உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 31, 2009

விளையாட்டு - நிகழ்வுகள் 2009



பிப். 1 

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது,  இந்தியாவின் மகேஷ் பூபதி - சானியா மிர்சா இணை!

பிப். 5

கொழும்புவில் நடைபெற்ற 4-வது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்திய தோனி தலைமையிலான இந்திய அணி, தொடர்ச்சியாக 9-வது ஒரு நாள் போட்டியை கைப்பற்றி புதிய சாதனை படைத்தது. 

மார்ச் 24
 
மக்களவை தேர்தல் நடைபெறும் காலக்கட்டத்திலேயே இரண்டாவது இந்தியன் ப்ரீமியர் லீக்கும் நடக்க விருந்ததால், அந்தப் போட்டிகள் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு சற்றே ஏமாற்றத்தை அளித்தது.

ஏப்.6
 
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார், இந்தியாவின் ராகுல் டிராவிட். அவர் 183 கேட்ச்களுடன், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மார்க் வாஹின் சாதனையை முறியடித்தார். 

ஏப்.7 

நியூஸிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில், 41 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை  வென்று வரலாறு படைத்தது.

மே 24
 
தென் ஆப்பிரிக்காவில் நடந்த இரண்டாவது ஐபிஎல் இருபது ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ்  பெங்களூரு அணியை வீழ்த்திய ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

ஜூன் 7
   
பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் இரட்டையர் சாம்பியன் பட்டத்தை 3ஆம் தரவரிசையில் உள்ள இந்திய - செக்.குடியரசு இணையான லியாண்டர் பயஸ் - லூகாஸ் லூயி இணை வென்றது.

ஜூன் 20

இந்தோனேஷியாவில் நடந்த சூப்பர் சீரிஸ் பேட்மின்டன் தொடரில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஜூன் 21 

இலங்கிலாந்தில் இரண்டாவது இருபது ஓவர் உலகக் கோப்பை நடைபெற்றாது. பரபரப்பான இறுதிப் போட்டியில், இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து, பாகிஸ்தான் அணி 2009-ன் சாம்பியன் ஆனது.

ஜூலை 5 

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றியது, தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. 

ஜூலை 5

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை வென்ற சுவிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர், 15-வது கிரான்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி, பீட் சாம்ப்ராஸ்சின் உலக சாதனையை முறியடித்தார். 

ஜூலை 20 

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. லாட்ஸ் மைதானத்தில் 75 வருடங்கள் கழித்து வெற்றி பெற்றதால் புதிய சரித்திரம் படைத்தது அந்த அணி
.

ஜூலை 23
 
முதல் தரப் போட்டிகளில் 28,067 ரன்களைக் குவித்து, 60 ஆண்டுகாலமாக ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் மேதை டான் பிராட்மேன் வைத்திருந்த சாதனையை, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் துவக்க வீரர் ஜஸ்டின் லாங்கர்  முறியடித்தார். இதுவே முதல் தர போட்டிகளில் அதிக பட்ச ரன்களாகும். 

ஆக. 20 

உலகின் அதிவேக மனிதன் என்று போற்றப்படும் ஜமைக்காவின் உசைன் போல்ட், பெர்லினில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்  200 மீட்டர் ஓட்டப்பந்தயக்தில் 19.19 வினாடிகளில் இலக்கை எட்டி மீண்டும் ஒரு புதிய உலக சாதனை படைத்தார்
.
செப். 6 

உலகிலேயே மிக அதிக அளவில் வருவாய் ஈட்டும் முதல் 10 கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது, பிரபல ஃபோர்ப்ஸ் இதழ். இதில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலிடம் பெற்றார்.

செப். 7

சர்வதேச இருபது ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பான்டிங் அறிவித்தார். 

செப். 7
 
2009-ஆம் ஆண்டுக்கான உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி தங்க பதக்கம்  வென்றுள்ளார். கடந்த 139 ஆண்டுகள் பில்லியர்ட்ஸ் விளையாட்டில், உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தில் கைப்பற்றிய இரண்டாவது இந்திய வீரர் இவரே. 

செப். 15 

குஜராத் கிரிக்கெட் வாரியத் தலைவராக, அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி பொறுப்பேற்றார்.

செப். 23
 
டென்மார்க்கில் நடைபெற்ற உலக மல்யுத்த போட்டிகளின் 74 கிலோ எடைப் பிரிவில், இந்தியாவின் ரமேஷ் குமார் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். உலக சாம்பியன் போட்டிகளில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் வென்ற இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற ரமேஷ் குமார் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர். 

அக். 5 

மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் 6-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்து  முடிந்தது. இதில், ஆஸ்திரேலிய அணி இரண்டாவது முறையாக தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்றது.

அக். 28
 
கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் பல வென்ற ஓய்வு பெற்ற அமெரிக்க டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே அகாசி போதை மருந்து  பயன்படுத்தியதை 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒப்புக்கொண்டார். அவர் எழுதி உள்ள புத்தகத்தில் இதை தெரிவித்தார்.  டென்னிஸ் உலகில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

நவ. 8
 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை, ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. 

நவ. 10

இந்திய கிரிக்கெட் அணியின் 1983 உலகக் கோப்பை ஹீரோ மொகீந்தர் அமர்நாத்திற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், 2008-09 ஆம் ஆண்டிற்கான சி.கே. நாயுடு வாழ் நாள் சாதனைக்கான விருதை வழங்கி கௌரவித்தது.

நவ. 14


இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 20-வது ஆண்டை நிறைவு செய்தார். இதையொட்டி, அவருக்கு பாராட்டுகள் குவிந்தன.

நவ. 26

கான்பூரில் இலங்கைக்கு எதிராக நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. 77  ஆண்டுகள் டெஸ்ட் விளையாடி வரும் இந்திய அணிக்கு கிடைத்த 100-வது டெஸ்ட் வெற்றி இதுவாகும்.

டிச.3
 
நடப்பு ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் சாய்னா நேவால் தேர்வு செய்யபட்டுள்ளார். அவர் இந்த ஆண்டு மகளிருக்கான சர்வதேச பேட்மிண்டன் தரவரிசைப் பட்டியல் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிச. 4

இல‌ங்கை‌க்கு எ‌திரான மூன்றாவது டெ‌ஸ்‌ட் போ‌ட்டி‌யி‌ல் அபாரமாக ‌விளையாடிய இ‌ந்‌திய ‌வீர‌ர் சேவா‌க் 293 ர‌‌ன்‌னி‌ல் ஆ‌ட்ட‌ம்  இழ‌‌ந்தார். இதனால் முச்சதமடித்த ஒரே வீரர் என்ற பெருமையை 7 ர‌ன்‌னி‌ல் நழுவ வி‌ட்டா‌ர்.

டிச. 6
 
மும்பையில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, ஐ.சி.சி.  டெஸ்ட் தரவரிசையில் முதன் முறையாக முதலிடத்தை பிடித்து வரலாறு படைத்தது.

டிச. 12 

உலகின் நம்பர் ஒன் கோஃல்ப் வீரரான டைகர் உட்ஸுக்கு பெண்கள் பலருடன் தொடர்பு இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. அதை  ஒப்புக்கொண்ட் உட்ஸ், சர்வதேச கோல்ஃப் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 

டிச.24
 
கோல்கத்தாவில் நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, இலங்கைக்கு எதிரான தொடரை வென்றது. இதில், கோக்லி தனது முதல் சதத்தை அடித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior