உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 29, 2009

முன்னாள் படைவீரர்களுக்கு சுயதொழில் துவங்க கடனுதவி

கடலூர் :

                      பாரத பிரதமரின் சுயவேலைவாய்ப்பு திட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் கடன் பெற்று தொழில் துவங்கி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

               இது குறித்து முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் ஜைத்தூன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

                   முன்னாள் படைவீரர் மற்றும் அவரை சார்ந்தோர் வங்கி மூலம் கடன் பெற்று சுய தொழில் செய்ய ஏதுவாக நகர்புறங்களில் மாவட்ட தொழில் மையம் வாயிலாகவும், கிராமங்களில் கதர் கிராமத் தொழில் வாரியம் மூலமாகவும், பாரத பிரதமரின் வேலை உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் முன் னாள் படைவீரர்கள் மற் றும் அவரை சார்ந்தோர் களை சிறப்பு பிரிவினர் என்ற அடிப்படையில் சேர்த்து கொள்ளப்பட் டுள்ளது. இத்திட்டத்தின் கீழ்  உற்பத்தி பிரிவுக்கு 25 லட்சமும் சேவை பிரிவுக்கு 10 லட்ச ரூபாயும் திட்ட அளவு தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்பம் மற்றும் பொருளாதார அடிப்படையில் வங்கியினால் கடன் அளிக்கப்படும் தொழில் முனையும் முன்னாள் படைவீரர்கள் திட்ட மதிப்பீட்டில் 5 சதவீதம் முதலீடு செய்தால் போதுமானது. மீதமுள்ள 95 சதவீதம் கடன் அனுமதிக்கப்படும். திட்ட மதிப்பீட்டில் 25-30 சதவீதம் மைய அரசினால் மானியமாக அனுமதிக்கப்படுகிறது. மானியத்தொகை 3 ஆண்டுகளுக்கு வைப்புத்தொகையாக பேணப்படும். முன்னாள் படைவீரர் கள் மற்றும் சார்ந்தோர்கள் இத்திட்டத்தின் மூலம் கடன் பெற்றுசுய தொழில் செய்து பயனடையலாம். மேலும் விவரம் வேண்டுவோர் முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior