உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 29, 2009

சந்திர கிரகணத்தால் 3 மணிக்குள் ஆருத்ரா தரிசனத்தை முடிக்க முடிவு

சிதம்பரம் :

              சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனம் மூன்று மணிக்குள் முடிக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா துவங்கி நடந்து வருகிறது. முக்கிய திருவிழாவான தேர்த்திருவிழா 31ம் தேதியும், ஜனவரி 1ம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது. அதையொட்டி தரிசன விழாவை அமைதியுடன் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நடத்துவது குறித்து கோவில் செயல் அலுவலர், தீட்சிதர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது.

                    ஆர்.டி.ஓ., ராமலிங்கம், தாசில்தார் தனவந்தகிருஷ் ணன், கோவில் செயல் அலுவலர் சிவக்குமார் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர். சந்திர கிரகணம் வருவதையொட்டி காலை பூஜைகள் தாமதமாக துவங்குவதால் தரிசனத்திற்கு காலதாமதமாகும். இருந்தும் பக்தர்கள் பாதிக்காத வகையில் மதியம் 2 மணியில் இருந்து 3 மணிக்குள் தரிசனத்தை முடித்துக் கொள்வது, மூன்று டி.எஸ்.பி.,க்கள், 17 இன்ஸ்பெக்டர்கள், 56 சப் இன்ஸ்பெக்டர்கள் என ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது, சுகாதார வசதிகள், மருத்துவ முகாம் அமைப் பது, தீயணைப்பு, மின் துறை, நகராட்சி நிர்வாகம் ஆகியனவும் தயார் நிலையில் இருக்க கேட்டுக்கொள் வது, மாமிச கடைகள், மாமிச ஓட்டல்கள், டாஸ் மாக் மதுபான கடைகளை தேர் திருவிழாவான 31ம் தேதியும், தரிசனத்தன்று 1ம் தேதியும் மூட கலெக்டருக்கு கோரிக்கை வைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


அதிகாரிகளின் சுயநலம் :

                     தரிசனத்தன்று ஆயிரக்கணக்கில் கூடும் பக்தர் களுக்கு பாதுகாப்பளிப்பது குறித்து பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் ஆலோசனை நடத்துவது வழக்கம். ஆனால் நேற்று நடந்த கூட்டத்தில், தரிசனத்தன்று நடக்கும் மகா அபிஷேகத்திலும், லட்சார்ச்சனையிலும் அதிகாரிகள் அமர இடம் ஒதுக்க வேண்டும். கட்டளைதாரர்கள் சாமியை மறைத்து உட்கார்வதால் அதிகாரிகள் சாமியை பார்க்க முடியவில்லை. அதிகாரிகளுக்கும் முன்னுரிமை தரவேண்டும் என தாசில்தார் முதல் போலீஸ் அதிகாரிகள் வரை உணர்ச்சி வசப்பட்டு தீட்சிதர்களிடம் பேசினர்.ஆயிரக்கணக்கில் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பங்கேற்க வருபவர்களை பற்றி கவலைப்படாமல் அதிகாரிகள் மட்டும் சாமி பார்த் தால் போதும் என்ற நிலையில் முக்கியத்துவம் கொடுத்து சுயநலத்துடன் பேசியது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior