உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 04, 2010

சிதம்பரத்தில் உலக சைவ பேரவை மாநாடு நாளை துவக்கம்; 13 நாட்டினர் பங்கேற்பு

சிதம்பரம்:

                     சிதம்பரத்தில் 12வது உலக சைவப் பேரவை மாநாடு நாளை துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது; 13 நாடுகளில் இருந்து சைவ சான்றோர் 200 பேர் பங்கேற்கின்றனர். தமிழர்கள், சிவ நெறியில் சிறக்க வேண்டும்; சைவ சமயத்தின் தொன்மை, பெருமைகள், உலகில் உள்ள அனைவரும் உணர வேண்டும் என்பதற்காக உலக சைவப் பேரவை அமைப்பு, லண்டனில் சிவநந்தியடிகள் என்பவரால் துவக்கப்பட்டது. இந்த அமைப்பு, இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை உலக சைவப் பேரவை மாநாட்டை, ஒவ்வொரு நாட்டிலும் நடத்தி வருகிறது.

                        லண்டன், சிங்கப்பூர், பிரான்ஸ், இலங்கை, தென்னாப்ரிக்கா, மொரீசியஸ், மலேசியா, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் மாநாடு நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆறாவது மாநாடு, தமிழகத்தில் தஞ்சை பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்டது. இரண்டாவது முறையாக, தமிழகத்தில் சிதம்பரத்தில் நடத்தப்படுகிறது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் சாஸ்திரி அரங்கில், மாநாடு நாளை துவங்கி 7ம் தேதி வரை நடக்கிறது. தமிழகம் மற்றும் வெளிநாடு களில் உள்ள திருமுறை, சைவ சித்தாந்த குழுக்கள், ஆதீனங்கள், சிவநெறி சிந்தனையாளர்கள், அறிஞர்கள் என 1,500 பேர் பங்கேற்கின்றனர்; 13 நாடுகளைச் சேர்ந்த 200 பேர் பங்கேற்கின்றனர்.  மாநாட்டில், சைவம் பற்றிய சிறப்பு சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், திருமுறை இசை, கலை நிகழ்ச்சிகள் நடக் கின்றன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior