ராமநத்தம் :
மங்களூர் ஒன்றிய வட்டார அளவிலான வேலை வாய்ப்பு முகாமில் 535 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
ராமநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மங்களூர் ஒன்றிய வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் வறுமை ஒழிப்பு சங்கத்தின் கீழ் வட்டார அளவிலான வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. ராமநத்தம் இந் தியன் வங்கி கிளை மேலாளர் கணேசன் தலைமை தாங்கினார். உதவி திட்ட மேலா ளர்கள் சிட்டிபாபு, நாராயணன் முன்னிலை வகித்தனர். அடரி அணித்தலைவர் ராமலிங்கம் வரவேற்றார். முகாமில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட அலுவலர் நித் யானந்தம் தேர்வு செய்யும் பணிகளை மேற் கொண்டார். இதில் டி.வி.எஸ்., நோக்கியா, விஸ்வம் (பொக்லைன் பயிற்சி), சி.என்.சி., எல். அன்.டி., இன்டிமேட் பேஷன் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு 535 பேரை தேர்வு செய்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக