உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 25, 2010

வைத்தியநாத சுவாமி கோவில் தீர்த்தகுளத்தை சீரமைக்க நடவடிக்கை தேவை

திட்டக்குடி :

                       திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில் திருக் குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தம் செய்திட அறநிலையத் துறை முன்வர வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்த் துள்ளனர்.

                             திட்டக்குடியில் பழமை வாய்ந்த அசனாம்பிகை அம்மன் உடனுறை வைத் தியநாத சுவாமி கோவில் உள்ளது. புகழ்பெற்ற இக்கோவிலில் பங்குனி மாத திருவிழாவில் விநாயகர், அம் மன், வைத்தியநாத சுவாமி தேர்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மூன்று தேர்களும் பல ஆண்டிற்கு முன் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து பழுதடைந்தன. பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ததால், தேர்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது.
             
                       இந்த கோவிலுக்கு எதிரில் 200 அடி தூரத்தில் தெப்பக்குளம் உள்ளது. குளத்திலிருந்து கோவிலுக்கு செல்ல சுரங்கப்பாதையும் உள்ளது. இவ்வழியாக குளத்தில் நீராடிவிட்டு சுரங்கப்பாதை வழியாக மன்னர்கள் கோவிலுக்கு சென்றதாக கூறப்படுகிறது. திருவிழா காலங்களில் குளத்தில் தீர்த்தவாரி,  தெப்பத்திருவிழாவும்  விமர்சையாக நடந்து வந் துள்ளது. தற்போது திருக் குளம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு கழிவு நீர் குட்டையாக மாறியுள்ளது.  இக்கோவிலுக்கு மீண் டும் கும்பாபிஷேகம் நடத் தும் பொருட்டு துவங் கப் பட்ட கோவில் சீரமைப்பு பணி என்ன காரணத்தினாலோ தடைபட்டது. இதனால் கடந்த 2008ம் ஆண்டு கேரள நம்பூதிரி களை வரவழைத்து தேவபிரசன்னம் பார்க்கப் பட்டது. அதில் தீர்த்தகுளம் (திருக்குளம்) பராமரிப்பு இன்றி பாழடைந் துள்ளது. தேர் எரிந்து அக்னி தோஷம், வழிபாடு முறைகள் மீறல் உட்பட பதினோறு தோஷங்கள் உள்ளதால் திருப்பணி தடைபட்டுள்ளதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து தீர்த்தகுளத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோவில் நிர்வாக குழுவினர் தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடந்த மாதம் பக்தர்கள், சிவனடியார்கள் இணைந்து தீர்த்தகுளத்தை சீரமைக்க முயன்றபோது, மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட் டது.  இது குறித்து திட்டக்குடிக்கு வந்திருந்த அறநிலைய ஆட்சித் துறை இணை ஆணையர் திருமகளிடம் முறையிட்டனர். போலீஸ் பாதுகாப்புடன் திருக்குளத்தை சுத்தம் செய்யலாம் என தெரிவித் தார். மேலும் அனைத்து சிவனடியார்கள் ஒருங்கிணைந்த திருப்பணிக்குழுவினர் கலெக்டரை சந்தித் தும் மனு கொடுத்துள்ளனர். புகழ் வாய்ந்த இந்த கோவில் திருப்பணியை விரைந்து முடித்திடவும், கோவில் தீர்த்தகுளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைத்திட மாவட்ட நிர்வாகமும், அறநிலையத்துறையினரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior