உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 31, 2009

பட்டதாரி ஆசிரியர்கள் பதிவு: இணையதளத்தில் வெளியீடு

கடலூர்:

                பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு பதிவு செய்துள்ள மனுதாரர்கள் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட் டுள்ளது.


                 இதுகுறித்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

                  தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மனுதாரர்களின் பெயர் மற் றும் பதிவு மூப்பு விவரங்கள் மாவட்ட தேசிய தகவல் மையம் மூலம் www.cuddalore.tn.nic.in இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


                                       கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பட்டதாரி ஆசிரியர்கள் (தமிழ், ஆங்கிலம், கணிதம், வேதியியல், இயற்பியல், வரலாறு, புவியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல்) முன்னுரிமை உள்ளவர்கள் மற்றும் முன்னுரிமையற்றவர்கள் பெயர், பதிவு எண் மற்றும் பதிவு மூப்பு விவரங்களை இணைய தளம் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம். ஏதேனும் விடுபாடுகள் மற்றும் சந்தேகங்கள் இருப்பின் தங்களது பதிவு அடையாள அட்டை மற் றும் அசல் கல்விச் சான்றுகளுடன் வரும் ஜனவரி 5ம் தேதிக்குள் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் தொடர்பு கொண்டு சரி செய்து கொள்ள வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior