பண்ருட்டி :
பண்ருட்டி பகுதியில் முட்டைகோஸ், காளிபிளவர் அறுவடை காரணமாக வரத்து அதிகரித்துள்ளது.
பண்ருட்டி அடுத்த கள்ளிப்பட்டு, குச்சிப்பாளையம்,திருத்துறையூர், கட்டமுத்துப்பாளையம் ஆகிய கிராமங்களில் விவசாயிகள் பெங்களூரு பகுதியில் அதிகம் விளையும் காளிபிளவர்,முட்டை கோஸ் ஆகியவற்றை கடந்த 7ஆண்டுகளாக பயிரிட்டு வருகின்றனர். துவக்கத்தில் தோட்டக்கலைத்துறை அலுவலர்களின் ஒத்துழைப்புடன் அண்ணாகிராம தோட்டக்கலைத்துறை வட்டாரத்தில் 200 ஏக்கர் அளவில் விவசாயிகள் பயிரிட்டு லாபம் ஈட்டினர்.
கட்டமுத்துப்பாளையம், கள்ளிப்பட்டு,குச்சிப்பாளையம் ஆகிய கிராமங்களில் ஐனவரி,பிப்ரவரி மாதங்களில் மினி பெங்களூரு கிராமங்கள் போன்று பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. இதனால் பண்ருட்டி காய்கனி மார்க்கெட் டிற்கு தினந்தோறும் 200 மூட்டை அளவில் கோஸ் மற்றும் காளிபிளவர் விற்பனைக்கு வந்தன. ஆனால் தோட்டக்கலைத்துறையினரின் வழிகாட்டுதல் குறைவினால் கடந்த இருஆண்டுகளாக முட்டைகோஸ், காளிபிளவர் நாற்றாங்கல் கூட வழங்கவில்லை. இதனால் பல சிறு விவசாயிகள் காளிபிளவர் நாற்றங்கால் இல்லாமல் தக்காளி, கத்திரி,வெண்டை போன்ற மாற்று பயிர் செய்ய துவங்கி விட்டனர். இதனால் இந்த ஆண்டு 50 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே காளிபிளவர்,கோஸ் நாற்றுக்களை ஓசூர் பண்ணையில் இருந்து வாங்கி விவசாயிகள் பயிரிட்டனர்.
கடந்த ஆண்டு முட்டைகோஸ் ஒருகிலோ 1க்கும், காளிபிளவர் 5 ரூபாய்க்கும்“விற்பனையானது. ஆனால் இந்த ஆண்டு உற்பத்தி குறைவு காரணமாக பண்ருட்டி மார்க்கெட்டில் ஒரு காளிபிளவர் 8 ரூபாய்க்கும், மூட்டை கோஸ் 4 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக