உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 29, 2009

மண்டகப்படியின்றி நிலைக்கு வரும் நடராஜர் கோவில் தேரோட்டம்

சிதம்பரம் :

                 சந்திர கிரகணத்தையொட்டி சிதம் பரம் நடராஜர் கோவில் தேர் மேல வீதி சந்திப்பில் மண்டகப்படி இல் லாமல் நேராக நிலைக்கு வருகிறது. லட்சார்ச்சனை பூஜைகளும் விரைவாக முடிக்கப்படுகிறது.

                     சிதம்பரம் நடராஜர் கோவில் மார் கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங் கியது. தினமும் காலை பஞ்சமூர்த்திகள் வீதியுலா, இரவு பல்வேறு அலங் காரத்தில் சாமி வீதியுலா நடந்து வருகிறது. முக்கிய திருவிழாவான தேர்த் திருவிழா வரும் 31ம் தேதி நடக்கிறது. வழக்கமாக தேர்த்திருவிழா அன்று அதிகாலை 5மணிக்கு நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாள் சித்சபையில் இருந்து தேருக்கு எழுந்தருள செய்யப்பட்டு நகர வீதிகள் வழியாக தேரோட்டம் நடக்கும்.பகல் 12 மணியளவில் வடக்கு வீதி சந்திப்பில் தேர் மண்டகபடியாகி அங்கு பருவதராஜகுல சமுதாயத்தினரின் சம்பிராதய பூஜைகளுக்கு பிறகு மீண்டும் 4 மணிக்கு புறப்பட்டு தேர் நிலைக்கு வரும். இரவு 8 மணியளவில் தேரில் இருந்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள செய்யப் பட்டு ஏக கால லட்சார்ச்னை, அதிகாலை 3 மணிமுதல் 6 மணி வரை ஆயிரங்கால் மண்டப முகப்பில் நடராஜர் சமேத சிவகாம சுந்தரி அம்பாளுக்கு மகா அபிஷேகம் நடக்கும்.

                 ஆனால் இந்த ஆண்டு வரும் 1ம் தேதி அதிகாலை 12.21மணிக்கு சந்திர கிரகணம் வருகிறது. அதையொட்டி பூஜைகள் முன்கூட்டியே முடிக்க வேண்டும் என்பதால் தேர் வடக்கு வீதி சந்திப்பில் நிற்காமல் நேராக நிலைக்கு வருகிறது. மாலை 4 மணி அளவில் சாமியும் தேரில் இருந்து ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந் தருள செய்யப்பட்டு உடனடியாக ஏக லட்சார்ச்சனை தொடங்குகிறது. இரவு 8 மணிக்குள் அனைத்து பூஜைகளும் முடிக்கப்படுகிறது.சந்திரகிரகணம் 1.23 மணிக்கு முடிந்த பிறகு மீண்டும் பூஜைகள் தொடங்கி அதிகாலை 3 மணிக்கு நடராஜர், சிவகாமசுந்தரி ஆயிரங்கால் மண்டப முகப்பில் எழுந்தருள செய் யப்பட்டு மகா அபிஷேகம் நடக்கிறது. திருவாபரண அலங்காரம், சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் வீதியுலா, அர்ச்சனைகள் நடக்கிறது. இதனால் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் நடனமாடியபடி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் தரிசனம் 2 மணிக்கு மேல் தான் நடக்கும் என தெரிகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior