பண்ருட்டி :
பண்ருட்டி அடுத்த எனதிரிமங் கலம் மணல் குவாரியில் இருந்து வரும் மணல் லாரி டிரைவர்களிடம் அடாவடி வசூல் தொடர்ந்து நடந்து வருகிறது.
பண்ருட்டி அடுத்த எனதிரிமங் கலம் தென்பெண்ணையாறு மணல் குவாரியில் இருந்து தினந் தோறும் ஏராளமான லாரிகள் மணல் ஏற்றிக்கொண்டு சென்னை, காஞ்சிபுரம், செங்கல் பட்டு உள்ளிட்ட பிறமாவட்டங்களுக்கு செல்கின்றன. லாரிகள் எனதிரிமங்கலத்தில் இருந்து கொரத்தி, வேலங்காடு, திருத்துறையூர், கயப்பாக்கம், கள்ளிப்பட்டு, கட்டமுத்துப்பாளையம், ஒறையூர், கண்டரக் காட்டை, பூண்டி உள்ளிட்ட 12 இடங்களில் தலா 20 ரூபாய் கோவில் நன்கொடை, கிராம பொதுநலநிதி என "அடாவடி' வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கடந்த மாதம் தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து கடந்த 18ம்தேதி பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் மணல் லாரிகளால் பாதிப்பு ஏற்படும் ஊராட்சி தலைவர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் சார்பில் லாரிகளுக்கு நுழைவு வரி வசூல் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு ஆர்.டி.ஓ., செல்வராஜ் இது குறித்து கலெக்டரின் பரிசீலனைக்கு கொண்டு செல்வதாக கூறினார். மேலும் ஊராட்சியில் லாரி டிரைவர்களிடம் "அடாவடி' வசூலில் யாரும் ஈடுபடக்கூடாது. மீறி யாராவது செயல்பட்டால் அவர் கள் குறித்து வருவாய்துறைக்கும், போலீசுக்கும் ஊராட்சி தலைவர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என எச்சரித்தனர்.
ஆனால் வருவாய்த்துறையின் உத்தரவுகளை ஒருவரும் மதிக்காமல் மீண்டும் "அடாவடி' வசூல் வேட்டை நேற்றும் தொடர்ந்து நடந்தது. இதற்கு ஊராட்சி தலைவர்கள் உள்ளூரில் கோவில் நிதி வசூல் செய்வதை போலீசார் தான் தடுக்க வேண்டும். நாங்கள் கூறினால் யாரும் கட்டுப்படுவதில்லை என கூறுகின்றனர். போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?
0 கருத்துகள்:
கருத்துரையிடுக