திட்டக்குடி :
திட்டக்குடியில் நான்கு மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் மேட்டூர் தண்ணீரை வெள் ளாற்றில் இணைத்திட சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவிலில் தமிழக சிறு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் சிறப்பு ஆலோசனை கூட் டம் நடந்தது. நிறுவன தலைவர் தங்கராஜூ தலைமை தாங்கினார். வெலிங்டன் நீர்ப்பாசன சங்க தலைவர்கள் வடிவேல், வேணுகோபால், மருதாச்சலம், தி.மு.க., நகர செயலாளர் பரமகுரு முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் ராமலிங்கம் வரவேற்றார்.
கடலூர், விழுப்புரம், சேலம், பெரம்பலூர் ஆகிய நான்கு மாவட்டங் களை சேர்ந்த ஒரு கோடி ஏக்கர் பாசன விளை நிலங் கள் பயன்பெறும் வகையில் மேட்டூரிலிருந்து சங்ககிரி, மகுடஞ்சாவடி, அயோத்தியாபட்டினம், காரிப்பட்டி வழியாக 20 கி.மீ., தூரத்திற்கு வாய்க் கால் அமைக்க வேண்டும். அதன் மூலம் சேலம் மாவட்டம் பெத்தநாயக் கன்பாளையம் வெள்ளாற் றில் மேட்டூர் நீர் பாய்ந்து ஓடுவதற்கு வாய்ப்புள்ளது.
இதனால் நான்கு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் நிரந்தரமாக விவசாயம் செய்வதற்கும், விவசாயத்தை காப்பாற்றவும் வழிவகை உள்ளது. எனவே, நான்கு மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகள், முன்னோடி விவசாயிகள், அரசியல் பிரமுகர்கள் ஒருங்கிணைந்து சேலம் மாவட்ட கலெக்டரிடம் முறையிடுவதென தீர்மானிக்கப் பட்டது. கூட்டத்தில் திட்டக்குடி பேரூராட்சி தலைவர் மன்னன், காங்., மாவட்ட பொதுச்செயலாளர் இளவழகன், பாசன சங்க தலைவர்கள் ரங்கநாதன், கண்ணுசாமி, பொன்னுசாமி கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக