உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 31, 2009

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் ஒழிக்கப்பட்டுள்ளது: பொது சுகாதாரத்துறை இயக்குனர் இளங்கோ பேட்டி

கடலூர்:

               நோய்களுக்கு யூகத்தின் அடிப் படையில் டாக்டர்கள் சிகிச்சை அளிக்க கூடாது என பொது சுகாதாரத்துறை  இயக்குனர் டாக்டர் இளங்கோ தெரிவித்துள்ளார். நோய்கள் மற்றும் கொசுக் களை கட்டுப்படுத்துல் குறித்து ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டம் கடலூரில் நடந்தது. முதன்மை பூச்சியில் வல்லுனர் ஸ்ரீதரன், மண்டல பூச்சியில் வல் லுனர் கஜபதி, மாவட்ட மலேரியா அலுவலர் பாஸ்கரன் மற்றும் சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

                    கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மாநில பொது சுகாதாரத் துறை மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் இளங்கோ  கூறியதாவது: 

                    தற்போது ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றத்தில் கொசுக்களால் வரக்கூடிய நோய்கள் அதிகரித்துள்ளது. டிசம்பர் பனி பொழிவு காலம். ஆனால் மழை பெய்துள்ளது. இதனால் மக்களுக்கு நோய் தாக்கமும், பூச்சிகளுக்கு இனபெருக்க சுழற்சியில் மாற்றம் ஏற்படும் என உலக சுகாதார ஆய்வு நிறுவனம் தெரிவித் துள்ளது. எனவே கொசு ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. பருவநிலையில் சிறு மாற்றம் ஏற்பட் டாலும் மனிதனுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். பிரிட்ஜ், ஏ.சி., உள்ளிட்ட குளிர்சாதனங்களில் தண்ணீர் வடியும் "பான்களில்' உள்ள தண்ணீரில் உருவாகும் கொசுக்கள் தான் டெங்கு, மலேரியா காய்ச்சலை ஏற்படுத்துகிறது.

                        "நமது நலம் நம் கையில்" திட்டம் மூலம் கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், கோவை மாவட்டங்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளன. அதில், முதல் கட்டமாக கடலூர் மாவட்டத்தில் ஒரு ஒன்றியம் தேர்வு செய்து கொசுக் கள் குறித்த விழிப்புணர்வு, கருத்தரங்கம், பயிற்சி, கொசு மருந்து தெளிப்பது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலில் இதுவரை 3016 பேர் பாதித்துள்ளனர். அதில் அதிகபட்சமாக செப்டம்பரில் 913 பேரும், டிசம்பரில் நேற்று வரை 437 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பன்றிக் காய்ச்சல் தமிழகத்தில் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது.

                      சாதாரணமாக 10 சதவீதத்தினருக்கு காய்ச்சல் அறிகுறி இருக்கும். 2007ம் ஆண்டில் 37,05,683 பேரும், கடந்தாண்டு 30,43,893 பேரும், இந்தாண்டில் 27,43,955 பேர் காய்ச்சலில் பாதித் துள்ளனர். காய்ச்சல் அதிகம் காணப்படும் மாதங்களான செப் டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பரில் மட்டும் 50 சதவிதம் பேர் பாதித்துள்ளனர்.  காய்ச்சலுடன் மூட்டு வலி அறிகுறி இருந்தால் சிக்குன் குனியா, மஞ்சள் காமாலை அறிகுறி  இருந்தால் காமாலை அல்லது எலி காய்ச்சல் இருக்கும். ரத்தகசிவு இருந்தால் டெங்கு, வயிற்று வலி இருந்தால் டைபாய்டு, குளிர் ஜூரம் இருந்தால் மலேரியா, வலி இருந்தால் வைரஸ் காய்ச்சல் இருக்கும். நோய்க்கான காரணத்தை கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும். டாக்டர்கள் யூகத்தின் அடிப்படையில் சிகிச்சை அளிக்க கூடாது. ரத்தம், சிறுநீர் சோதனை மூலம் நோயிற்கான காரணத்தை கண்டறியலாம் என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior