சிதம்பரம்:
"ஹஜ்' யாத்திரை செல்பவர்களுக்கு வழங்குவதுபோல் கைலாய யாத்திரை செல்லும் இந்துக்களுக்கும் அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என மடாதிபதிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
சிதம்பரம் உலக சைவ மாநாட்டு ஏற்பாட்டிற்கு வந்துள்ள பேரூர் ஆதினம் மருதாச்சல அடிகள், திருப்பனந்தாள் ஆதினம் சுந்தரமூர்த்தி தம்பிரான் ஆகியோர் கூறியதாவது:
சைவ சமய தொன்மை, பெருமைகளை யாவரும் உணர வேண்டும் என்பதற்காகவும், சைவ சமய ஆர்வத்தை தூண்டும் வகையிலும் உலக சைவ பேரவை மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இதனால் உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழர்களுக்கு சைவம் பற்றிய புத்துணர்ச்சியும், சமய கருத்துக்களை பரிமாற வாய்ப்பு ஏற்படும். திருமுறைகள் கண்டெடுத்த சிதம்பரத்தில் மாநாடு நடத்துவது சிறப்பு. கோவிலுக்கு செல்வது மட்டும் போதாது; சைவ சமய தத்துவங்களை உணர்ந்து கடைபிடிக்க வேண்டும். உலகம் முழுவதும் மொழி தெரியாதவர்கள் கூட திருமந்திரத்தை படிக்க விரும்புகின்றனர். அதையொட்டி திருமந்திரத்தில் 300 பாடல்கள் அடங்கிய 10 பகுதிகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கடந்த 17ம் தேதி சென்னை யில் வெளியிடப்பட்டுள்ளது. இஸ்லாமிய மக்களுக்கு வக்பு வாரியம் இருப்பதுபோன்று, இந்து கோவில்களை துறவிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து நிர்வகிக்க வேண்டும். இஸ்லாமியர்கள் "ஹஜ்' யாத்திரை செல்வதற்கு நிதியுதவி வழங்க ஆண்டுக்கு 230 கோடி ரூபாய் அரசு செலவிடுகிறது. அதே போன்று இந்துக்கள் கைலாயம் செல்வதற்கும் நிதியுதவி வழங்க வேண்டும். சீன நாட்டின் கெடுபிடியால் ஒவ் வொருவருக்கும் ஒரு லட்சம் வரை செலவாகிறது. எனவே அரசு நிதியுதவி வழங்க முன்வர வேண்டும். கர்நாடகா, குஜராத் மாநிலங்களில் கைலாய யாத்திரை செல்பவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. அதை அனைத்து மாநிலத்திலும் பின்பற்றி வழங்க வேண்டும்.
இன்றைய சூழ்நிலையில் மதமாற்றம் அதிக அளவில் நடந்து வருகிறது. அதை தடுக்க ஆதினங்கள் மேற்கொண்ட தீவிர முயற்சியின் விளைவாக ஏற்கனவே மதமாற்றம் செய்யப்பட்ட 12ஆயிரத்திற்கும் அதிகமானோர் தாய் மதமான இந்து மதத்திற்கு திரும்பி வந்துள்ளனர். இந்தியாவில் உள்ள 600 மாவட்டங்களில் 15 மாவட்டங்களில் பெரும்பான்மை சமுதாயமான இந்துக்கள் 40 சதவீதமாக குறைந்துள்ளனர். இதே நிலை நீடித்தால் 2050ம் ஆண்டில் இந்தியாவில் இந்துக்கள் சிறுபான்மை சமுதாயமாக மாறிவிடும் நிலை உள்ளது. இந்த நிலை மாற்றப் பட வேண்டும். இவ்வாறு ஆதினங்கள் கூறினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக