உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 29, 2009

வார்டு புயல் நிவாரண உதவி கடலூர் தாலுகாவுக்கு கிடைக்குமா?

கடலூர் :

                  வார்டு புயலால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.இந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தாமதமாக துவங்கியது. ஓரளவு மழை பெய்து விட்டதும் பட்டத்தோடு பயிர் செய்திட விவசாயிகள் பணிகளை வேகமாக துவக்கினர். வேர்க்கடலை, வெங்காயம், கத் தரி பயிரிட்டனர். ஏற்கனவே சம்பா நெல் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தது.இத்தருணத்தில்தான் மீண்டும் வங்கக்கடலின் தென்கிழக்கில் நிலை கொண்டிருந்த வார்டு புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 11ம் தேதி முதல் 18ம் தேதி வரை கனமழை கொட்டி தீர்த்தது.

                      சற்றும் எதிர்பாராமல் தாமதமாக பெய்த இந்த தொடர்மழையினால் ஏற்கனவே விவசாயிகள் புஞ்சை நிலத்தில் பயிர் செய்த மணிலா, உளுந்து பயிர்களும், காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் தாலுகாக்களில் பூக்கும் தருவாயில் இருந்த நெல், அறுவடைக்கு தயாராக இருந்த நெல் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. கடலூர் தாலுகாவில் ராமாபுரத்தில் பயிர் செய் யப்பட்டிருந்த பூச் செடிகள் அழுகி நாசமடைந்தன. உச்சிமேடு, ரெட்டிச்சாவடி, நாணமேடு, கண்டக் காடு உள்ளிட்ட பகுதிகளில் விதைத்த வேர்க்கடலை மழையில் அழுகின. மழை சேதங்களை பார்வையிட சென்ற கலெக்டர் சீத்தாராமன் நந்திமங்கலம் கிராமத்தில் கனமழையால் பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாணம் வழங்கப் படும் என அறிவித்தார். அதைத்தொடர்ந்து சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் தாலுக்காக்களில் வேளாண், வருவாய் அலுவலர்கள், கிராம அதிகாரிகள் கூட்டாக கணக்கெடுப்பு பணி நடத்தி வருகின்றனர். ஆனால் கடலூர் தாலுகாவில் சேதமடைந்த வீடுகளுக்கு மட் டும் நிவாரணம் வழங்கப் பட்டது. விவசாய பயிர்களுக்கு கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior