உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 25, 2010

பள்ளிகளுக்கு இலவச தேசிய கொடிகள்

ஸ்ரீமுஷ்ணம் :

               ஸ்ரீமுஷ்ணம் பகுதி பள்ளிகளுக்கு வெற்றிக் கொடிகட்டு திட்டத்தில் இலவச தேசிய கொடிகள் வழங்கப்பட்டன.

                       ஸ்ரீமுஷ்ணம்  ஜேசீஸ் பிரிவுகள் சார்பில் குடியரசு தின விழாவையொட்டி வெற்றிக் கொடி கட்டு மெகா திட்டம் செயல் படுத்தப்படுகிறது. இதில், ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள 32க்கும் மேற்பட்ட அரசு துவக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உட்பட 40 ஆயிரம் பேருக்கு இலவசமாக தேசியகொடிகள் வழங்கப்பட்டன. நாச்சியார் பேட்டை, ஸ்ரீமுஷ்ணம் பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மையங்களில் நடந்த கொடி வழங்கும் விழாவில் காட்டுமன்னார் கோவில் வட்டார வள மேற்பார்வையாளர் காமராஜ்  அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் தேசிய கொடிகளை வழங்கினார். இதில், ஜேசீஸ் தலைவர் கிரி, சாசன தலைவர் முத்துராமலிங்கம், மண்டல இயக்குனர் வேல்முருகன், மண்டல பயிற்றுனர் சிவமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கொடிகளை பள்ளி மற்றும் கல்வி நிறுவன தலைமை ஆசிரியர்களிடம் வழங்கினர். மேலும்,  25, 26 தேதிகளில் ஸ்ரீமுஷ் ணத்தில் பத்து இடங்கள் மற்றும் அனைத்து வார்டுகளிலும் வீடு வீடாக சென்று இலவசமாக தேசியக் கொடி வழங்கும் முகாம் நடைபெறுகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior