக்கம் சார்பில் வியாழக்கிழமை இளைஞர்கள் ரத்ததானம் செய்தனர். 

              பொதுநல சேவை இயக்க உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 25 பேர் ரத்ததானம் செய்தனர். நிகழ்ச்சிக்கு பொதுநலச் சேவை இயக்க மாவட்ட அவைத் தலைவர் அகஸ்டின் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ரத்தின சௌ ந்தரராஜன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். மாவட்டச் செயலாளர் ஆசைத் தாமஸ் முன்னிலை வகித்தார். முகைமை முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி தொடங்கி வைத்தார்.
 
              பொதுச் சேவை இயக்கம் சார்பில் பண்ருட்டியில் நடைபாதை வியாபாரம் செய்யும் 100 பேருக்கும், கடலூர் லாரன்ஸ் சாலையில் நடைபாதை வியாபாரிகள் 100 பேருக்கும் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டன. மாவட்ட பொருளாளர் சண்முகம் துணைப் பொதுச் செயலாளர் கிருபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

சிதம்பரத்தில்... 

               சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சார்பில் அன்னை தெரசா பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.  பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவும், பள்ளிக்கு 15 பிளாஸ்டிக் நாற்காலிகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு அரிமா சங்கத் தலைவர் பெரி.முருகப்பன் தலைமை வகித்தார். செயலாளர் அ.ராமச்சந்திரன் வரவேற்றார். வட்டாரத் தலைவர் எம்.கமல்கிஷோர் வாழ்த்துரையாற்றினார். பொருளாளர் எஸ்.பாலநாகசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Read more »

நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் சார்பில் ஆகஸ்ட் 30 முதல் பாதுகாப்பு வார விழா

நெய்வேலி:

            நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் பாதுகாப்பு வார விழா இந்த ஆண்டு ஆகஸ்ட் 30 முதல் தொடங்கவுள்ளது. 

                   மத்திய பொதுத் துறை நிறுவனமான என்எல்சி நிறுவனம் தொழிலாளர்களின் பாதுகாப்பான பணியை வலியுறுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு வார விழாவை விமரிசையாகக் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டுக்கான பாதுகாப்பு வார விழாவுக்கான ஏற்பாடுகள் நெய்வேலி வட்டம் 11-ல் உள்ள லிக்னைட் ஹாலில் நடைபெற்று வருகிறது. லிக்னைட் ஹால் வளாகத்தில் நிறுவனத்தின் ஒவ்வொரு துறை சார்பிலும் பிரம்மாண்டமான கண்காட்சி அரங்குகள் அமைக்கும் பணி வேகமாக நடைபெறுகிறது.

Read more »

மாவட்ட அளவிலான பைக்கா போட்டி: நாளை கடலூரில் துவக்கம்

கடலூர்:

             மாவட்ட அளவிலான பைக்கா திட்ட விளையாட்டுப் போட்டிகள் நாளை மற்றும் 29ம் தேதிகளில் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடக்கிறது.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் விடுத் துள்ள செய்திக்குறிப்பு:

                மத்திய அரசின் பைக்கா திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நாளை 28, 29ம் தேதிகளில் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடக்கிறது.வாலிபால், கால்பந்து, கபடி, கூடைப்பந்து, கோ கோ, ஹாக்கி ஆகிய போட்டிகள் 28ம் தேதியும், இறகுப்பந்து, மேசைப்பந்து, பளு தூக்குதல், 100 மீ., ஓட்டம், 400, 800, 1500, 3000 மீ., "ரிலே' ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் ஆகிய போட்டிகள் 29ம் தேதியும் நடக்கிறது. போட்டிகள் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக நடத்தப்படுகிறது.

                        மாவட்ட அளவில் நடத்தப்படும் இந்த போட்டிகளுக்காக கடந்த 6ம் தேதி முதல் 22ம் தேதி வரை ஒன்றிய அளவில் போட்டிகள் நடத்தப்பட் டுள்ளது. அதில் தடகள போட்டிகளில் முதலிடம் பெற்றவர்களும், குழுப் போட்டிகளில் சிறந்த வீரர்களையும் தேர்வு செய்து ஒன்றியம் சார் பில் கலந்து கொள்ளலாம். போட்டியில் 16 வயதிற் குட்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

                  பங்கேற்க விரும்புவோர் அதற்குரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஒன்றிய அளவில் விளையாட்டுப் போட்டி நடத்திய பள்ளி தலைமை ஆசிரியரின் கையெழுத்துடன் போட்டி துவக்க நாளன்று ஒப்படைக்க வேண்டும்.ஒன்றிய அளவில் நடத்தப்படாத கூடைப்பந்து, ஹாக்கி, மேசைப் பந்து, இறகுப் பந்து, பளு தூக்குதல் ஆகிய போட்டிகளுக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த 16 வயதிற்குட்பட்டவர்களை போட்டிக்கு ஒருவரை தேர்வு செய்து பள்ளி மாணவர் எனில் தலைமை ஆசிரியரிடமும், மற்றவர்கள் ஊராட்சி தலைவரிடம் விண்ணப்பத்தில் கையெழுத்து பெற்று அனுப்பி வைக்க வேண்டும்.
 
                        போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு 150 ரூபாயும், இரண்டாம் பரிசு 100 ரூபாய், மூன் றாம் பரிசு 75 ரூபாய் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மாவட்ட அளவிலான இந்தப் போட்டியில் தேர்வு செய்யப்படுபவர்கள் மாநில அளவிலான போட்டிக்கும், அதில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலான போட்டிகளுக்கும் அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவார்கள்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

மீன்பிடிக்கச் சென்ற ஐந்து மீனவர்கள் மாயம்:ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தீவிரம்

கடலூர்:

              கடலூரிலிருந்து விசைப்படகில் மீன் பிடிக்க சென்று காணாமல் போன ஐந்து மீனவர்களை, ஹெலிகாப்டர் மற்றும் கப்பல் மூலம் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

              கடலூர் அடுத்த தம்னாம்பேட்டையைச் சேர்ந்தவர் அஞ்சாபுலி (47). இவருக்கு சொந்தமான விசை படகில், கடந்த 19ம் தேதி அதிகாலை கடலூர் முதுநகர் நஞ்சம்பேட்டை சங்கரன்(50), ஏழுமலை (53),பெரியக்குப்பம் கருப்பர்(55), சித்திரைப்பேட்டை சேகர்(55) உள்ளிட்ட 5 பேர் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். படகின் உரிமையாளர் அஞ்சாபுலி கடந்த 20ம் தேதி மாலை மொபைல் போன்மூலம் தொடர்பு கொண்டு பேசியபோது, வீராம்பட்டினத்திற்கு கிழக்கே மீன் பிடித்துக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

                    இந்நிலையில் கடந்த 23ம் தேதி திரும்ப வேண்டிய படகு நேற்று மாலை வரை கரைக்கு திரும்பவில்லை. மீன் பிடிக்க சென்றபோது, படகில் 1,500 லிட்டர் டீசல் இருந்துள்ளது. இதனால் 23ம் தேதி வரையில் மட்டுமே டீசல் இருப்பு இருந்திருக்கும். தற்போதைய நிலையில் படகில் டீசலும் இருக்க வாய்ப்பில்லை என மீனவர்கள் சந்தேகிக்கின்றனர்.இதைத்தொடர்ந்து நேற்று முன் தினம் காலை அஞ்சாபுலி மற்றும் தம்னாம்பேட்டை ஆறுமுகம் ஆகியோர் தனித்தனியே இரண்டு படகுகளில் சென்று காணாமல் போன மீனவர்களை கடலுக்குள் தேடினர். 

                     ஆனால் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. நேற்று காலை கடலூர் மீனவர்கள் மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள், ஊர்பிரமுகர்கள் என, 50க்கும் மேற்பட்டோர் கலெக்டர் சீத்தாராமனை சந்தித்து காணாமல் போன மீனவர்களை தேடித் தருமாறு மனு கொடுத்தனர். மேலும், தற்போதுள்ள நீரோட்டத்தில் படகு இலங் கையை நோக்கி காற்றில் அடித்து சென்றிருக்கும் என்பதால், இலங்கை கடல் பகுதியில் மீனவர்களை தேடவேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கடலூர் கலெக்டர் சீத்தாராமன் கூறுகையில்,

            "காணாமல் போன மீனவர்கள் குறித்து அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. கோஸ்டல் கார்டு ஹெலி காப்டர் ஒன்றும், ரோந்து கப்பல் ஒன்றும் மீனவர்களை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது' என்றார்.

Read more »

திட்டக்குடியில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பிறந்த நாள் விழா

திட்டக்குடி:

            திட்டக்குடியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் 53வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

             பேரூராட்சி சேர்மன் மன்னன் தலைமையில் வதிஷ்டபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 150 மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருட்கள் வழங்கப்பட்டது. ஒன்றிய துணை செயலாளர் அண்ணா துரை, கவுன்சிலர்கள் ராஜேந்திரன், செல்வகுமார், முத்துவேல், செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர். நகர அண்ணா துரை நற்பணி மன்றம் சார்பில் முன்னாள் சேர்மன் தேவேந்திரன் தலைமையில் முன்னாள் நகர செயலாளர் ராவணன் முன்னிலையில் அரசு மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு பால், பிரட், பழம் வழங்கப்பட்டது. கொடிக்களம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரேஷன் கடை தொ.மு.ச., மாநில துணைத்தலைவர் தலைமையில் மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

               இதில் ஊராட்சி தலைவர் உமாராணி, அரசு வக்கீல் புகழேந்தி உட்பட பலர் பங்கேற்றனர். தொளார் ஊராட்சியில் தி.மு.க., மாவட்ட பிரதிநிதி மதியழகன் தலைமையில், ஊராட்சி தலைவர் ஜெயமணி முன்னிலையில் நடந்தது. பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தில் நகர செயலாளர் குமரவேல் தலைமையில், இளைஞரணி அமைப்பாளர் காதர் முன்னிலையில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மதியழகன், கவுன்சிலர் அருள், நிர்வாகிகள் ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, மனோகரன், பாபு, ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

நல்லூர் ஒன்றிய தே.மு.தி.க., நிர்வாகிகள் தி.மு.க.,வில் ஐக்கியம்

சிறுபாக்கம்:

             நல்லூர் ஒன்றிய தே.மு.தி.க., நிர்வாகிகள் ஐம்பது பேர் தி.மு.க.,வில் இணைந்தனர். நல்லூர் ஒன்றியத்தை சேர்ந்த மாளிகைமேடு, கீழக்குறிச்சி கிராமங்களை சேர்ந்த தே.மு.தி.க., நிர் வாகிகள் ஐம்பது பேர் தங்கவேல், ராமசாமி, கண்ணன் ஆகியோர் தலைமையில் ஒன்றிய தி.மு.க., செயலாளர் பாவாடைகோவிந்தசாமி முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர். அப்போது சேர்மன் ஜெயசித்ரா, ஒன்றிய கவுன்சிலர்கள் சக்திவிநாயகம், வெங்கடாசலம், துணை செயலாளர் கருப்புசாமி உடனிருந்தனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் இருதய சிகிச்சைக்காக 52 சிறுவர்கள் பிரபலமருத்துவமனைகளுக்கு அனுப்பி வைப்பு

சிதம்பரம்:

              இருதய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை சிகிச்சைக்காக வழியனுப்பும் விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.,பன்னீர்செல்வம் பங்கேற்று கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

                  கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து இருதய நோயால் பாதிக்கப்பட்ட 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை அளிக்க சிதம்பரம் அரசு மருத்துவமனையில் இருந்து வழியனுப்பும் விழா நடந்தது. விழாவிற்கு துணை இயக்குனர் மீரா தலைமை தாங்கினார். பொது சுகாதார இயக்குனர் பொற்கை பாண்டியன் முன்னிலை வகித்தார். அமைச்சர் எம்.ஆர்.கே., பன்னீர்செல்வம் பங்கேற்று இருதய அறுவை சிகிச்சைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிறுவர்களை சென்னை மருத்துவமனைகளுக்கு கொடி அசைத்து வழி அனுப்பி வைத்தார்.

அப்போது எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறியது: 

                     தமிழகம் முழுவதும் இருதய நோயால் பாதிக் கப்பட்ட பள்ளி சிறுவர்களுக்கு கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் மூலம் படிப்படியாக உயிர் காக்கும் இருதய அறுவை சிகிச்சைகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் இருதய நோயால் பாதிக்கப்பட்ட 15 வயதிற்குட்பட்ட 3 ஆயிரத்து 264 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப் பட்டுள்ளது. மேலும் ஆயிரத்து 22 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

                இதில் கடலூர் மாவட்டத்தில் 113 சிறுவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய உள்ளனர். முதல் கட்டமாக இன்று மாவட்டத்தில் இருந்து தேர்ந் தெடுக்கப்பட்ட 52 பேர் அறுவை சிகிச்சைக்காக குலோப், செட்டிநாடு, பிம்ஸ் போன்ற 8 பிரபல மருத் துவமனைகளில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றனர். தொடர்ந்து இன்னும் 2 மாதங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் அறுவை சிகிச்சை செய்யப்படும்.இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Read more »

வடக்கு சென்னிநத்தம் பஸ் நிறுத்தம்:கலெக்டருக்கு பொதுமக்கள் மனு

சேத்தியாத்தோப்பு:

           சேத்தியாத்தோப்பில் வடக்கு சென்னிநத்தம் சாலை சந்திப்பில் வேகத் தடை அமைக்கவும் பஸ் நிறுத்தம் உருவாக்கக் கோரியும் பொதுமக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சேத்தியாத்தோப்பு வடக்கு சென்னிநத்தம் பகுதி பொதுமக்கள் சார்பில் கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு:

            சேத்தியாத்தோப்பு பேரூராட்சிக்குட்பட்ட வடக்கு சென்னிநத்தம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் ஊராட்சி சாலையும், நெடுஞ்சாலையும் சேருமிடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. சாலை சந்திக்கும் பகுதியில் வடபுறம் மற்றும் தென்புறம் பகுதியில் வேகத்தடை அமைத்து தர வேண்டும்.மேலும் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் பஸ் ஏறவும், இறங்கவும் 2 கி.மீ., தூரம் செல்ல வேண்டி உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் பஸ் நிறுத்தம் உருவாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பபட்டுள்ளது.

Read more »

சிதம்பரம் ராகவேந்திரா கல்லூரியில் ரத்த தான முகாம்

கிள்ளை:

                சிதம்பரம் அருகே ராகவேந்திரா கலை அறிவியல் கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது.

                  செஞ்சுருள், நாட்டு நலப்பணித் திட்டம், காமராஜர் அரசு மருத்துவமனை மற்றும் அரிமா சங்கம் சார்பில் நடந்த ரத்ததான முகாமை தலைவர் வெங்கடேசன் துவக்கி வைத்தார். அறக்கட்டளை தலைவர் மணிமேகலை கோவிந்தராஜன், மாவட்ட துணை நிலை ஆளுனர் சுவேதாகுமார் முன்னிலை வகித்தனர். மருத்துவ அலுவலர் நடராஜன், ரத்த வங்கி அலுவலர் சரவண குமார், காதர் அலி, செந்தில்வேலன், கல்லூரி ஆலோசகர் கனகசபை, முதல்வர் அப்துல்ரகிம், முருகப்பன் உள்ளிட்ட பலர் பேசினர். கல்லூரி மாணவர்கள் ரத்ததானம் வழங்கினர். ஏற்பாடுகளை கிளை தலைவர் தர்பாரண்யன் செய்திருந்தார்.

Read more »

வியாழன், ஆகஸ்ட் 26, 2010

டெல்டா விவசாயிகளுக்கு உதவுமா வேளாண் துறை?

கடலூர் அருகே பாரம்பரிய முறையில் தயாரான நெல் நாற்றுகளை, நிலத்துக்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டு இருக்கும் விவசாயத் தொழிலாளர்கள்.



கடலூர்: 

           டெல்டா பாசன விவசாய நிலங்களில் போதுமான தண்ணீர் இருந்தும் சம்பா சாகுபடி பணிகள் இன்னமும் தொடங்கப்படவில்லை.16 லட்சம் ஏக்கர் காவிரி டெல்டா பாசன விவசாயிகள், தங்களது பாரம்பரிய முறைகளையே நம்பியுள்ளனர். 

                மேட்டூர் அணை திறந்தால்தான் சேற்றில் கால்வைக்க முடியும் என்ற நிலை பன்னெடுங்காலப் பழக்கம். டெல்டா பாசனப் பகுதிகளில் குறிப்பாகக் கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிகமாக தென்மேற்குப் பருவமழை பெய்துள்ளது.மேட்டூர் அணையில் இருந்து 3 டி.எம்.சி. தண்ணீர் திறந்தால் எந்த அளவுக்கு தண்ணீர் தேங்குமோ, அந்த அளவுக்கு மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

                  கடந்த 10 தினங்களுக்கு மேலாக இந்த நிலை நீடிக்கிறது. மழை காரணமாக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டு உள்ளது.ஆனால் சம்பா நெல் சாகுபடிப் பணிகள் இன்னமும் தொடங்கப்படவில்லை. கோடை உழவும் பெரும்பாலான நிலங்களில் நடைபெறவில்லை என்கிறார்கள் விவசாயிகள்.ஆடிப் பட்டம் தேடிவிதை என்பது பழமொழி. இந்த ஆண்டு ஓரளவுக்கு நல்ல மழை பெய்து இருக்கும் நிலையில், பாரம்பரிய விவசாயிகள் ஆடிப்பட்டம் தொடங்கும் ஆகஸ்ட் முதல் வாரத்திலாவது வேளாண் பணிகளைத் தொடங்கி இருக்க வேண்டும். 

                  ஆனால் தொடங்கவில்லை.இனி மேட்டூர் அணை திறக்கப்பட்டு, மீண்டும் வாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய பின்னர்தான் வேளாண் பணிகள் தொடங்கப்படும் என்றால், டெல்டா பாசனப் பகுதிகளில் சம்பா நாற்று நடவுப் பணிகள் அக்டோபர் கடைசியில்தான் முடிவடையும். பிப்ரவரி மாதத்துக்கு மேல்தான் சம்பா அறுவடை.  இடையில் வடகிழக்குப் பருவமழையின் தாக்கத்தையும் சந்திக்க நேரிடும்.

               ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மழை திருப்தியாக இருந்தும், சம்பா சாகுபடிப் பணிகள் பிந்திப் போவதும், சம்பாவுக்குப் பின் 10 லட்சம் ஏக்கரில் உளுந்து பயிரிட முடியாமல் போவதும், வேளாண்துறை டெல்டா விவசாயிகளுக்கு முறையான அறிவிப்புகளை வெளியிடாததும், பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்ப விவசாயத்தை மாற்றிக் கொள்ள, விவசாயிகளைத் தயார் செய்யாததுமே காரணம் என்று, முன்னோடி விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

               முன்பெல்லாம் சம்பா நெல் என்றால் குறைந்தபட்சம் 6 மாதப் பயிர். இன்று 6 மாத விவசாயத்துக்குத் தண்ணீர் கிடைப்பது இல்லை. விவசாயிக்கும் பொறுமை இல்லை. எனவே குறுகியகால நெல் ரகங்களை வந்துவிட்டன. ஆனால் பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப அவற்றையாவது காலாகாலத்தில் பயிரிட்டு, நல்ல மகசூலுக்கு வழிவகுக்கப்படுகிறதா என்றால், இல்லை என்கிறார்கள் விவசாயிகள்.இந்த ஆண்டு மழை எப்படி இருக்கும் எப்போது சம்பா சாகுபடியைத் தொடங்கலாம், எந்தரக நெல்லை விதைக்கலாம், மேட்டூர் அணை நீர் எத்தனை நாளுக்குக் கிடைக்கும் என்ற எந்த அறிவிப்பையும் வேளாண்துறை வெளியிடவில்லை என்கிறார்கள் டெல்டா விவசாயிகள்.

                இந்த ஆண்டு ஆகஸ்ட் 20ல் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வுமையம் அறிவித்தது. அதன்படி மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது. வானிலை ஆய்வுமைய அறிவிப்புக்கு ஏற்ப விவசாயிகளைத் தயார் படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டியது வேளாண் துறையின் பொறுப்பு. ஆனால் அதைச் செய்ய வில்லையே என்கிறார் முன்னோடி விவசாயியும், மாவட்ட உழவர் மன்றக் கூட்டமைப்பின் தலைவருமான பி.ரவீந்திரன்.

                  பன்னாட்டு இயற்கை பேரிடர் மேலாண்மை முகமை என்ற தொண்டு நிறுவனம், வானிலை ஆய்வு மையங்களுடன் இணைந்து, விவசாயிகளுக்கு வானிலை முன்னறிவிப்புகளையும் ஆலோசனைகளையும், 17 நாடுகளில் வழங்கி வருகிறது. இந்த முகமை தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பாசனப்பகுதிகளுக்கு இந்த ஆலோசனைகள் வழங்கும் பொறுப்பை அண்மையில் ஏற்றுக் கொண்டு இருப்பதாகவும் ரவீந்திரன் கூறினார். இனியாவது டெல்டா விவசாயத்தில் மாற்றம் ஏற்படுமா?

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior