உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 29, 2009

பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு: பக்தர்கள் குவிந்தனர்

கடலூர் :

                   வைகுண்ட ஏகாதசியை முன் னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன் னிட்டு பகல் பத்து உற்சவம் கடந்த 18ம் தேதி துவங்கியது. தினசரி மூலவர்களுக்கு சிறப்பு திருமஞ்சனமும், அதனைத் தொடர்ந்து பிரபந்த பாசுரங்கள் பாடப்பட்டன.

                         நேற்று முன்தினம் காலை மோகினி அலங்காரமும், மாலை ரெங்கநாத பெருமாள், தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து நேற்று அதிகாலை 5.45 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு விழா வெகு விமர்சையாக நடந்தது. பரமபத வாயில் வழியாக சுவாமி வந்தபோது கூடியிருந்த பக்தர்கள் எழுப்பிய கோவிந்தா கோஷம் விண்ணை முட்டியது.சொர்க்க வாசல் திறப்பு விழாவை முன்னிட்டு மார்கழி மாத கடும் குளிரையும் பொருட் படுத்தாமல் ஏராளமான பக்தர் கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து ராப்பத்து உற்சவம் துவங்கியது.ஸ்ரீமுஷ்ணம்: பூவராகசுவாமி கோவிலில் அதிகாலையில் மூலவர் பூவராகப்பெருமானுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் தீபாராதனையும், அதனைத் தொடர்ந்து கோவில் உள்பிரகார உலா நடந்து காலை 7 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு உற்சவ மூர்த்தி யக்ஞவராகன், பூதேவி, ஸ்ரீதேவியோடு பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நாகராஜன், அறங்காவலர் குழு தலைவர் செல்வக்குமார் செய்திருந்தனர்.

                 கடலூர் புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு ராஜகோபாலசாமி பரமபதவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதே போன்று திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் பரமபத வாசல் வழியாக வந்து நம்மாழ்வார் எதிர்சேவையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக அதிகாலை 4 மணிக்கு ஆண்டாள் திருப்பாவை சாற்றுமுறை நடந்தது.

                 கடலூர் வில்வநகர் ஆட்கொண்ட வரதராஜ பெருமாள் கோவில் அதிகாலை 5 மணிக்கு கருட வாகனத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். புதுப்பாளையம் திரவுபதி அம் மன் கோவில், செம்மண்டலம் சாந்த ஆஞ்சனேயர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா வெகு விமர்சையாக நடந்தது.விருத்தாசலம்: பெரியார் நகரில் உள்ள ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோவிலில் காலை 5 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து சொர்க்க வாசல் திறக்கப்பட்டு சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.திட்டக்குடி: வதிஷ்டபுரம் திருமகிழ்ந்தவல்லி சமேத ரெங்கநாத பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை 3.30 முதல் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடந்தது. 5.45 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு விழா விமர்சையாக நடந்தது. ஆழ்வார் மரியாதையுடன் நம்மாழ்வார் ரெங்கநாத பெருமாள் கோவில் வெளி பிரகார வலம் வரும் நிகழ்ச்சி
யுடன், ராப்பத்து உற்சவம் துவங்கியது. நிகழ்ச்சியினை கோவில் பட்டாட்சாரியார் முத்து கோவிந் தாச்சாரியார் சுவாமிகள், ராகவன் சுவாமிகள் முன்னிலையில், பாஞ்சராத்ர ஆகம வித் வான் வரத சிங்காச்சாரியார் நடத் தினர்.இதேபோன்று திட்டக்குடி வேதாந்தவல்லி சமேத சுகாசன பெருமாள் கோவிலில் ஸ்ரீதர் பட் டாச்சாரியார் முன்னிலையில் சிறப்பு பூஜைகளுடன் சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது.

                   கூத்தப்பன்குடிகாடு ஸ்ரீதேவி, பூதேவி வரதராஜ பெருமாள் கோவில், பெண்ணாடம் கருங்குழிதோப்பு பரிமலர் ரெங்கநாதர் பெருமாள் கோவில், மேற்குரத வீதி வீற்றிருந்த பெருமாள் கோவில்களில் அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் ஆய்வாளர் பாலகிருஷ் ணன், செயல் அலுவலர்கள் முருகன், ராஜராஜேஸ்வரன், பக்தர் கள் செய்திருந்தனர்.நெல்லிக்குப்பம்: காந்தி வீதியில் உள்ள வேணுகோபாலசுவாமி கோவிலில் அதிகாலையில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் தீபாராதனை நடந்தது. சொர்க்கவாசல் திறந்தவுடன் அவ்வழியே பாமா, ருக்மணி சமேதராய் வேணுகோபாலசுவாமி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்திருந்தார். விழா ஏற்பாடுகளை டாக்டர் கிருஷ்ணகோபால் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior