கடலூர்:
கடலூர் பாடலீஸ்வரர் கோவில் அருகே நகராட்சி கழிவறை வளாகம் மூன்றாண்டுகளாக பூட்டிக் கிடப்பதால், கோவில் வளாகம் திறந்தவெளி கழிப்பிடமாக மாறி வருகிறது. கடலூர் பாடலீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக் தர்களின் வசதிக்காக நகராட்சி சார்பில் குளக்கரை எதிரில் கழிவறை மற்றும் குளியலறை கட்டி பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த சுகாதார வளாகம் கடந்த மூன்றாண்டுகளாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடாமல் பூட்டி கிடைக்கிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் குறிப்பாக முதியோர் மற்றும் சிறுவர்கள் கோவில் சுற்றுப் பகுதியை கழிப்பிடமாக பயன்படுத்துவதால் துர்நாற்றம் வீசுகிறது. இது பக்தர்களை முகம் சுளிக்கச் செய்கிறது. பாடல் பெற்ற பாடலீஸ் வரர் கோவிலின் சிறப்பை காத்திடவும், கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி பூட்டிக் கிடக்கும் கழிவறையை திறந்து பராமரிக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக