கடலூர்:
நடராஜர் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று சிதம்பரம் நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனத்தை முன் னிட்டு எனது தலைமையில், ஒரு கூடுதல் எஸ்.பி., மூன்று டி.எஸ்.பி.,க்கள், 15 இன்ஸ் பெக்டர்கள், 30 சப் இன்ஸ் பெக்டர்கள், 400 போலீசார், 100 ஆயுதப் படை போலீசார், 500 ஊர்க் காவல்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அனைத்து கோபுர நுழைவுவாயில்களிலும் பாதுகாப்பு சாதனங்கள் பொருத்தி சோதனை மேற் கொள்ள, ஒரு இன்ஸ்பெக் டர் தலைமையில் இரண்டு சப் இன்ஸ்பெக்டர்கள், 15 போலீசாரைக் கொண்ட வெடி பொருள் கண்டுபிடிக்கும் குழு அமைக் கப் பட்டுள்ளது. தேர் திருவிழாவை முன் னிட்டு இன்று (31ம் தேதி) சிதம்பரத்தில் போக்குவரத்து மாற்றியமைக்கப் பட்டுள்ளது.
தேர் கிழக்கு வீதியில் பவனி வரும்போது வாகனங்கள் வடக்கு வீதி, 16 கால் மண்டபம், தேரடி பிள்ளையார் கோவில் தெரு, படித்துறை இறக்கம் வழியாக செல்ல வேண் டும். தேர் தெற்கு வீதியில் வரும்போது சீர்காழியிலிருந்து வரும் வாகனங்கள் பச்சையப்பன் பள்ளி சந்திப்பு, மாலகட்டி தெரு, வேணுகோபால் பிள்ளை தெரு வழியாக பஸ் நிலையம் செல்ல வேண்டும். தேர் வடக்கு வீதி வழியாக வரும்போது வாகனங்கள் மேல வீதி, தெற்கு வீதி, வேணுகோபால் பிள்ளை தெரு வழியாக செல்ல வேண்டும். அவசர உதவிக்கு 04144-222201, 04144-222377 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
மாமிச கடைகளை மூட கலெக்டர் உத்தரவு: சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று (31ம் தேதி) தேர் திருவிழாவும், நாளை (1ம் தேதி) ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. அதனையொட்டி சிதம்பரத்தில் இன்றும், நாளையும் மாமிச கடைகள், அசைவ ஓட்டல்களை மூட கலெக்டர் சீத்தாராமன் உத்தரவிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக