உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 25, 2010

சேத்தியாத்தோப்பு வெள்ள தடுப்பணை பராமரிப்பின்றி பாழாகி வருகிறது

சேத்தியாத்தோப்பு :

                சேத்தியாத்தோப்பில் உள்ள வெள்ளத் தடுப்பணை பாலம் பராமரிப்பின்றி பாழாகி வருகிறது.

                  சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றின் குறுக்கே 1856ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் வெள்ளத் தடுப்பணையுடன் கூடிய பாலம் கட்டப்பட்டு கடந்த 1995ம் ஆண்டு வரை சென்னை - கும்பகோணம் சாலையின் போக்குவரத்திற்கான பிரதான பாலமாக இருந்து வந்தது. பெருகிவிட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக போக்குவரத்திற்காக தனியாக பாலம் கட்டப்பட்டது. அதன்பின்னர் வெள்ள தடுப்பணை பாலம் பராமரிக்கப் படவில்லை. அவ்வப்போது பாலத்தில் உள்ள ஷெட்டர்களை மட்டும் சரி செய்யும், பொதுப்பணித்துறையினர் சாலையை கண்டுக் கொள்வதில்லை.

                    இந்த பாலத்தில் கனரக வாகனங்கள் செல்லவில்லை என்றாலும், தினசரி 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்களில் சென்று வந்து கொண்டிருக்கின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ள இந்த பாலத்தில் தற்போது பல இடங்களில் பெரும் பள்ளங்கள் மற்றும் விரிசல்  ஏற்பட்டு வலுவிழந்து கொண்டிருக்கிறது. எனவே வெள்ளத் தடுப்பணையுடன் கூடிய சேத்தியாத்தோப்பு பழைய பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior