கடலூர்:
தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்க அரசு ஊழியர்களே காரணம் என எம்.பி., அழகிரி பேசினார். கடலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத் தின் முதலாம் ஆண்டு விழா, சங்க அலுவலகம் திறப்பு விழா, மாநில நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா கடலூரில் நடந்தது.
சங்கத் தலைவர் ராஜேந்திரபால் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கலைமணி வரவேற்றார். செயலாளர் திருமால் ஆண்டறிக்கை படித் தார். பொருளாளர் ஹரிதாஸ் வரவு செலவு அறிக்கை படித்தார், செயல் தலைவர் கண்ணன் தீர்மானங்களையும், மாநில துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் சங்க சட்ட விதி திருத் தங்கள் குறித்து பேசினர். விழா மலரை எம்.பி., வெளியிட அதனை எம்.எல்.ஏ., அய் யப்பனும், புதிய அலுவலக சாவியை சேர்மன் தங்கராசு வழங்க அதனை செயல்தலைவர் கண்ணன் பெற்றுக் கொண்டனர். விழாவில் டி.ஆர்.ஓ., நடராஜன், துணை சேர்மன் தாமரைச் செல்வன் உள் ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் எம்.பி., அழகிரி பேசுகையில், மக்களுக்கான பணிகள் குறித்த அதிகாரிகளின் திட்டங் களை மக்கள் பிரதிநிதிகளான நாங்கள் சட்ட முன்வடிவாக கொண்டு வருகிறோம். அதன் மூலம் இயற்றப்படும் சட்டங் களை 2 சதவீதமே உள்ள அரசு ஊழியர்கள்தான் நிறைவேற்றுகின்றனர். தமிழ்நாடு சிறந்த மாநிலமாக விளங்க அரசு ஊழியர்கள் தான் காரணம். தமிழக அரசு, அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறது. ஓய்வு பெற்ற உங்களின் கோரிக்கைகள் நியாயமானது. முக்கியமாக மருத் துவ நிதி உதவி திட்டத்தில் 100 ரூபாய் பிடித்தம் செய்து பென்ஷன் வாங்குபவருக்கு மட்டுமே ஒரு லட்சம் அறிவித்துள்ளது. அதனை மாற்றி கணவன், மனைவி இருவருக்கும் தலா ஒரு லட்சம் வழங்க வேண்டும் என்ற உங்களின் கோரிக்கை நியாயமானது. உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்றார்.
எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசுகையில், முதல் வர் கருணாநிதி ஐந்தாவது முறையாக பொறுப்பேற்ற பின் ஓய்வூதியர்கள், அரசு அலுவலர்களுக்கு பல் வேறு சலுகைகள் மற் றும் திட்டங்களை அறிவித்து வருகின்றார். கடந்த மூன்றாண்டுகளில் அரசு ஊழியர்கள், அலுவலர்கள் சார்பில் எந்த வித போராட்டங்களும், அரசிடம் கோரிக்கைகளையும் வைக்கப்படுவதில்லை. காரணம் முதல் வர் கருணாநிதி உங்கள் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வருகிறார் என பேசினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக