உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 25, 2010

கோணாங்குப்பத்தில் ஆடம்பர தேர்பவனி : பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

விருத்தாசலம் :

                  கோணாங்குப்பம் பெரியநாயகி அன்னை ஆலய ஆண்டு திருவிழாவின் ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் இரவு வெகு விமர்சையாக நடந்தது.

                  கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள கோணாங்குப்பம் கிராமத்தில் இத்தாலி நாட் டைச் சேர்ந்த வீரமாமுனிவர் மேற்பார்வையில் 1720ம் ஆண்டு புனித பெரியநாயகி அன்னை ஆலயம் கட் டப்பட்டது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜன வரி 14ம் தேதி கொடியேற் றத்துடன் தொடங்கி ஜனவரி 23ம் தேதி வரை ஆண்டு திருவிழா நடைபெறும். அதன்படி 2010ம் ஆண்டுக் கான ஆண்டு திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 22ம் தேதி வரை தினமும் திருப்பலி, நற்கருணை ஆராதனைகள், தேர்பவனிகள் நடைபெற்றன.

                நிகழ்ச்சியில் முக்கிய விழா வான ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் இரவு பேராயர் டாக்டர் அந் தோணி ஆனந்தராயர் தலைமையில் நடந்தது. அலங்காரம் செய்யப்பட்ட பெரியநாயகி அன்னை மின்விளக்குகளால் அலங் கரிக்கப்பட்ட தேரில் பவனி வந்தார்.

          வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. பாளையக்காரர் பாலதண்டாயுதம்,  பங்குதந்தை வின்சென்ட் உட்பட பலர் கலந்து கொண்டனர். சென்னை, வேளாங் கண்ணி, நாகர்கோவில், திருவனந்தபுரம் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல மதங்களை சார்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior