உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 29, 2009

கடலூருக்கு பெருமை சேர்க்கும் மஞ்சை நகர் மைதானம் வீணாகிறது : நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் பள்ளத்தாக்காகியது

கடலூர் :

              கடலூர் நகராட்சியின் அலட் சிய போக்கினால் அழகிய மைதானம் களையிழந்து பள்ளத்தாக் காகி வருகிறது.கடலூர் நகரின் மையப் பகுதியில் 18 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து கிடக்கும் பகுதிதான் மஞ்சை நகர் மைதானம். தொன்று தொட்டு "தங்கராஜ் முதலியார் மைதானம்' என்று அழைக் கப்படும் இதில் அண்ணா விளையாட்டரங்கம், சிறுவர்கள் பூங்கா போக 11.52 ஏக்கர் காலித் திடல் உள்ளது. இந்த இடத்தில்தான் பொதுக்கூட்டங்கள், அரசியல் கூட்டங்கள், மாநாடுகள், கண் காட்சி, கேளிக்கைகள் நடத்தப் பட்டு வருகின்றன.

                  அதற்காக பயன்படுத்துவோர் நகராட்சியிடம் முன் அனுமதி பெற்று அதற்குரிய கட்டணத்தை நகராட்சிக்கு செலுத்த வேண்டும். மைதானத்தை மீண்டும் நகராட்சி வசம் ஒப்படைக்கும்போது அதன் இயற்கை மாறாமல் ஒப்படைக்க வேண்டும் என்பது விதி. ஆனால் அதை எவரும் கடைபிடிப்பதில்லை. இதனை கண்காணிக்க வேண்டிய நகராட்சி நிர்வாகமும் கவலைப்படுவதில்லை. இதனால் வெயில் காலத்தில் புழுக்கத்தில் தவித்து வரும் மக்கள் மாலை நேரத்தில் மைதான புல் தரையில் சிறிது நேரம் ஓய்வெடுக்க கூட லாயக்கற்ற இடமாக மாறிவிட்டது.

                      ஆனால் அண்மைக் காலமாக அரசியல் பிரமுகர்கள், தனியார் நிறுவனங்கள், கேளிக்கை நடத்துபவர்களால் சின்னாபின்னமாக்கப்பட்டு வருகிறது. ஆளும் அரசியல் பிரமுகர்கள் தங்கள் "சுக்ர திசைக்காக' பொதுக் கூட்டம் நடத்த ஆங்காங்கே ஒரு கான்கிரீட் மேடைபோட்டு மாநாடுகளை நடத்திவிட்டு நடையை கட்டிவிடுகின்றனர். அண்ணாதுரை, காமராஜர், எம்.ஜி.ஆர்., போன்ற பழம்பெரும் தலைவர்கள் இந்த மைதானத்தில் கால்பதித்தவர்கள்தான். கடந்த 1993ம் ஆண்டு ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த தென்னாற்காடு மாவட்டம் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களாக பிரிப்பு விழா கடலூரில் நடந்தது. அப்போது 29.10.1993ம் தேதி முதல்வராக பதவி வகித்து வந்த ஜெ., வின் பாதுகாப்பு கருதி மைதானத்தின் கிழக்கு பகுதியில் புதிய கான்கிரீட் மேடை அமைக்கப்பட்டது.

                        அதைத்தொடர்ந்து தி.மு.க., சார்பில் கடந்த 2008ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் மகளிர் மாநாடு கடலூரில் நடத்தப்பட் டது. முதல்வர் கருணாநிதி பங் கேற்கும் மேடையாதலால் பிரத் யேக கான்கிரீட் மேடையும், அதையொட்டிய தார்சாலையும் போடப்பட்டது. தே.மு.தி.க., காங்., கட்சியினர் தன் பங்கிற்கு தனித்தனியாக தற்காலிக மேடை அமைத்து கூட்டம் நடத்தினர். தற்போது 3 கான்கிரீட் மேடைகளும் மைதானத்தை விளிம்பு பகுதியில் ஆக்கிரமித்துள்ளன.

                    அரசியல் கட்சிகள் இவ்வாறிருக்க பொருட்காட்சி, சர்க்கஸ் நடத்துபவர்கள் நகராட்சி ஒப்பந் தத்திற்கு உட்பட்டு பணம் செலுத் திய பிறகே அவர்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. ஆனால் தமது கேளிக்கை நிகழ்ச்சி முடிந்த பின் னர் அதை சமன் செய்து தருவதற் கும் கட்டணம் செலுத்தப்படுகிறது. ஆனால் அண்மையில் நடந்து முடிந்த சர்க்கசுக்காக கூடாரம் அமைக்கப்பதற்காக மண் மேடாக் கப்பட்டது. சர்க்கஸ் கூடாரத்தை காலி செய்து மூன்று வாரங்கள் கழிந்துவிட்ட நிலையில் இதுவரை தரைதளத்தை சரிசெய்யாமல் மலையும் மடுவுமாக காட்சிதருகிறது.


                  இப்படியெல்லாம் மைதானம் சீரழியும் என எண்ணிய நகர்நல விரும்பி ஒருவர் தொலைநோக் குப்பார்வையோடு கோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்து மைதானத்தில் வாகனங்கள் செல்ல தடை உத்தரவு பெற்றுள் ளார். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கடலூர் சிப்காட்டில் உள்ள கெம்ப்ளாஸ்ட் நிறுவனத்திலிருந்து நாளொன்று 20 க்கும் மேற்பட்ட லாரிகள் சரக்கு ஏற்றி வணிகவரி துறையின் அனுமதிக்காக மைதானத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. மழையின்போது இந்த லாரிகள் மைதானத்தில் புதைந்து தரையே சின்னாபின்னமாக மாறிவிட்டது. இவையெல்லாம் ஒருபுறமிருக்க வீடு இடித்த கற்கள், குப்பைகள் போன்றவற்றை இரவு நேரத் தில் ஒரு கும்பல் கொட்டி பாழ்படுத்தி வருகிறது. இப்படியே அதிகார வர்க்கங்கள் செய்யும் துஷ்பிரயோகத்தால் ஏழை மக்கள் இயற் கையை ரசித்த படி உட்கார்ந்து பேச முடியாமல் செய்துவிட்டார்களே என குமுறுகின்றனர் முதியவர்கள். வனப்புடன் இருந்த மைதானம் களையிழந்து பள்ளத்தாக்குகளைப்போல ஆகிவிட்டது. இதை கண்காணிக்க கூடிய நகராட்சியும் கண்டுகொள்ளாமல் "சித்தன் போக்கு சிவன்போக்கு' என போய்க்கொண்டுள்ளது. மைதானம் கடலூர் மக்களுக்கு இயற்கையில் கிடைத்த வரப்பிரசாதம். அதனை காத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior