உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 04, 2010

காஸ் சிலிண்டர் வழங்காததால் பொதுமக்கள் சாலை மறியல்

பண்ருட்டி: 

                           காஸ் சிலிண்டர் வழங்காததைக் கண்டித்து  பண்ருட்டியில் நேற்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பண்ருட்டி பகுதியில் உள்ள காஸ் இணைப்புதாரர்களுக்கு பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஜெயா கேஸ் ஏஜென்சி மூலம் சிலிண்டர் வழங்கப்பட்டு வருகிறது. காஸ் தட்டுப்பாடு காரணமாக கடந்த இரு மாதத்திற்கு முன் பதிவு செய்தவர்களுக்கு கூட சிலிண்டர் வழங்கப் படவில்லை. கிராம பகுதிகளுக்கும் காஸ் சிலிண்டர் வினியோகம் தடைபட்டது. இந்நிலையில் நேற்று காஸ் லோடு வருவதாக கூறப்பட்டதை தொடர்ந்து நுகர்வோர்கள் 300க்கும் மேற்பட்டோர் காலி சிலிண்டர்களுடன் திருவதிகை சாலையில் உள்ள காஸ் குடோன்  முன் காலையில் இருந்து நீண்டி வரிசையில் காத்திருந்தனர். ஆனால் சிலருக்கு மட்டும் காஸ் சிலிண்டர் வழங்கப்பட்டது. சற்று நேரத்தில் சிலிண்டர் தீர்ந்து விட்டதாக கூறபட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி சிலிண்டர்களுடன் பண்ருட்டி-திருவதிகை சாலையில்  மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த பண்ருட்டி சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சிலிண்டர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக  உறுதியளித்ததை ஏற்று காலை 10.30 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது. காஸ் சிலிண்டர் வினியோகம் குறித்து வட்ட வழங்கல் அலுவலர் ரங்கநாதன் விசாரணை மேற் கொண்டார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior