உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 31, 2009

மாணவர்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை: கலெக்டர், எஸ்.பி., பங்கேற்பு

கடலூர்:

              பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்து தலைமை ஆசிரியர்களுடனான ஆலோசனை கூட் டம் கடலூரில் நடந்தது. பள்ளி வாகனங்களில் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என  ஐகோர்ட் அறிவுருத்தியதை தொடர்ந்து நேற்று மாவட்டத்தில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடந்தது.

              கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் முன்னிலை வகித்தார். டி.ஆர்.ஓ., நடராஜன், வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெயக்குமார், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் நடனசபாபதி, விருத்தாசலம் கல்வி மாவட்ட கல்வி அதிகாரி குருநாதன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். மாவட்டத்தில் அரசு அனுமதி பெறாத 88 பள்ளிகள் உட்பட மொத் தம் 736 பள்ளிகள் உள் ளன. ஆனால் நேற்றைய கூட்டத்தில் 434 பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் மட்டுமே பங்கேற்றனர். கூட்டத்தில் பள்ளி வாகனங்களில் வரும் மாணவர்களின் பாதுகாப் பிற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட் டது. அதில், பள்ளி வாகனங்களை கலாண்டுக்கு ஒரு முறை வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் தகுதி ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும். பள்ளி வாகனங்களில் பள்ளியின் பெயர், தொலைபேசி எண் எழுதியிருக்க வேண்டும்.

                      முதலுதவி பெட்டி கட்டாயம் வைத்திருக்க வேண்டும். பள்ளி வாகனங்கள் வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது. மழை காலங்களில் பள்ளியின் கட்டடத்தின் உறுதி தன்மையை உறுதி செய்ய வேண்டும், பள் ளியின் படிகட்டுகள் உறுதியாக இருக்க வேண்டும்.  ஒவ்வொரு பள்ளியிலும் கட்டாயம் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தை நடத்தி பெற்றோர் களின் கருத்தை கேட்டறிய வேண்டும் என அறிவுருத்தப்பட்டது. முதன்மை கல்வி அலுவலரின் உதவியாளர் அறிவழகன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior