கடலூர்:
கடலூரில் திங்கள்கிழமை இரவு டாஸ்மாக் மதுக்கடைகளில் சோதனை நடத்தி, அவற்றின் அருகே அனுமதியின்று உணவுப் பண்டங்களுடன் கூடிய மது அருந்தும் கூடங்களை நடத்திய 10 பேரைப் போலீஸôர் கைது செய்தனர். ÷டாஸ்மாக் மதுக் கடைகளை ஒட்டி அனுமதியின்றி மதுஅருந்தும் கூடங்களை நடத்துவதாகவும் இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் புகார்கள் வந்தன. எனவே மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் உத்தரவின் பேரில், கடலூர் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் போலீஸôர், திங்கள்கிழமை இரவு டாஸ்மாக் மதுக்கடைகளை சோதனையிட்டனர். டாஸ்மாக் மதுக்கடைகளின் அருகே அனுமதியின்றி மது அருந்தும் கூடங்களை நடத்தியதாக, மேல்பட்டாம்பாக்கம் பாஸ்கர் (58), திருவண்ணாமலை ராமு (36), விஜய் (41), வளவனூர் சிங்காரவேலு (27), மதுரை பார்த்தசாரதி (37), கூத்தப்பாக்கம் நச்சினார்க்கினியன் (55), திருப்பாப்புலியூர் பழநிவேல் (21), சரவணன் (29), சந்தோஷ்குமார் (30), கே.என்.பேட்டை பழநி (47) ஆகியோரைப் போலீஸôர் கைது செய்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக