பண்ருட்டி:
பண்ருட்டி கெடிலம் ஆற்றில் டயர்களை கொளுத்தி மாசு ஏற்படுத்தி வருவதை தடுத்திட மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பண்ருட்டி கெடிலம் ஆற்றில் நகராட்சி சார்பில் கடந்த 3ஆண்டுகளாக குப்பையை கொட்டி தீயிட்டு கொளுத்தி மாசு ஏற்படுத்தி வந்தனர். இதுகுறித்து மாவட்ட முதன்மை நீதிபதி கடந்த 2008ம்ஆண்டு ஆற்றில் குப் பைகளை கொட்டி மாசு ஏற்படுத்தக்கூடாது என கமிஷனரை எச்சரித்தார். ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாத நகராட்சி அதிகாரிகள் கடந்த 6 மாதங்களாக மீண்டும் கெடிலம் ஆற்றில் குப்பையை கொட்டி மணல் பகுதிகள் கழிவுநீர் நிறைந்த மண்சகதியாக மாற்றியுள்ளனர். கடந்த 18ம் தேதி நடந்த ஆற்றுத் திருவிழாவின் போது குப் பைகளை மறைத்து மணல் அடித்தனர். அதனையும் மீறி துர்நாற்றம் வீசியது. தற்போது இதே ஆற்றில் பனிக்கன்குப்பம் ஊராட்சி பகுதியில் நகராட்சி நிர்வாகம் குப் பையை கொட்டி வருகிறது. சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டிய நகராட்சி நிர்வாகமே குடிநீர் ஆதாரமான ஆற்றை மாசுபடுத்தி வருவதை தொடர்ந்து தற்போது தனி நபர்களும் ஆற்றை மாசுபடுத்தி வருகின்றனர். நேற்றுமுன்தினம் இரவு கெடிலம் ஆற்றில் 200க்கும் மேற்பட்ட டயர் களை கொளுத்தி தீயிட்டு அதன் கம்பிகளை ஒரு லாரியில் ஏற்றி சென்றனர். டயர்கள் எரிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் அன்று இரவு முழுவதும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். கெடிலம் ஆற்றை பாதுகாத்திட மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக