கடலூர்:
மாவட்டத்தில் போலி ரேஷன் கார்டுகள் நீக்கம் என்ற பெயரில் தவறான கணக்கெடுப்பால் உண்மையான கார்டுதாரர்கள் மிகவும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். வியாபாரிகள் வசம் உள்ள நூற்றுக் கணக்கான கார்டுகளை ஒழிக்க வருவாய்த் துறையினர் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க் கின்றனர்.
மாவட்டத்தில் 1,116 முழு நேரம் மற்றும் 193 பகுதி நேர ரேஷன் கடைகளும் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் 6 லட் சத்து 47 ஆயிரத்து 75 கார்டுதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு, மைதா, ரவை, மண்ணெண்ணெய் உள் ளிட்டவைகள் வழங்கப்படுகிறது. முன்பெல்லாம் நடுத்தர மக்கள் சர்க்கரை, மண்ணெண்ணெய் மட்டுமே வாங்கி வந்தனர். தற்போது விலைவாசி உயர்வின் காரணமாக நடுத் தர மக்கள் முதல் சாமானிய மக்கள் வரை ரேஷன் கடைகளையே நம்பியுள்ளனர். இதனால் புதிய ரேஷன் கார்டுகள் வாங்குவோரின் விண்ணப்பங்களும் அதிகரித்துள்ளன. ஆனால் சமீப காலமாக இலவச கலர் "டிவி', காஸ் இணைப்பு உள்ளிட்ட அரசு வழங்கும் சலுகைகளை பெற ஒரே வீட்டில் இரண்டுக்கும் மேற்பட்ட கார்டுகள் பெற்றுள்ளனர். ஏற்கனவே மண்ணெண்ணெய், சர்க்கரைக்காக வியாபாரிகள் அதிகளவில் போலி ரேஷன் கார்டுகள் வைத்துள்ள நிலையில் இலவச பொருட்களை பெற பொதுமக்களும் தாய், தந்தைக்கு ஒரு கார்டு, பிள்ளைகளுக்கு ஒரு கார்டு என தனித்தனியாக விண்ணப்பித்து பெற் றுள்ளனர். ஆரம்பத்திலேயே தீவிரமாக விசாரணை செய்து கார்டு வினியோகத்தை நிறுத்த வேண் டிய வருவாய்த் துறையினர் முழுமையாக விசாரணை செய்யாததன் விளைவாக மாவட்டத்தில் போலி கார்டுகள் லட்சக்கணக்கில் உருவாகியுள்ளன.
கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன் போலி கார்டுகளை நீக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதில் அதிகளவில் குளறுபடிகள் ஏற்பட்டது. இதனால் தேர்தல் முடிவுகள் பாதிக்கும் என்பதை அறிந்த அரசு, போலி ரேஷன் கார்டுகள் ஒழிப்பு திட்டத்தை நிறுத்தி வைத்தது. மேலும் ஏற்கனவே நீக்கிய கார்டுகளுக்கு பொருட்கள் வழங்க உத்தரவிட்டது. தேர்தல் முடிந்த பின்னர் போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலால், பல ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்து வந்தவர் கள் கார்டுகளை கூட நீக் கம் செய்யப்பட்டது. இதனால் மக்கள் ஆவேசமடைந்தனர். அதனைத் தொடர்ந்து மேல்முறையீடு செய்ய அவகாசம் அளிக்கப்பட்டது. பொதுமக்கள் தங்களது அன்றாட பணியை விட்டுவிட்டு, ரேஷன் கடைக் கும், தாலுகா அலுவலகத்திற்குமாக அலைந்து ரேஷன் கார்டை புதுப் பித்து பொருட்களை வாங்கி வந்தனர். இந்நிலையில் மாவட் டத்தில் உள்ள 1,309 ரேஷன்கடைகளிலும் நீக்கப்பட்டியில் கடந்த 1ம் தேதி ஒட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு கடையிலும் போலி ரேஷன்கார்டுகள் என்ற பெயரில் 25 முதல் 30 சதவீதம் வரை நீக்கப்பட் டுள்ளன. உதாரணமாக சிதம்பரத்தில் ஒரு கடையில் 1,346 கார்டுகளில் 298ம், மற் றொரு கடையில் 1,468க்கு 455 கார்டுகளும் நீக்கப்பட் டுள்ளன. கடலூரில் 1,265க்கு 369ம், 1,550க்கு 337ம், நெல்லிக்குப்பத்தில் 1,483க்கு 210ம், காட்டுமன் னார்கோவிலில் 9,027க்கு 1,279 கார்டுகள் நீக்கப்பட் டுள்ளன. இந்த கார்டு நீக் கத்தில் பெரும்பாலும் உண்மையான கார்டுதாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் வீடு தேடி வந்து விசாரித்த அதிகாரிகள் மேற்கண்ட முகவரியில் வசிப்பதாக அறிக்கை கொடுத்த பலரது ரேஷன் கார்டுகளும் நீக்கப் பட்டுள்ளது.
இவர்கள் நாள்தோறும் தாலுகா அலுவலகமும், வீடுமாக அலைந்து கொண்டிருப்பதே வாடிக் கையாக கொண்டுள்ளனர். அவ்வாறு தாலுகா அலுவலகம் சென்றாலும் முறையான பதில் கிடைக்காததால் ஆத்திரத்தில் தகராறில் ஈடுபடுகின்றனர். உண்மையான ரேஷன் கார்டுகளை உட்கார்ந்திருந்த இடத்தில் காலி செய் யும் அதிகாரிகள், போலி கார்டுகள் வைத்திருக்கும் வியாபாரிகள் மண்ணெண் ணெய்க்காகவும், அரிசிக்காகவும் அதிகாரிகளின் ஆசியுடன் ஒரே நபர் நூற் றுக்கும் மேற்பட்ட போலி கார்டுகள் வைத்திருப்பதை கண்டுகொள்ளாதது ஏனோ தெரியவில்லை.
முறையான ஆய்வு இல்லை வருவாய் துறையினர் ஒப்புதல்: ரேஷன் கார்டு நீக்கத்தில் சாமானிய மக்கள் மட்டுமின்றி பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் குடியிருக்கும் தாலுகா அலுவலக பணியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட பொது வினியோக திட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் ஒருவரின் கார்டும் நீக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் கடந்தாண்டு இவரது கார்டு நீக்கப் பட் டது. மறு விண்ணப்பம் கொடுத்து புதுப்பிக்கப் பட்டது. கடந்த மாதம் வரை பொருட்கள் வாங்கியுள்ள நிலையில் இவரது கார்டு இந்த மாதம் நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த் துறை ஊழியர்களே முறையான ஆய்வு இல்லை என்பதை வேதனையுடன் ஒப்புக் கொள்கின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக