உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 31, 2009

வரம்பு மீறினால் கடும் நடவடிக்கை: எஸ்.பி., எச்சரிக்கை

கடலூர்:

                 புத்தாண்டு கொண் டாட்டத்தில் பெண்களிடம் சில்மிஷம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., அஷ்வின் கோட் னீஸ் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

                       ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அசம்பாவிதம், குற்றச் செயல்களை தடுத்திட மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று (31ம் தேதி) மாலை 6 மணி முதல் 1ம் தேதி மாலை 6 மணி வரை மாவட்டத்தில் உள்ள ஏழு சோதனைச் சாவடிகள் அமைத்து வாகன தணிக்கை நடக்கிறது.


வாகன தணிக்கையின் போது ஓட்டுனர்கள் வாகனத்திற்கு தேவையான அனைத்துச் சான்று நகல்களும் வைத்திருக்க வேண் டும். ஓட்டுனர்கள் குடிபோதையில் இருந்தால் மோட்டார் வாகனச் சட்ட விதிப்படி அபராதமும், ஓட்டுனர் உரிமம் ரத்துச் செய்யப்படும். நள்ளிரவில் அனைத்து கோவில்கள், முக்கிய சாலைகள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங் கள், கடை வீதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், குற்ற நடவடிக்கை தடுக்கவும் குழு அமைக்கப்பட் டுள்ளது. டாஸ்மாக் கடைகள், கேளிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க இரு சக்கர வாகனக் குழு அமைக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு தினத்தில் பெண்களுக்கு எதிரான குற்ற நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். புத்தாண்டு தின அவசர உதவிக்கு 04142-284350, 04142-284333 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior