உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 25, 2010

வேளாண் இணை இயக்குனர் ஆய்வு

சிதம்பரம் :

               சிதம்பரம் உழவர் சந்தையை வேளாண் இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.

                 சிதம்பரம் வடக்கு மெயின்ரோட்டில் இயங் கும் உழவர் சந்தையில் காய்கறிகள்,பழங்கள், உணவு காளான் விற் பனை செய்யப்படுகிறது. சந்தையின் செயல்பாடுகள் குறித்து வேளாண் இணை இயக்குனர் வேலாயுதம், துணை இயக்குனர் தனவேல் உள் ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.  பின்னர் உழவர் சந்தையின் புதிய செயல்பாடுகள் குறித்து ஆர்.டி.ஓ., ராமராஜூ, தாசில்தார் காமராஜ் ஆகியோர்களிடம் ஆலோசனை நடத்தினர். அப் போது வேளாண் அலுவலர்கள் சித்ரா, சுரேஷ், உதவி வேளாண் அலுவலர் கள் வேலு, கலியமூர்த்தி, ராயர் முத்துசரவணன் உடனிருந்தனர். விவசாயிகளுக்கு புதிய  அடையாள அட்டை வழங்குவதுடன் நுகர் வோர்களை உழவர் சந் தைக்கு  அதிகளவில் வரவழைக்கும் வகையில் சிதம்பரம் சுற்றுப்பகுதியில் உள்ள 20 கிராமங் களை தேர்வு செய்து புதிய முயற்சிகளை தோட்டக்கலையுடன் இணைந்து செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior