உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 31, 2009

தொழில் முனைவோருடன் கடன் வழங்கல் கலந்தாய்வு கூட்டம்

கடலூர்:

                         தொழில் முனைவோருக்கு கடன் வழங்குவது குறித்த கலந்தாய்வு கூட்டம் மாவட்ட தொழில் மையத்தில் நடந்தது. மத்திய அரசின் பிரதம மந்திரியின் வேலை உருவாக்கும் திட்டத்தில் தொழில் முனைவோருக்கு  அதிபட்சமாக 25 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. அதில் 35 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.  இந்த திட்டத்தின் கீழ் கடன் வழங் குவதற்கான கலந்தாய்வு கூட்டம் நேற்று கடலூரில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் நடந்தது. அதில் 200 தொழில் முனைவோர்கள் பங்கேற்றனர்.

                  அவர்களின் விண்ணப்பங்களை குழுவின் உறுப்பினர்களான மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராஜகணேஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கபிலன், கதர் கிராம தொழில் வாரிய உதவி இயக்குநர் வாசன், சென்னை கதர் கிராம தொழில் ஆணையத்தின் கண்காணிப்பு அதிகாரி ராமசுப்ரமணியன், தாட்கோ மாவட்ட மேலாளர் துளசிதரன், மாவட்ட கண்காணிப்பு அதிகாரி பாண்டியன் ஆகியோர் ஆய்வு செய்து வங்கிகளுக்கு பரிந்துரை செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior